உங்கள் வாழ்க்கையில் ஒரு பாதுகாப்பு வேண்டுமென்றால் அதை ஒரு இன்ஸ்சூரன்ஸ் பாலிசி தான் சிறப்பாகச் செய்ய முடியும். வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படுகின்ற சம்பவங்களால் உண்டாகும் நிதிச்சுமையை இன்சூரன்ஸ் ஈடுகட்டுகிறது. திடீரென ஏற்படக்கூடிய மருத்துவச் செலவுகள், வேலை இழப்பு போன்ற அபாயங்களின் போது ஆபத்பாந்தவனாக வந்து இன்ஸ்சூரன்ஸ் உதவுகிறது.
கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சேமிப்புகள் கரையாமல் பார்த்துக் கொள்கின்றது.
சுருக்கமாக இன்சூரன்ஸ் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அசம்பாவிதங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து காப்பாற்றி இழப்பீட்டையும் தருகிறது.

கார் இன்சூரன்ஸை எடுத்துக் கொண்டால் விபத்து, ரிப்பேர் செலவுகளை இந்த பாலிசி கவரேஜ் செய்கிறது. அதேபோல் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களது மருத்துவச் செலவுகளைப் பார்த்துக் கொள்கிறது. எதிர்பாராமல் நிகழும் தருணங்களால் உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடாமல் இன்சூரன்ஸ் உங்களைப் பாதுகாக்கிறது.
நிதி பாதுகாப்பு தருவது மட்டுமல்லாமல், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் சமயத்தில் இன்சூரன்ஸ் உங்களுக்கு தக்க உதவியைத் தருகிறது. வீட்டுக்கடன்களை எடுத்துக் கொண்டோமானால் இயற்கைப் பேரிடர்களின்போது ஏற்படக்கூடிய இழப்புகளை ஈடுகட்ட மிகவும் உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் இன்சூரன்ஸ் என்பது உங்கள் விருப்பத் தேர்வு அல்ல, இது கட்டாயமாகும். தேர்டு பார்ட்டி லயபிலிட்டி இன்சூரன்ஸ் அல்லது கட்டாய பிசினஸ் கவர்களான பப்ளிக் லயபிலிட்டி மற்றும் வொர்க்மேன்ஸ் காம்பன்சேஷன் இன்சூரன்ஸ் போன்றவை. இன்சூரன்ஸ் செய்யாவிட்டால் அபராதங்களுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடும்.
வீடுகள் மற்றும் உபகரணஙகள் முக்கியமான முதலீடுகள் ஆகும். இன்சூரன்ஸ் உங்களது விலை உயர்ந்த சொத்துக்களை பாதுகாக்கிறது. அது இல்லாமல் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படும்போது நீங்கள் உதவி கிடைக்காமல் அல்லாட வேண்டியிருக்கும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது உண்மையிலேயே நல்லதொரு காப்பீடாகும். கிரிட்டிகல் இல்னெஸ் போன்ற உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலைமைகள் ஏற்பட்டால் வரக்கூடிய பெரும் செலவுகள் இதனால் தவிர்க்கப்படும். ஆண்டுக்கு சிறிய தொகையை பிரீமியமாகச் செலுத்தி வந்தால் உங்களது ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் உங்களையும் கடும் கடன் சுமையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே கட்டாயம் ஏதாவதொரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.
வீட்டு இன்சூரன்ஸ் இருந்தால் இயற்கை பேரிடர்கள், திருட்டு சம்பவங்களின்போது உங்களது சொத்து இழப்பை நஷ்ட ஈடுகள் மூலம் ஈடுகட்டும். எனவே இன்சூரன்ஸ் என்பது உங்களது கூடுதல் பாதுகாப்பாகும். அபாயங்கள் மற்றும் இழப்புகளின்போது உங்களைப் பாதுகாக்கும்.
வியாபாரத்தில் ஏற்படக்கூடிய நஷ்டங்களின்போதும் நல்ல பலனைத் தரும். இதன்மூலம் எப்படிப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் அதை சமாளிக்கக் கூடிய திறனை உங்களுக்கு இன்சூரன்ஸ் தருகிறது. இன்றைய காலகட்டத்தில் இன்சூரன்ஸ் மிகச் சிறந்த பாதுகாப்பு கேடயமாக விளங்குகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications