மக்கள் தங்கள் பணத்தை பல்வேறு வகைகளில் சேமிக்கவும் முதலீடு செய்யவும் பயன்படுத்துகின்றனர். தங்கள் பணத்தை முதலீடு செய்ய, பெரும்பாலான மக்கள் ஃபிக்சட் டெபாசிட்களில் மட்டுமே முதலீடு செய்கிறார்கள். நீங்களும் உங்கள் பணத்தை எஃப்டியில் முதலீடு செய்து, திடீரென்று உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், என்ன செய்வீர்கள்? நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கு திடீரென எப்போது வேண்டுமானாலும் பணம் தேவைப்படலாம். இத்தகைய கடினமான காலங்களில், உங்கள் எஃப்டி முன்கூட்டியே மூடுவீர்களா? அப்படி செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?
உங்களுக்கு பணம் தேவைப்படும்போது உங்கள் எஃப்டி-ஐ உடைக்க நினைத்தால், இது உங்களுக்கு நிறைய நஷ்டத்தை ஏற்படுத்தும். அத்துடன் உங்கள் எஃப்டியை முன்கூட்டியே திரும்பபெறுதல் நிலையான வட்டி விகிதத்தை விட குறைவான வட்டியை மட்டுமே பெறுவீர்கள். நீங்கள் எஃப்டியை மூடும் காலத்தைப் பொறுத்து, இந்த வட்டி விகிதம் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். இது தவிர, பல வங்கிகள் எஃப்டியை முன்கூட்டியே முடிப்பதற்கான கட்டணத்தையும் வசூலிக்கின்றன. எவ்வளவு சீக்கிரம் எஃப்டியை மூடப்படுகிறதோ அவ்வளவு குறைவான வட்டி உங்களுக்கு கிடைக்கும்.

இதற்கு தீர்வாக பணம் தேவைப்படும் போதெல்லாம் வெறும் தனிநபர் கடன் வாங்க நினைப்பதை தவிர்த்து, எஃப்டியை முன்கூட்டியே மூடாமல் வைத்திருந்து அதன்மூலம் எஃப்டிக்கு எதிராக கடன் வாங்கலாம். நீங்கள் எஃப்டிக்கு எதிராக கடன் வாங்கினால், சாதாரண கடனை விட குறைந்த விலையில் கடன் கிடைக்கும். எஃப்டி மீதான கடன்களுக்கான வட்டி விகிதங்கள் எஃப்டி இல் கிடைக்கும் வட்டி விகிதங்களை விட 1.5 முதல் 2 சதவீதம் மட்டுமே அதிகம். இந்த சூழ்நிலையில், நீங்கள் குறைந்த வட்டியில் கடனைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் எஃப்டியும் பாதுகாப்பாக இருக்கும்.
நாட்டில் பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் எஃப்டிகளுக்கு எதிராக கிரெடிட் கார்டுகள் மற்றும் தனி நபர் கடன்களை வழங்குகின்றன. அதேபோல், ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட என்பிஎஃப்சிகளும் எஃப்டிகளுக்கு எதிராக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். அத்துடன் எஃப்டிகளுக்கு எதிராக அதிக வட்டியை வழங்குகின்றன. இதன் மூலம், உங்களுக்கு வங்கிகள் கொடுக்கும் கடன்களை பெற்று சரிவர திருப்பி செலுத்தி வந்தால் உங்கள் எஃப்டி வங்கியில் பாதுகாப்பாக இருக்கும். அத்துடன் அதற்கான வட்டி ஆனது உங்களுக்கு வந்து கொண்டிருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications