ஏப்ரல் 1 முதல் மாத சம்பளதாரர்களுக்கு கிராஜுவிட்டியும் அதிகரிக்கலாம்.. எப்படி கணக்கிடுவது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இது ஊழியர்களின் சம்பளத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏனெனில் புதிய தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த புதிய தொழிலாளர் சட்டம் மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜுவிட்டி, Dearness Allowance, Travel Allowance மற்றும் House Rent Allowance அனைத்திலும் மாற்றம் ஏற்படும். குறிப்பாக இந்த புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜுவிட்டி என பலவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது? கிராஜுவிட்டி அதிகரிக்கும் என்று கூறுவது ஏன்? அப்படி அதிகரித்தால், அதனை எப்படி கணக்கிடுவது என்பதனை தான்.

அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்

அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்

புதிய தொழிலாளர் விதியின் படி, ஏப்ரல் 1 முதல் தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தில் பல மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் புதிய சட்டத்தின் படி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் பங்கு குறைந்தபட்சம் 50% ஆவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கிராஜுவிட்டி அதிகரிக்கும்

கிராஜுவிட்டி அதிகரிக்கும்

Industrial Relations Code, Code on Occupational Safety, Health and Working Conditions Code, Social Security Code and Code on Wages என்ற புதிய நான்கு விதிகளின் கீழ், நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தினை மறுசீரமைக்க வேண்டியிருக்கும். இந்த புதிய விதிகளின் படி அடிப்படை ஊழியம் அதிகரிக்கும். இதனால் கிராஜுவிட்டி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 கிராஜுவிட்டியும் அதிகரிக்கும்
 

கிராஜுவிட்டியும் அதிகரிக்கும்

ஆனால் புதிய சட்டத்தின் படி, அடிப்படை சம்பளம் என்பது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் Payment of Gratuity Act,1972 என்ற சட்டத்தின் கீழ், ஒவ்வொரு வருட சேவைக்கும் கடைசியாக கொடுக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தின் 15 நாட்களுக்கு சமமான தொகையாக நிறுவனங்கள் கிராஜுவிட்டியாக கொடுக்கும். ஆக அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் போது,கிராஜுவிட்டியும் அதிகரிக்கும்.

 கிராஜுவிட்டியை எப்படி கணக்கீடு செய்வது?

கிராஜுவிட்டியை எப்படி கணக்கீடு செய்வது?

கிராஜுவிட்டி = கடைசியாக பெற்ற சம்பளம்* பணிபுரிந்த ஆண்டுகள்*15/26 என்ற பார்முலா அடிப்படையில் தான் கணக்கிடப்படுகிறது. ஆக உங்களது அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது, உங்களது கிராஜுவிட்டியும் அதிகரிக்கும். உதாரணத்திற்கு ஒருவர் 30 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கடைசி மாதத்தில் 50,000 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என வைத்துக் கொள்வோம். அவருக்கான கிராஜுவிட்டி தொகை 50,000*30*15/26 என்பதை கணக்கிட்டால், 8,65,384 ரூபாய் வரும். ஆக இது தான் அவரின் கிராஜுவிட்டி தொகையாகும்.

நீண்ட நாள் பணிபுரியும் ஊழியர்களுக்கு நல்ல பலன்

நீண்ட நாள் பணிபுரியும் ஊழியர்களுக்கு நல்ல பலன்

ஆக அரசின் இந்த புதிய விதிகளின் படி, நீண்ட நாட்கள் பணிபுரியும் ஊழியர்களுக்கு நல்ல வாய்ப்பு எனலாம். அதிலும் புதிய தொழிலாளர் சட்டங்களில் கிராஜுவிட்டியிலும் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஏற்கனவே இருந்த விதிகளின் படி 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்கப்படும். ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தின் படி, 1 ஆண்டு பணிபுரிந்தாலே கிராஜுவிட்டி வழங்கப்படும். ஆக இதனால் பெரும்பாலான ஊழியர்கள் பயன்பெறுவர்.

சேமிப்பு தொகை அதிகரிக்கும்

சேமிப்பு தொகை அதிகரிக்கும்

புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின் உங்களது Take Home Salary குறைவாக இருக்கும். எனினும் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு அதிக தொகை மாற்றம் செய்யப்படும். ஏனெனில் புதிய விதிகளின் படி அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். ஆக உங்கது அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது, பிஎஃப் தொகை செலுத்துவதும் அதிகரிக்கும். இதனால் வருங்கால வைப்பு நிதிக்கு செல்லும் தொகை அதிகரிக்கும். இதனால் உங்கள் சேமிப்பு பெருகும். இதோடு கிராஜுவிட்டியும் அதிகரிக்கும் என்பதால், இது ஊழியர்களுக்கு மிக நல்ல விஷயமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

You may get higher gratuity after new labour rule, how to calculate it

new labour code updates.. You may get higher gratuity after new labour rule, how to calculate it
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X