Whatapp-இல் வந்துவிட்டது Bill Payments வசதி..!! எப்படி பயன்படுத்துவது? விரிவான வழிகாட்டி..!!

வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் புதிதாக பில் பேமெண்ட்ஸ் (Bill Payments) என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாம் நம்முடைய வாட்ஸ் அப் வாயிலாகவே பல்வேறு சேவைகளுக்கு கட்டணம் செலுத்தலாம் மாதாந்திர பில்களை கட்டலாம். வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறாமல் செயலியிலேயே இதனை மேற்கொள்ள முடியும்.

இந்தியாவில் பாரத் கனெக்ட் நெட்வொர்க் எனப்படும் மத்திய பில் கட்டண கட்டமைப்பின் (BBPS) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் இணைந்து தான் வாட்ஸ் அப் இந்த கட்டணம் செலுத்தும் சேவையை வழங்குகிறது. கிட்டதட்ட 30 பிரிவுகளின் கீழ் 22,722 நிறுவனங்கள் வாட்ஸ் அப்பில் இந்Fத வசதியை இணைத்துள்ளன. எனவே மின்சார கட்டணம், சமையல் கேஸ் கட்டணம், குடிநீர் வரி, FASTag ரீசார்ஜ், இன்சூரன்ஸ் பிரீமியம், கிரெடிட் கார்டு பில் மற்றும் கடன் தவணைகள் போன்ற பல்வேறு கட்டணங்களை இதன் மூலம் செலுத்தலாம்.

Whatapp-இல் வந்துவிட்டது Bill Payments வசதி..!! எப்படி பயன்படுத்துவது? விரிவான வழிகாட்டி..!!

பயனர்கள் கட்டணம் செலுத்த வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறி ஜிபே, போன்பே போன்ற வெவ்வேறு செயலிகளை பயன்படுத்த வேண்டிய தேவை இனி இல்லை. வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்புவதை அனுப்புவது போல எளிதாக பில்களை செலுத்தலாம். அதுமட்டுமில்லாமல் எந்த தேதி டிவி டிடிஹெச் ரீசார்ஜ் செய்ய வேண்டும் , போன் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற தகவலும் காட்டும்.

Also Read

நாம் தூங்கி எழுந்த உடனே வாட்ஸ் அப்பில் என்ன வந்திருக்கிறது என்று தானே பார்க்கிறோம் எனவே இந்த கட்டண சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என சொல்லப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் பில் தொகையை சரிபார்த்த பின், பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான கட்டண முறையை தேர்ந்தெடுக்கலாம். இது யூபிஐ, டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை கொண்டு கட்டணம் செலுத்த அனுமதிக்கிறது.

Also Read

இந்த அம்சம் இந்தியாவில் படிப்படியாக வாட்ஸ் அப் பயனர்களுக்கு கொண்டு வரப்படுகிறது. வரும் வாரங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் அனைவருக்கும் இது முழுமையாக கிடைக்கும் என சொல்லப்படுகிறது. வாட்ஸ் அப்பில் எப்படி இந்த பேமெண்ட் சேவையை பயன்படுத்துவது என பார்கலாம்.

· உங்கள் போனில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்யவும்

· அதில் வாட்ஸ்அப் ஹோம் ஸ்கிரீனின் மேல் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள ₹ (Rupee) ஐகானை கிளிக் செய்யவும்

· இங்கே நீங்கள் செலுத்த வேண்டிய பில் வகையையும் (Category), அதற்குரிய பில் வழங்குநரையும் (Biller) தேர்ந்தெடுக்க வேண்டும்

· அதில் உங்கள் விவரங்களை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்

· பின்னர் அதில் எவ்வளவு பில் தொகை என காட்டும் அதனை சரிபார்க்க வேண்டும்

· இதன் பின் UPI, Debit Card, அல்லது Credit Card ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

· அதில் பரிவர்த்தனையை முடிக்க Confirm என கொடுத்தால் போதும் உங்கள் பில் செலுத்தப்பட்டு விடும்

· ஒரு முறை நீங்கள் UPI, Debit Card, அல்லது Credit Card பயன்படுத்தினால் அந்த விவரம் சேமிக்கப்பட்டு அடுத்தமுறை பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+