சென்னை: பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் "Public Provident Fund" அதன் வட்டி விகிதங்கள் மற்றும் வரிச் சலுகைகள் காரணமாக சிறு சேமிப்பாளர்களுக்கு சிறந்தத் தேர்வாக உள்ளது. நீங்கள் PPF கணக்கில் ஆண்டுக்கு ரூ. 500 ரூபாய் அல்லது ரூ. 1.5 லட்சம் ரூபாய் வரை உங்கள் விருப்பத்திற்கேற்ப டெபாசிட் செய்யலாம்.
PPF திட்டத்தில் முதலீடு செய்யும்போது, வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் PPF திட்டத்தின் மூலம் பெறப்படும் எந்த வருமானத்துக்கும் வட்டி இல்லை. இது பலவற்றுடன் ஒப்பிடும்போது ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாக உள்ளது. மேலும், அவசர தேவைகளின் போது சிறந்த வட்டி விகிதத்தில் உங்கள் PPF இருப்புக்கு எதிராக கடன் பெற "Loan Against PPF" என்ற விருப்பத்தை வழங்குகிறது.

உங்கள் PPF கணக்கில் நீங்கள் முதலீடு செய்து கொண்டிருக்கும்போது, குறிப்பிட்ட அளவு திரும்பப் பெறுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. பொதுவாக PPF திட்டத்திற்கு 15 வருட லாக் இன் காலம் உண்டு. சரி உங்கள் PPF கணக்கில் உள்ள தொகை முதிர்ச்சி அடைந்தவுடன் அவற்றை என்ன செய்வது? என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா..
1. PPF கணக்கை மூடிவிட்டு முழு வருமானத்தையும் எடுக்கவும்: நீங்கள் PPF கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் PPF கணக்கை மூட முடியும். உங்கள் கணக்கு முதிர்ச்சியடைந்தவுடன், நீங்கள் முழு கார்பஸையும் திரும்பப் பெறலாம்.
இதைச் செய்ய, நீங்கள் PPF கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்தில் முழுமையாக நிரப்பப்பட்ட படிவம் C-ஐ சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு, கார்பஸ் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும், மேலும் PPF கணக்கு மூடப்படும். சில வங்கிகளில் படிவம் C-க்கு பதிலாக படிவம் 2 பயன்படுத்தப்படுகிறது.
2. புதிய டெபாசிட் செய்யாமல் கணக்கை நீட்டிக்கவும்: உங்கள் PPF கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகு, அதை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தில், நீங்கள் புதிய டெபாசிட்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பகுதியளவை திரும்பப் பெறலாம். மீதமுள்ள தொகை அடுத்த 5 ஆண்டுகளுக்கு வட்டியுடன் கிடைக்கும்.
3. புதிய டெபாசிட் உடன் கணக்கை நீட்டிக்கவும்: உங்கள் PPF கணக்கைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கும், முதிர்வுக் காலம் முடிவடைந்த பிறகு புதிய பங்களிப்புகளைச் செய்வதற்கும், ஆண்டு முடிவதற்குள், நீங்கள் PPF கணக்கு வைத்திருக்கும் அலுவலகத்திற்கு சென்று H படிவத்தைப் பூர்த்தி செய்து தெரிவிக்க வேண்டும். இந்தப் படிவத்தைச் சமர்ப்பிக்காமல் தொடர்ந்து டெபாசிட் செய்தால், உங்கள் டெபாசிட்கள் ஏற்றுக் கொள்ளப் படாது மற்றும் எந்த வட்டியும் வழங்கப்படாது. கூடுதலாக, PPF கணக்குகளில் 15 வருட காலத்திற்குப் பிறகு, கணக்கைத் திறந்து வைக்கத் தேர்வு செய்யாமல், அதில் செய்யப்படும் டெபாசிட்கள், வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின்படி வழங்கப்படும் வரிச் சலுகைகளுக்குத் தகுதிபெறாது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications