அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தக்கூடிய வாகன ஓட்டிகளின் சுங்க கட்டணத்தை மிச்சப்படுத்தும் வகையில் மத்திய அரசு FASTag annual pass என்ற ஓராண்டு காலத்திற்கான ஃபாஸ்டேக் பாஸை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
ஃபாஸ்டேக்: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைத்து நிர்வாகம் செய்யக்கூடிய நிறுவனங்கள் அதற்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்க கட்டணத்தை வசூல் செய்கின்றன. இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் தவிர்த்து கார் ,பேருந்து ,லாரி மற்றும் பிற சரக்கு வாகனங்கள் ,வேன் , டாக்ஸி உள்ளிட்டவை தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது அதற்கான சுங்க கட்டணத்தை செலுத்தியாக வேண்டும்.

ஓராண்டுக்கான பாஸ்: தற்போது பாஸ்ட்டேக் முறையில் சுங்க கட்டணமானது வசூல் செய்யப்பட்டு வருகிறது. தனியார் வாகன உரிமையாளர்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது ஆண்டுதோறும் சுங்க கட்டணத்திற்காகவே அதிகம் செலவிட வேண்டி இருக்கிறது . அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் தனியார் வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து பெரிய அளவிலான தொகையை சேமிக்கும் விதமாக மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் FASTag annual pass என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
தனியார் வாகனங்களுக்கு அறிமுகம்: இதன்படி தனியார் வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களுக்கென ஆண்டுக்கான பாஸ்டேக் பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இதன்படி தனியார் வாகன உரிமையாளர்கள் 3,000 ரூபாயை செலுத்தி இந்த ஓராண்டு காலத்திற்கான பாஸ்ட் டேக் பாஸை எடுத்துக் கொண்டால் போதும் அதனை பயன்படுத்திக்கொண்டு நாடு முழுவதும் இருக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேக்களில் அடுத்த ஓர் ஆண்டுக்கு எந்த சுங்க கட்டணமும் செலுத்தாமல் பயணம் செய்ய முடியும்.

எப்படி செயல்படும்: ஒருமுறை 3 ,000 ரூபாய் செலுத்தி இந்த பாஸை வாங்க வேண்டும் இதனை எடுத்து அடுத்த ஓராண்டு காலத்திற்கு அல்லது 200 பயணங்கள் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். இதில் எது முதலில் முடிகிறதோ அதன்படி உங்களுடைய பாஸ் காலாவதி ஆகிவிடும். ஒருவேளை இந்த பாஸை பயன்படுத்தி நீங்கள் ஓராண்டு முடிவதற்கு 200 முறை தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளை கடந்து விட்டீர்கள் என்றால் மீண்டும் ஒருமுறை 3 ,000 ரூபாய் செலுத்தி பாஸ் வாங்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம்: பொதுமக்கள் ராஜ்மார்க் யாத்ரா என்ற செயலி மூலம் அல்லது NHAIஇன் அதிகாரப்பூர்வ இணைதளத்திற்கு சென்று வாகன பதிவு எண், ஃபாஸ்டேக் ஐடி உள்ளிட்டவற்றை வழங்கி விண்ணப்பம் செய்து 3,000 ரூபாய் பாஸ் பெற முடியும். இந்த பாஸ் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேக்களில் மட்டுமே பொருந்தும் மாநில நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது வழக்கமான சுங்க கட்டணம் செலுத்தியாக வேண்டும்.
யாருக்கு கிடைக்கும்: வணிக ரீதியில் பயன்படுத்தாத கார், ஜீப், வேன்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்த பாஸ் கிடைக்கும். டாக்ஸி, பேருந்து மற்றும் லாரிகளுக்கு இது பொருந்தாது. இந்த புதிய பாஸ்டேக் பாஸ் மூலம் ஒரு நபரால் எவ்வளவு தொகையை மிச்சப்படுத்த வேண்டும் என பார்க்கலாம்.
எவ்வளவு சேமிப்பு: சராசரியாக ஒரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க கூடிய ஒரு தனியார் வாகனம் 50 ரூபாயை சுங்க கட்டணமாக செலுத்த வேண்டும் ஒரு ஆண்டுக்கு 200 முறை கடந்தால் 10,000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதுவே இந்த 3000 ரூபாய்க்கு பாஸ் வாங்கி விட்டால் உங்களால் ஆண்டுக்கு 7,000 ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும்.
எப்படி பெறுவது?: Rajmargyatra செயலி அல்லது NHAIஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொலைபேசி எண், வாகன பதிவு எண் மற்றும் ஃபாஸ்டேக் ஐடி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். 3,000 ரூபாய் பணம் செலுத்தப்பட்டவுடன் இந்த பாஸ் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட ஃபாஸ்ட் டேக் கணக்கில் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications