Stock Market-ல் முதலீடு செய்யும் முன்.. EBITDA - EBITDA வரம்புக்கும் வித்தியாசத்தை தெரிஞ்சுகோங்க?

EBITDA (ஈபிட்டா) என்பது வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன் நீக்கத்துக்கு முந்தைய வருவாய். இது, ஒரு நிறுவனத்தின் நிதி மற்றும் கணக்கு தாக்கத்தை தவிர்த்து முக்கிய செயல்பாட்டு லாபத்தன்மையை அளவிட உதவும். EBITDAஐ நாம் எளிதாக கணக்கிடலாம். நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானத்துடன் தேய்மானம் மற்றும் கடன்தீர்வு செலவுகளை சேர்ப்பதன் மூலம் கணக்கிடலாம். மேலும் நிறுவனத்தின் நிகர வருமானத்துடன் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தீர்வு செலவுகளை சேர்ப்பதன் மூலமும் EBITDA கணக்கிடலாம்.

முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் நிறுவனங்கள் லாபத்தை ஒப்பிட்டு ஒரு நிறுவனத்தின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு EBITDAஐ பயன்படுத்துகின்றனர். ஒரு வணிகத்தின் செயல்திறன்,லாபம், மதிப்பு மற்றும் கடன் வாங்கும் திறன் ஆகியவற்றை காட்டும் முக்கிய குறிகாட்டியாகும். நிறுவனத்தின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு வங்கிகள் EBITDAஐ பயன்படுத்துகின்றன. நிறுவனம் அதன் முக்கிய வணிக நடவடிக்கைகளிலிருந்து வருமானத்தை ஈட்ட முடியுமா என்பதை இது பகுப்பாய்வு செய்கிறது.

Stock Market-ல் முதலீடு செய்யும் முன்.. EBITDA - EBITDA வரம்புக்கும் வித்தியாசத்தை தெரிஞ்சுகோங்க?

EBITDA வரம்பு என்பது ஒரு நிறுவனத்தின் லாபத்தை அளவிடும் ஒரு நிதி விகிதமாகும். இது EBITDAஐ வருவாயின் சதவீதமாக வெளிப்படுத்துகிறது. ஒரு நிறுவனம் வட்டி, வரிகள்,தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கம் ஆகியவற்றிற்கு முன் எவ்வளவு சம்பாதிக்கிறது என்பதை அதன் வருவாயின் சதவீதமாக EBITDA வரம்பு காட்டுகிறது. ஒரு நிறுவனத்தின் EBITDAஐ அதன் மொத்த வருவாயால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. அதாவது, EBITDA வரம்பு = (EBITDA / மொத்த வருவாய்) x 100.

EBITDA வரம்பு அதிகாக இருந்தால் நிறுவனம் அதிக லாபம் ஈட்டுகிறது என்றும், அதேசமயம் அது குறைவாக இருந்தால் நிறுவனம் குறைந்த லாபம் ஈட்டுகிறது என்பதை குறிக்கிறது. ஒரே துறையில் உள்ள நிறுவனங்களை ஒப்பிடுவதற்கு EBITDA வரம்பை பயன்படுத்தலாம். மேலும் நிறுவனத்தின் எதிர்கால லாபத்தை மதிப்பிடுவதற்கும் இதனை பயன்படுத்தலாம். அதேசமயம், EBITDA வரம்பு ஒரு நிறுவனத்தின் மூலதன அமைப்பு, ரொக்கம் அல்லாத செலவுகள் மற்றும் வருமான வரிகளின் தாக்கத்தை கருத்தில் கொள்ளாததால் அது தவறாக வழிநடத்தும் என்ற குறைபாடு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+