நம் நாட்டில் வாகனங்களுக்கு காப்பீடு எடுப்பது கட்டாயம். புது வாகனம் எடுக்கும் போது எல்லோரும் காப்பீடு எடுத்து விடுவார்கள். ஆனால் காப்பீடு காலாவதியான பிறகு அதனை புதுப்பிக்கும்போது பலரும் வேண்டாத செலவை செய்வது போல் செய்வார்கள்.
ஆனால் உங்களுக்கு நோ க்ளைம் போனஸ் (no claim bonus) பற்றி தெரிந்திருந்தால் நீங்கள் நிச்சயமாக சந்தோஷமாக வாகன காப்பீட்டு பாலிசை புதுப்பிப்பீர்கள். நோ க்ளைம் போனஸ் என்பது போனஸ் அல்லது வெகுமதி மாதிரி.

நீங்கள் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டும்போது, பாலிசி காலத்தில் எந்த விபத்துக்களிலும் சிக்க மாட்டீர்கள். இதனால் நீங்கள் எந்த இழப்பீடும் கோரமாட்டீர்கள். இதற்காக நோ க்ளைம் போனஸ் (NCB) பெறுவீர்கள். காப்பீட்டு நிறுவனங்கள் அடுத்த ஆண்டுக்கான பாலிசி பிரீமியத்தில் தள்ளுபடி வடிவில் போனஸ் வழங்குவார்கள்.
NCB ஒவ்வொரு ஆண்டும் கூடும். பல ஆண்டுகளாக நீங்கள் இழப்பீடு கோராமல் இருக்க முடிந்தால், உங்கள் கார் இன்ஸ்யூரன்ஸ் பிரீமியத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடியை பெறலாம். இது பெரிய சேமிப்பு மற்றும் குறைந்த செலவில் உங்கள் மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும்.
நோ க்ளைம் போனஸ் விகிதங்கள்
நோ க்ளைம் போனஸால் ஒவ்வொரு ஆண்டும் வாகன காப்பீட்டு பிரீமியத்தில் குறையும் தொகை.
1 ஆண்டு-20 சதவீதம்
2 ஆண்டுகள்-25 சதவீதம்
3 ஆண்டுகள்-35 சதவீதம்
4 ஆண்டுகள்-45 சதவீதம்
5 ஆண்டுகள்-50 சதவீதம்
காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஏன் NCB வழங்குகின்றன?
உங்கள் வாகன இன்ஸ்யூரன்ஸ் கவரேஜ் வழங்குவதன் மூலம் மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள் பெரிய ரிஸ்க் எடுக்கின்றன. நீங்கள் இழப்பீடு கோரினால் அந்நிறுவனங்கள் பெரிய தொகை உங்களுக்கு செலுத்த வேண்டியது இருக்கும். நீங்கள் பாதுகாப்பாக வண்டியை ஓட்டினால் இழப்பீடு கோரமாட்டீர்கள். இதனால் அவர்களுக்கு உங்களுடன் தொடர்புடைய ரிஸ்க் குறைகிறது. இதனால் அவர்கள் NCB வழங்குகிறார்கள். மேலும் பாலிசிதாரர்கள் சின்ன சின்ன க்ளைம்களை கேட்காமல் இருப்பதையும் NCB ஊக்குவிக்கிறது.
எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு இழப்பீடு ஏற்படும் சூழல் ஏற்பட்டால், அந்த இழப்பீடு தொகை குறைவானதாக மற்றும் நிர்வகிக்க கூடியதாக இருந்தால் அதை உங்கள் சொந்த பணத்தில் இருந்து செய்து கொள்ளுவது நல்லது. இதனால் க்ளைம் சரிபார்த்தல், பணம் செலுத்துதல் போன்ற விஷயங்களில் இருந்து காப்பீட்டு நிறுவனம் காப்பாற்றப்படுகிறது. பாலிசிதாரர்கள் அவ்வப்போது க்ளைம் செய்வதை தடுக்க காப்பீட்டு நிறுவனங்கள் NCB வழங்குகின்றன.
NCB ஆதாயங்கள்
பிரீமியம் குறைப்பு: வாகன பிரீமியத்தில் இருந்து நோ க்ளைம் போனஸை கழிப்பது உங்கள் வாகன இன்ஸ்யூரன்ஸ் பிரீமிய தொகையை குறைப்பதற்கான சிறந்த மற்றும் வசதியான வழிகளில் ஒன்றாகும். எனவே நல்ல ஓட்டுனராக இருங்கள், சிறிய இழப்பீடுகளை கேட்பதை தவிருங்கள். இது NCB உருவாக்குவதற்கும், பெறுவதற்கும் உதவும். மேலும் சில ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் வாகன காப்பீட்டு பாலிசியை பாதி விலையில் பெறலாம்.
மாற்றத்தக்கது: வாகன காப்பீட்டில் நோ க்ளைம் போனஸ் மாற்றத்தக்கது என்பது சிறப்பான விஷயம். NCB மூலம் டிரைவரை காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புக் கொள்வதால், நீங்கள் உங்கள் பழைய வாகனத்தை விற்று புதிய வாகனத்தை வாங்கினால், திரட்டப்பட்ட போனஸ் மாற்றப்படும். அதாவது நீங்கள் புதிய வாகனம் வாங்கும்போது, தள்ளுபடி விலையில் புதிய வாகன காப்பீட்டு பாலிசியை பெற உதவும். எனவே நீங்கள் உங்கள் பழைய வாகனத்தை விற்று புதிய வாகனத்தை பெறும்போது, உங்கள் வாகன இன்ஸ்யூரன்ஸ் பாலிசியும், திரட்டப்பட்ட நோ க்ளைம் போனஸூம் உங்கள் பெயருக்கு மாற்றப்படுவதை உறுதி செய்யவும்.
பணம் சேமிப்பு: குறைந்த கட்டணத்தில் வாகன காப்பீட்டு கவரேஜ் பெறுவதால் நீங்கள் பணத்தை சேமிக்கலாம். எனவே எப்போதும் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டுங்கள், நோ க்ளைம் போனஸை பெறுங்கள்.
NCB செல்லுபடியாகாது
3ம் நபர் வாகன காப்பீடு திட்டங்களில் நோ க்ளைம் போனஸ் செல்லுபடியாகாது. முழு காப்பீடு திட்டத்தில் மட்டுமே NCB பலன்களை பெற முடியும். நீங்கள் 3ம் நபர் வாகன காப்பீடு பெற விரும்பினால் NCB பலன்கள் இருக்காது.
பாலிசி புதுப்பிக்கப்படாவிட்டால் காலாவதி
உங்கள் வாகன காப்பீடு திட்டத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்கவில்லை என்றால், நோ க்ளைம் போனஸ் காலாவதியாகி பூஜ்ஜியமாகி விடும். எனவே பாலிசி காலம் முடிவதற்குள் புதுப்பிப்பது மிகவும் முக்கியம். உங்கள் பாலிசி காலாவதி விட்டால் உங்கள் மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் கவரேஜை இழப்பதோடு, திரட்டப்பட்ட நோ க்ளைம் போனஸையும் இழப்பீர்கள். எனவே சரியான நேரத்தில் வாகன இன்ஸ்யூரன்ஸ் பாலிசியை புதுப்பித்து NCB நன்மையை தக்கவைத்துக் கொள்ளுங்கள்.
ரைடர் மூலம் பாதுகாப்பு
ஒரு ரைடர் உதவியுடன் உங்கள் திரட்டப்பட்ட NCBஐ பாதுகாக்கலாம். ரைடர் என்பது கூடுதல் விலையில் கிடைக்கும் ஒரு கவரேஜ் ஆகும். நீங்கள் பாதுகாப்பு ரைடரை பெறலாம். க்ளைம் செய்த பிறகும் உங்கள் NCB அப்படியே இருக்கும். வெவ்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் NCB பாதுகாப்பு ரைடருடன் தொடர்புடைய வெவ்வேறு உட்பிரிவுகளை கொண்டுள்ளன. எனவே கவரேஜின் சரியான நோக்கத்தை புரிந்து கொள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படியுங்க.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications