ஆண்ட்ராய்டு பயனர்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் பயனர் விவரங்களை திருடி விற்பனை செய்யும் இலக்குடன் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட மால்வேர் (Malware) மற்றும் ஆட்வேர் (Adware) தொடர்ந்து அதிகரித்து வருவதாக மால்வேர்பைட்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் உங்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை தேவையற்ற பாப்-அப் (Pop-up), உங்களுக்கு தெரியாமலேயே அழைப்புகள் அல்லது குறுந்தகவல்கள் பதிவு, அதிகளவு டேட்டா பயன்பாடு, வேகமாக பேட்டரி தீர்ந்து போவது, ஸ்மார்ட்போன் செயல்திறன் குறைதல், அறிமுகமில்லாத செயலிகள் இன்ஸ்டால், அழைப்புகள் - குறுந்தகவல்கள் நிறுத்தப்படுவது போன்றவற்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும்.
ஸ்மார்ட்போன் நடவடிக்கைகள் மற்றும் செயலிகள் குறித்து கூடுதல் கவனமாக இருப்பின் உங்களது ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுவதில் இருந்து எளிதில் தற்காத்துக் கொள்ள முடியும். மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஏதேனும் செயல்பாடுகளை எதிர்கொள்ளும் பட்சத்தில் உங்களது ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த நிலையில் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
அறிமுகமில்லா செயலிகளை அழித்தல்
ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளை முழுமையாக ஆய்வு செய்து, நீங்கள் அறிந்திராதவற்றை உடனே அன்-இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
ஆண்டி-மால்வேர் செயலிகள்
நம்பத்தகுந்த ஆண்டி-மால்வேர் செயலிகளை இயக்கலாம். இவை மால்வேர்களை கண்டறிந்து அழிக்கும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும்.
ஸ்மார்ட்போன் ரீசெட்
ஸ்மார்ட்போனில் இருக்கும் மால்வேரை நீக்க ஸ்மார்ட்போனை ரீசெட் செய்வது எளிய வழிமுறை.
பாஸ்வேர்டு மாற்றுதல்:
உங்களது ஸ்மார்ட்போனில் இணைக்கப்பட்டு இருக்கும் அக்கவுண்ட்களின் பாஸ்வேர்டுகளை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஹேக்கர் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடுவதை தடுக்க முடியும். குறிப்பாக வங்கி, கிரெடிட் கார்டு தரவுகளை நீக்குங்கள்.
தகவல் தெரிவித்தல்
உங்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டு இருப்பதை காண்டாக்ட்களுக்கு அறிவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு வரும் சந்தேகத்திற்குரிய குறுந்தகவல்களை க்ளிக் செய்யாமல் இருக்க சொல்ல முடியும்.
ஸ்மார்ட்போன் அன்ரூட் செய்தல்
ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு வெர்ஷனை ஸ்மார்ட்போனில் வைத்திருக்கும் பட்சத்தில், அதனை சூப்பர் ஆப் மூலம் அன்ரூட் செய்ய வேண்டும்.
டெலிகாம் நிறுவனங்கள்
உங்களுக்கு அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் வருவது நிறுத்தப்பட்டு இருந்தால், உடனே இது பற்றிய தகவலை நெட்வொர்க் ஆபரேட்டரிடம் தெரிவித்து பிரச்சினையை சரி செய்து கொள்ளுங்கள்.
பொது வைஃபை நெட்வொர்க்
இவைதவிர ஸ்மார்ட்போன்களை பொது வைஃபை நெட்வொர்க்கில் இணைப்பதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். மேலும் தேவையற்ற செயலிகளை தொடாமல் இருப்பது, உங்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படாமல் இருப்பதை தடுக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications