English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
முகப்பு  »  தங்கம் விலை  »  சென்னை

சென்னை தங்கம் விலை நிலவரம் (23rd August 2017)

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

சென்னை இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)

கிராம் 22 கேரட் தங்கம்
இன்று
22 கேரட் தங்கம்
நேற்று
22 கேரட் தங்கத்தின்
தினசரி விலை மாற்றம்
1 கிராம் 2,757 2,753 4
8 கிராம் 22,056 22,024 32
10 கிராம் 27,570 27,530 40
100 கிராம் 2,75,700 2,75,300 400

சென்னை இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)

கிராம் 24 கேரட் தங்கம்
இன்று
24 கேரட் தங்கம்
நேற்று
24 கேரட் தங்கத்தின்
தினசரி விலை மாற்றம்
1 கிராம் 3,007.60 3,003.20 4.40
8 கிராம் 24,060.80 24,025.60 35.20
10 கிராம் 30,076 30,032 44
100 கிராம் 3,00,760 3,00,320 440

கடந்த 10 நாட்களில் சென்னை தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)

தேதி 22 கேரட் 24 கேரட்
Aug 22, 2017 27,570 30,076
Aug 21, 2017 27,530 30,032
Aug 19, 2017 27,590 30,098
Aug 18, 2017 27,790 30,316
Aug 17, 2017 27,740 30,261
Aug 16, 2017 27,590 30,098
Aug 14, 2017 27,750 30,272
Aug 12, 2017 27,830 30,360
Aug 11, 2017 27,820 30,349
Aug 10, 2017 27,530 30,032

சென்னை தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

தங்க விலையின் வரலாறு சென்னை

  • தங்கம் விலை மாற்றங்கள் சென்னை, July 2017
  • தங்கம் விலை 22 கேரட் 24 கேரட்
    1 st July விலை Rs.27,580 Rs.30,087
    31st July விலை Rs.27,360 Rs.29,847
    உயர்ந்த விலை July Rs.27,590 on July 2 Rs.30,098 on July 2
    குறைவான விலை July Rs.26,270 on July 14 Rs.28,658 on July 14
    ஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling
    % மாற்றம் -0.80% -0.80%
  • தங்கம் விலை மாற்றங்கள் சென்னை, June 2017
  • தங்கம் விலை மாற்றங்கள் சென்னை, May 2017
  • தங்கம் விலை மாற்றங்கள் சென்னை, April 2017
  • தங்கம் விலை மாற்றங்கள் சென்னை, March 2017
  • தங்கம் விலை மாற்றங்கள் சென்னை, February 2017

 

இன்றைய தங்கம் விலை நிலவரத்தை ஏன் செக் செய்ய வேண்டும்..?

தங்கம் முன்பொரு காலத்தில் இருந்ததைப் போல ஒரு வியாபாரச் சரக்குப் பொருளாக இல்லை என்கிற எளிய காரணத்தினால் தங்கத்தின் இன்றைய விலையை பரிசோதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. உண்மையில், தங்கத்தின் விலைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இன்று எங்கேயும் இல்லை. எனவே விலைகளில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட மிகப் பெரிய இழப்புகளுக்கு வழிவகுக்கக் கூடும். எனவே இந்த விலை மதிப்பற்ற உலோகத்தை வாங்குவதற்கு முன்பு அதன் விலைகளை பரிசோதிக்க வேண்டியது முக்கியமாகும். மேலும் ஒவ்வொரு நகைக்கடையுடனும் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதும் முக்கியமானதாகும். சில நகரங்களில் தங்கத்தின் விலைகள் தங்க நகைக் கடைகளின் சங்கங்களால் நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப விலைகள் அறிவிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இருப்பினும், உள்ளூர் பொற்கொல்லர்களுக்கிடையே விலைகள் தாமதப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. இருந்தாலும், மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற நகைக் கடைகள் செய்கூலிக்கு அதிகக் கட்டணங்களை வசூலிக்கின்றன. எனவே இந்த எண்ணிக்கைகளில் நீங்கள் சற்று சோர்வடைகிறீர்கள். தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கான செய்கூலி குறிப்பிடத் தகுந்த அளவிற்கு மிக அதிகமாக இருப்பதாக நீங்கள் நம்பினால், நல்லதொரு விலைக்கு கிடைக்கும் இதர நகைக்கடைகளை பார்க்குமாறு நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம். எனவே, மிகப் பெரிய தொகைகளை செலுத்துவதை விட தங்கம் வாங்குவதற்கு முன்பு ஒப்பிட்டு பார்ப்பது எப்பொழுதும் சிறந்த யோசனையாக இருக்கும்.

 

தோலா தங்கம் என்பது என்ன..?

இந்தியாவில் தங்கம் வாங்குவதை விவரிக்க மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்று தோலா முறையில் எடையிடப்படுவதாகும். முதலீட்டாளர்கள் அல்லது நுகர்வோர் 1 தோலா தங்கத்தின் இன்றைய விலை ரூ. 25,000 என்று அடிக்கடி கூறுவதைக் கேட்கிறோம். இருப்பினும், இன்றைய நாட்களில் தோலா எடை முறைக்கு பதிலாக கிராம்கள் இடம் பெற்றுள்ளது. இது இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்கவும் விற்கவும் பெரும்பான்மையினரால் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது நமக்கு ஒரு கேள்வியை கொண்டு வருகிறது:

 

ஒரு தோலா தங்கம் என்பது எவ்வளவு?

இதற்கான பதில் மிக எளிமையானது: ஒரு தோலா தங்கம் என்பது இன்றைய 11.6 கிராம்கள். எனவே, நீங்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தை ஒரு கிலோ வாங்குவதாக இருந்தால், நீங்கள் சுமார் 85.7 தோலா தங்கத்தைக் காணலாம். எனவே, நீங்கள் இந்த விலை மதிப்பற்ற உலோகத்தின் 1 தோலா எடையின் விலை என்னவென்று தெரிந்துக் கொள்ள விரும்பினால், ஒரு கிராம் விலையான 26,000 த்தை 11.6 என்ற இலக்கத்தினால் பெருக்க வேண்டியது அவசியமாகும். அப்போது 1 தோலா தங்கத்தின் இறுதி விலை கிடைக்கும். இது நிச்சயமாக இந்தியாவில் உள்ள தினசரி தங்க விலை நிலவரங்களைச் சார்ந்து மாற்றமடையும்.

 

உங்கள் பழைய தங்க நகைகளை உருக்குவதில் உள்ள தொந்தரவுகள்

உங்கள் பழைய தங்க நகைகளை உருக்கி மேலும் புதிய நகைகளை செய்வதைப் பற்றி நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், அவ்வாறு செய்வது அவசியம் தானா என்று ஆராயுங்கள். அவசியமென்றால் மட்டுமே அவ்வாறு செய்யுங்கள், இல்லையென்றால் நீங்கள் நிறைய பணத்தை வீணாக்கி விடுவீர்கள். நீங்கள் ஏன் அப்படி என்று எங்களைக் கேட்டால், ஏன் என்று உங்களுக்கு சொல்வதற்கு எங்களிடம் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அனைத்திலும் முதலாவதாக, இந்த ஆபரணங்களில் உள்ள விலையுயர்ந்த கற்களை நீங்கள் என்ன செய்வீர்கள்? அவற்றை யார் மதிப்பிடுவார்கள்? இரண்டாவதாக, இதில் ஏராளமான கழிவுக் கட்டணங்கள் அடங்கியுள்ளன. உதாரணமாக, உங்கள் தங்கத்தின் மதிப்பில் 5 முதல் 10 சதவிகித நீங்கள் செலுத்திய செய்கூலி கட்டணங்களையும் மேலும் கழிவுக் கட்டணங்களையும் தங்கத்தின் மதிப்பீட்டில் இழக்க வேண்டியிருக்கும். இவை சிறிய இழப்புக்கள் அல்ல. இவற்றின் மொத்த அளவு உண்மையில் குறிப்பிடத்தக்கது. எனவே, நீங்கள் தங்கத்தை உருக்குவதில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் அவ்வாறு செய்தே தீர வேண்டுமென்றால் புகழ்பெற்ற நகைக்கடைகளில் உருக்குவதே புத்திசாலித்தனமானது.


இந்தியாவில் தங்கத்திற்கு இருக்கும் கிராக்கி எப்படிப்பட்டது..?

உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ள தகவலின் படி கடந்த ஆண்டு இந்தியாவில் தங்கத்திற்கான தேவை சற்று அடங்கியுள்ளது. இருந்தாலும் கூட இந்தியா மீண்டும் ஒருமுறை தங்க நுகர்வில் சீனாவை முந்தியுள்ளது. உண்மையில் இந்தியாவில் கடந்த சில வருடங்களாக தங்க நகைகளுக்கான கிராக்கி கணிசமாக உயர்ந்துள்ளதால் தங்கத்திற்கானத் தேவையும் அதிகரித்துள்ளது.

திடவடிவத் தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக ஈ- கோல்டு மற்றும் தங்க ஈடிஎஃப் கள் போன்ற பல நல்ல மாற்று வழிகள் இருக்கின்றன என்கிற உண்மை ஒருபுறம் இருந்தப் போதிலும், முதலீட்டாளர்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தை அதன் தற்போதைய திட வடிவத்திலேயே தொடர்ந்து வாங்கி வருகிறார்கள்.

நமது அரசாங்கம் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தங்க இறக்குமதிகளுக்கு பல்வேறு வரிகளை விதிப்பதன் மூலமாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு திணிக்கப்பட்ட வரி உயர்வு அணி வரிசைகள் தங்க இறக்குமதியைத் தடுப்பதற்காக இன்னமும் அவ்வாறே தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

கடந்த சில வருடங்களில் தங்கத்தின் விலை நகர்வு சற்று மந்தமாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த விலைமதிப்பற்ற உலோகம் 12 வருட வெற்றிச் சாதனையை உடைத்தது. ஆனால் 2008 இல் லேஹ்மன் நெருக்கடி எழுந்ததிலிருந்து அது கணிசமான வருமானத்தை அளித்து வருகிறது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலைகள் தொடர்ந்து முன்னனியில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எத்தனை நாட்களுக்கு இப்படி தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று கேட்டால் அதற்குப் பதிலளிப்பது கடினமானது. நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், முன்னோக்கிப் பார்த்தால் சமீபத்திய வருங்காலத்தில் இந்த உலோகத்தில் எந்த விதமான தீவிரமான சோதனையும் நடக்கும் என்று எங்களால் காண முடியவில்லை.

 

இந்தியாவில் தங்கத்தின் விலைகள் எப்படி மாற்றமடைகின்றன?

இந்தியாவில் தங்கத்தின் விலைகள் பல தொகுப்பான காரணங்களைப் பொறுத்து அமைகிறது. சர்வதேச தங்க விலை நிலவரங்கள், ரூபாயின் விலை இயக்கங்கள் மற்றும் உள்ளூர் சுங்க வரிகள் போன்றவையும் இதில் அடங்கும். ஆனால் தங்கத்தின் விலை உயர்வதற்கு ஒரு தனித்த மிக முக்கியமான காரணம் சர்வதேச விலைகளாகும். சர்வதேச தங்க விலை நிலவரங்கள் உயரும் போது இந்தியாவிலும் தங்கத்தின் விலைகள் மாற்றத்தைக் காணும்.

இன்றைய தங்கத்தின் விலை நேற்று நாம் பார்த்த விலையிலிருந்து எப்பொழுதும் வித்தியாசப்பட்டிருக்கும். இருந்தாலும், இந்தியாவில் தங்கத்தின் விலைகள் ஞாயிற்றுக் கிழமைகளில் மாற்றமடைவதில்லை. ஏனென்றால் அன்று தங்க வர்த்தகம் நடைபெறுவதில்லை. இந்தியாவில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரங்களைப் பார்க்க விரும்பினால் எங்கள் இணைய தளத்திற்கு வருகைத் தந்து புதுப்பிக்கப்பட்ட தங்க விலை நிலவரங்களை சரிபார்க்க மறவாதீர்கள்.

இப்போது ஒவ்வொரு காரணத்தையும் தனித்தனியாகப் புரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

பணவீக்கம் உயரும் போது தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும். இது ஏனென்றால், பொருளாதாரத்தில் பணவீக்கம் வேகமாக அதிகரிக்கும் போது வட்டி விகிதங்கள் உயரும் என்ற கவலைகள் நிலவுகின்றன. இந்தியாவில் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கும் மற்றொரு மிகப் பெரிய காரணி நாணய இயக்கமாகும். எனவே மற்றொரு பெரியக் காரணியான அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் நகர்வின் அதிகாலை வர்த்தகத்தை கூர்ந்து கவனியுங்கள். இவற்றில் மிகப் பெரியது நிச்சயமாக சர்வதேச விலைகளின் நகர்வுத் திறனாகும். அரசியல் பதட்டங்கள், போர் அச்சுறுத்தல்கள் மற்றும் பிற காரணிகள் அதிகரிக்கும் போது இந்தியாவில் தங்க இயக்கத்தின் வேகமும் அதிகரிக்கும். இது ஏனென்றால், உலகளாவிய தேவை நீராவிப் போல ஒன்றுக் கூடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதனால் தான் உள்நாட்டு விலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரிக்கின்றன. ஒட்டுமொத்தமாகச் சொல்லப் போனால் வரவிருக்கும் நாட்களில் இந்த விலையுயர்ந்த உலோகத்தில் முதலீடு செய்வது நல்லதொரு நகர்வாகும். எனவே தங்கம் வாங்குவதற்கு முன்பு தங்கத்தின் விலை நிலவரங்களை எப்பொழுதும் சரிபாருங்கள்.

 

இந்தியாவில் நாம் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவதும் முதன்மையானதுமான காரணம் ரியல் எஸ்டேட் பங்கு சந்தை போன்ற சொத்துப் பிரிவுகளில் வீழ்ச்சி ஏற்படும் போது இது ஒரு சிறந்த இழப்பீட்டுக் காப்பரணாக இருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், பன்மயமாக்கும் அருமையான ஒரு வாய்ப்பை உங்களுக்கு வழங்கும் முதலீடுகளில் இதுவும் ஒன்றாகும். சொத்துக்களைப் பிரித்து பன்மயமாக்கி முதலீடு செய்தல் என்ற விஷயத்திற்கு வரும்போது தங்கத்தைவிட சிறந்த கருவி வேறொன்று இல்லை. எனவே உங்கள் அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் போட விரும்பாத ஒரு முதலீட்டாளராக நீங்கள் இருந்தால், இந்த தங்க முதலீட்டைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். நீங்கள் இதுவரை தங்கத்தில் முதலீடு செய்யவில்லை என்றால் அநேகமாக நீங்கள் தவறு செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். மேலும் அது மோசமான நேரங்களில் சிறிது நிவாரணத்தையும் அளிக்கிறது.

தங்கத்தில் உள்ள மற்றுமொரு அனுகூலம் இதை எளிதில் பணமாக்கலாம். இந்தப் பண்பு தான் தங்கத்தை மற்ற சொத்துப் பிரிவுகளுக்கிடையே சிறந்ததாக ஆக்குகிறது. ஏனென்றால் ரியல் எஸ்டேட் போன்ற சொத்துக்களை அவசியம் ஏற்படும் நேரங்களில் விற்பது மிகவும் கடினமாகும். எனவே இங்கு வெகு சில தேர்வுகளே உள்ளன. நிச்சயமாக இந்தியாவில் தங்கத்தில் கிடைக்கும் வருவாய்க்கும் நீங்கள் வரிகளைச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால், இந்த விலைமதிப்பற்ற உலோகத்திலிருந்து கிடைக்கும் ஒட்டுமொத்த வருவாயை அது குறைக்கிறது. இருப்பினும், தங்கம் இன்றளவும் இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் விரும்பித் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு முதலீடாக இருக்கிறது.

சந்தையில் இருக்கும் தங்க முதலீட்டு தேர்வுகள் என்னென்ன?

இன்று, நமக்கு சவரன் தங்கப் பத்திரங்கள், தங்க ஈடிஎஃப் கள் எனப்படும் தங்க பரிமாற்றக வணிக நிதிகள், தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் போன்றவற்றின் வழியே தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு தங்க சேமிப்பு தேர்வுகள் இருக்கின்றன.

நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தேடுபவராக இருந்தால் தங்க ஈடிஎஃப்-களை வாங்குங்கள். எங்களைப் பொறுத்தவரை அது சிறந்ததாகும். திடவடிவத் தங்கத்தைத் தவிர்த்து இன்று இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு நிறைய தேர்வுகள் இருக்கின்றன. அதில் பிரபலமான சவரன் தங்கப் பத்திரங்களும் அடங்கும். நீங்கள் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்பினால், அவை உங்களுக்கு வட்டி விகிதங்களையும் வழங்குகின்றது. மேலும் இதில் திடவடிவத் தங்கத்தைப் போல திருடப்படக் கூடும் என்கிற கவலையில்லை.

 

இந்தியாவில் நாணய இயக்கமும் தங்க விலைகளும்

இன்றைய தங்கத்தின் விலை நாணய இயக்கத்தையும் சார்ந்திருக்கிறது. சர்வதேச தங்க விலைகள் நிலையாக இருக்கிறது என்று கருதினால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்தால், இந்தியாவில் தங்கத்தின் விலைகள் உயரும். தங்கத்தின் விலைகளை பாதிக்கும் இதர காரணி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாற்றமடையும் பல்வேறு வரிகள் மற்றும் வரிவிதிப்புகளாகும். தங்கத்தின் விலைகள் எப்படி நகர்கின்றன என்பதைப் பொறுத்து அரசாங்கம் வரிகள் மற்றும் வரிவிதிப்புகளை மாற்றுகிறது.

 

தங்கத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய விஷயம்

தற்போது தங்கத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தங்கத்திற்கான தேவை மெதுவாகச் சரியத் தொடங்கியிருக்கிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு தேர்வுகளை தேடி வருகின்றனர். இதில் வழக்கமான தங்க முதலீடாக இல்லாத ஈடிஎஃப் களும் அடங்கும். சீனாவுக்குப் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்த நாட்டில் தங்கத்திற்கு இருக்கும் தேவை அதன் விலைகளையும் சேர்த்துப் பாதிக்கிறது. இந்த விலையுயர்ந்த உலோகத்தை அதிகமாக விரும்பும் இந்த நாட்டில் 2016 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் தங்கத்தின் தேவை கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் மிக அதிக அளவாக 29 சதவிகிதம் குறைந்துள்ளது என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. உண்மையில் தற்போதைய இந்த வருடத்தில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 750 டன்களுக்கு அதிகமாக இல்லை. இது நமது நாட்டில் 2015 ஆம் ஆண்டு இருந்த 858 டன்கள் தேவையை விட குறைவான அளவாகும். இந்த விலையுயர்ந்த உலோகத்திற்கான தேவை எவ்வளவு நாட்களுக்குத் தொடர்ந்து சரிந்திருக்கும் என்பதைச் சொல்வது கடினமானது. இந்தியாவில் இன்றைய நேரடி தங்க விலைகள் இந்த உலோகத்திற்கு இருக்கும் தேவையை பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 


தங்கத்தை வாங்குவதற்கான 3 காரணங்கள்

முதலில் ஒரு அரசியல் கொந்தளிப்பு அல்லது பொருளாதார குழப்பம் ஏற்படும் போது ஓட்டமெடுக்கும் முதல் விஷயம் தங்கத்தின் விலைகளாகும். துரதிருஷ்டவசமாக நீங்கள் இதுவரை தங்கத்தில் முதலீடு செய்யவில்லை என்றால் நீங்கள் மிகுந்த வருத்தத்திற்குரிய நபராவீர்கள். எனவே உங்கள் முதலீட்டைப் பரப்ப விரும்பினால் தங்கம் ஒரு தெளிவானத் தேர்வாகும். தங்கத்தை வாங்குவதற்கான இரண்டாவது காரணம் இது பணவீக்கத்திற்கு எதிரான மிகச் சிறந்த காப்பு அரணாக இருந்து வருகிறது. உதாரணமாக கடந்த 8 முதல் 10 வருடங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலைகள் மும்மடங்கு அதிகரித்துள்ளன. எனவே அவை நிலையான வைப்பு நிதி பத்திரங்கள் ஈட்டுவதை விட சிறந்த வருவாயை கொடுக்கிறது. எனவே நீங்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை.

கடைசியும் இறுதியுமான காரணம் என்னவென்றால், இதை அடமானம் வைத்துக் கொள்ளலாம் மற்றும் எளிதில் விற்று பணமாக்கிவிடலாம். உதாரணமாக இந்த விலையுயர்ந்த உலோகத்தை அடமானம் வைத்து கடன்களைப் பெறலாம். இன்று ஏராளமான மக்கள் இந்த அடமானம் வைக்கக் கூடிய தங்கத்தை வாங்க விரும்புகிறார்கள். எனவே இதில் நிலைத்து முதலீடு செய்வது ஒரு மோசமான யோசனை அல்ல. தங்கம் சோதனைக் காலங்களில் நமக்குப் பக்கபலமாக நிற்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.


தங்கத்தில் முதலீடு செய்வதில் உள்ள நன்மைகள்

தங்கத்தில் முதலீடு செய்வதில் பல அனுகூலங்கள் உள்ளன, அதில் முதலாவதும் முதன்மையானதும் என்னவென்றால் இதை எளிதாகப் பணமாக்கலாம். உதாரணமாக, இந்த விலை உயர்ந்த உலோகத்தை நீங்கள் விரும்பும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விற்கலாம். நிச்சயமாக, அது கட்டித் தங்க வடிவில் இருந்தால் நீங்கள் தங்கத்தின் உண்மையான விலையைப் பெற முடியும். ஆனால், நகை வடிவில் இருந்தால், செய்கூலியும் சேர்த்து பல்வேறு கட்டணங்கள் விதிக்கப்பட்டு நீங்கள் நிறையப் பணத்தை இழக்க வேண்டி வரும். இதிலுள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், இது பணவீக்கத்திற்கு எதிரான மிகச் சரியான இழப்பீட்டுக் காப்பாக இருக்கிறது. மேலும், இது அரசியல் குழப்பங்களுக்கு எதிரானதாகவும் இருக்கிறது.

இதுவரை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யவில்லை என்றால், மிகப் பெரிய தவறை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு தனிநபர் குறைந்தபட்சம் தனது முதலீடுகளில் ஒரு பகுதியையாவது தங்க முதலீடாகச் செய்திருக்க வேண்டும். ஆமாம், மேலும் நீங்கள் தங்கத்திற்கு எதிராக உடனடிக் கடனைப் பெறலாம். இதர சொத்துப் பிரிவுகளான ரியல் எஸ்டேட் போன்றவற்றில் மதிப்பீடுகள் போன்ற பல விஷயங்களைக் கடக்க வேண்டியுள்ளதால் உடனடிப் பணம் அவற்றில் சாத்தியமில்லை. எனவே, தங்கக் கடன்கள் துன்பக் காலங்களில் உங்கள் நோக்கங்களுக்கு உதவும்.

 

இந்தியாவிலுள்ள பல்வேறு தங்க வாங்கும் தேர்வுகள்

இந்தியாவில் தங்கம் வாங்க ஏராளமானத் தேர்வுகள் உள்ளன. அவற்றில் சில, ஈடிஎஃப் எனப்படும் தங்கப் பரிமாற்றக வணிக நிதிகள், சவரன் தங்கப் பத்திரங்கள், திட வடிவத் தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் திட வடிவத் தங்க நகைகள் ஆகியவையும் உள்ளடங்கும். இவை ஒவ்வொன்றிலும் சாதகங்களும் பாதகங்களும் இருக்கின்றன. நாம் தங்கப் பத்திரங்களை அதிகமாக விரும்புகின்றோம். ஏனென்றால் நாட்டிலுள்ள வேறு எந்தத் தங்க முதலீட்டுத் திட்டங்களும் இந்த அளவிற்கு வட்டி விகிதங்களை வழங்குவதில்லை என்று நாம் நம்புகிறோம். சவரன் தங்கப் பத்திரத்தின் மீது 2.7 சதவிகித வட்டி விகிதம் வழங்கப்படுவதால் இது மிகச் சிறந்த வியாபாரப் பந்தயமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால் முதலீட்டிற்காகத் தங்கப் பத்திரங்கள் திறந்து விடப்பட்டன.

நீங்கள் தங்க ஈடிஎஃப் களை வாங்கலாம். ஆனால் நீங்கள் முதலீட்டிற்காகத் தேடுபவர் என்றால், திட வடிவத் தங்கத்தை வாங்குவதைத் தவிர்க்க வேண்டுமென்று நாங்கள் வலுவாகப் பரிந்துரைக்கிறோம். குறைந்தபட்சம் உங்கள் முதலீட்டின் சில பகுதிகளாவது தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே தான், தங்கப் பத்திரங்கள் வாங்குவது மிகச் சிறந்தச் செயலாகும். மேலும் நீங்கள் தேசியப் பங்குச் சந்தைப் பரிமாற்றகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தங்க ஈடிஎஃப் களையும் வாங்கலாம். இது ஒருபோதும் மோசமான வணிக ஒப்பந்தம் அல்ல.

 

2017-இல் இந்தியாவில் தங்க விலைகள் எப்படி நகரும்?

இந்தியாவில் தங்கத்தின் விலைகள் ஏராளமான காரணிகளைப் பொறுத்து அமைகிறது. சர்வதேசத் தங்க விலைகள், உள்ளூர் காப்பு வரிக் கட்டணங்கள் மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணயங்களின் இயக்கம் ஆகியவைகளும் இதில் அடங்கும். தங்கத்தின் விலைகளில் மாற்றங்களுக்கு மிக முக்கியமான ஒற்றைக் காரணிகளில் ஒன்று சர்வதேசத் தங்க விலையாகும். இது அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கும் போது நேர்மாறாக இந்தியாவில் தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடையும்.

கடந்த சில வாரங்களில் என்ன நடந்தது என்றால், டொனால்ட் டிரம்பின் தேர்தல் முடிவுகள் பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்று கவலைகள் எழுந்துள்ளன. இதனையொட்டி அதிக அளவு பணவீக்கத்திற்கும் மற்றும் குறைந்த அளவு தங்க விலைகளுக்கும் வழிவகுக்கும். டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால் நிதி விரிவாக்கம் ஏற்படலாம், மேலும் அதன் விளைவாக வட்டி விகிதங்களின் மீது அழுத்தமும் மற்றும் தங்கத்தின் விலையில் ஒரு கூர்மையான வீழ்ச்சியும் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு செய்வதில் உள்ள நன்மைகள்

தங்கத்தில் முதலீடு செய்வதில் பல அனுகூலங்கள் உள்ளன, அதில் முதலாவதும் முதன்மையானதும் என்னவென்றால் இதை எளிதாகப் பணமாக்கலாம். உதாரணமாக, இந்த விலை உயர்ந்த உலோகத்தை நீங்கள் விரும்பும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விற்கலாம். நிச்சயமாக, அது கட்டித் தங்க வடிவில் இருந்தால் நீங்கள் தங்கத்தின் உண்மையான விலையைப் பெற முடியும். ஆனால், நகை வடிவில் இருந்தால், செய்கூலியும் சேர்த்து பல்வேறு கட்டணங்கள் விதிக்கப்பட்டு நீங்கள் நிறையப் பணத்தை இழக்க வேண்டி வரும். இதிலுள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், இது பணவீக்கத்திற்கு எதிரான மிகச் சரியான இழப்பீட்டுக் காப்பாக இருக்கிறது. மேலும், இது அரசியல் குழப்பங்களுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. இதுவரை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யவில்லை என்றால், மிகப் பெரிய தவறை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு தனிநபர் குறைந்தபட்சம் தனது முதலீடுகளில் ஒரு பகுதியையாவது தங்க முதலீடாகச் செய்திருக்க வேண்டும். ஆமாம், மேலும் நீங்கள் தங்கத்திற்கு எதிராக உடனடிக் கடனைப் பெறலாம். இதர சொத்துப் பிரிவுகளான ரியல் எஸ்டேட் போன்றவற்றில் மதிப்பீடுகள் போன்ற பல விஷயங்களைக் கடக்க வேண்டியுள்ளதால் உடனடிப் பணம் அவற்றில் சாத்தியமில்லை. எனவே, தங்கக் கடன்கள் துன்பக் காலங்களில் உங்கள் நோக்கங்களுக்கு உதவும்.

இந்தியாவிலுள்ள பல்வேறு தங்க வாங்கும் தேர்வுகள்

இந்தியாவில் தங்கம் வாங்க ஏராளமானத் தேர்வுகள் உள்ளன. அவற்றில் சில, ஈடிஎஃப் எனப்படும் தங்கப் பரிமாற்றக வணிக நிதிகள், சவரன் தங்கப் பத்திரங்கள், திட வடிவத் தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் திட வடிவத் தங்க நகைகள் ஆகியவையும் உள்ளடங்கும். இவை ஒவ்வொன்றிலும் சாதகங்களும் பாதகங்களும் இருக்கின்றன. நாம் தங்கப் பத்திரங்களை அதிகமாக விரும்புகின்றோம். ஏனென்றால் நாட்டிலுள்ள வேறு எந்தத் தங்க முதலீட்டுத் திட்டங்களும் இந்த அளவிற்கு வட்டி விகிதங்களை வழங்குவதில்லை என்று நாம் நம்புகிறோம். சவரன் தங்கப் பத்திரத்தின் மீது 2.7 சதவிகித வட்டி விகிதம் வழங்கப்படுவதால் இது மிகச் சிறந்த வியாபாரப் பந்தயமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால் முதலீட்டிற்காகத் தங்கப் பத்திரங்கள் திறந்து விடப்பட்டன. நீங்கள் தங்க ஈடிஎஃப் களை வாங்கலாம். ஆனால் நீங்கள் முதலீட்டிற்காகத் தேடுபவர் என்றால், திட வடிவத் தங்கத்தை வாங்குவதைத் தவிர்க்க வேண்டுமென்று நாங்கள் வலுவாகப் பரிந்துரைக்கிறோம். குறைந்தபட்சம் உங்கள் முதலீட்டின் சில பகுதிகளாவது தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே தான், தங்கப் பத்திரங்கள் வாங்குவது மிகச் சிறந்தச் செயலாகும். மேலும் நீங்கள் தேசியப் பங்குச் சந்தைப் பரிமாற்றகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தங்க ஈடிஎஃப் களையும் வாங்கலாம். இது ஒருபோதும் மோசமான வணிக ஒப்பந்தம் அல்ல.

2017 இல் இந்தியாவில் தங்க விலைகள் எப்படி நகரும்?

இந்தியாவில் தங்கத்தின் விலைகள் ஏராளமான காரணிகளைப் பொறுத்து அமைகிறது. சர்வதேசத் தங்க விலைகள், உள்ளூர் காப்பு வரிக் கட்டணங்கள் மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணயங்களின் இயக்கம் ஆகியவைகளும் இதில் அடங்கும். தங்கத்தின் விலைகளில் மாற்றங்களுக்கு மிக முக்கியமான ஒற்றைக் காரணிகளில் ஒன்று சர்வதேசத் தங்க விலையாகும். இது அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கும் போது நேர்மாறாக இந்தியாவில் தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடையும். கடந்த சில வாரங்களில் என்ன நடந்தது என்றால், டொனால்ட் டிரம்பின் தேர்தல் முடிவுகள் பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்று கவலைகள் எழுந்துள்ளன. இதனையொட்டி அதிக அளவு பணவீக்கத்திற்கும் மற்றும் குறைந்த அளவு தங்க விலைகளுக்கும் வழிவகுக்கும். டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால் நிதி விரிவாக்கம் ஏற்படலாம், மேலும் அதன் விளைவாக வட்டி விகிதங்களின் மீது அழுத்தமும் மற்றும் தங்கத்தின் விலையில் ஒரு கூர்மையான வீழ்ச்சியும் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது..!

 

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தினந்தோறும் அதிரடியாக மாறிவரும் நிலையில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

உண்மையில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை உலகத் தங்க கவுன்சிலின் புள்ளிவிவரங்களின்படி 42 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. உண்மையில், கிராமப்புறங்களில் தங்கத்தின் தேவைக் குறைவு உட்படப் பல்வேறு காரணங்களுக்காகத் தங்க நுகர்வுகளை அரசாங்கம் தடுக்க முயற்சித்து வருகிறது. இருப்பினும், 2017 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வின் காரணமாக அதிகத் தேவையை நாம் காணலாம்

ரூபாய் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை அரசாங்கம் சமீபத்தில் எடுத்ததும், தங்கத்தின் நுகர்வு மோசமாகப் பாதித்திருக்கலாம்.

உலகெங்கிலும் உள்ள வட்டி விகிதங்கள் உயர உயர இந்தியாவில் தங்கம் விலை உயரும். இவை அனைத்தும் தங்கத்திற்குச் சற்று கடுமையான பாதிப்பாக இருக்கலாம். .

 

தங்கம் ஏன் இந்தியாவில் ஒரு நல்ல முதலீடாக இருக்கிறது ?

 

தங்கம் விலை ஒவ்வொரு நிமிடமும் மாறிவரும் நிலையில் தங்க முதலீடுகள் எப்போதுமே நேரத்தை பொருத்தது. உண்மையில் கடந்த 8 ஆண்டுகளில் விலைகள் மும்மடங்காகிவிட்டன. இது தங்க முதலீட்டை எப்போதும் மிகவும் கவர்ச்சிகரமாகச் செய்கிறது.

தங்கக் கடன் நிறுவனங்கள் உள்ளன, அங்கு நீங்கள் தங்கத்தை அடமானம் வைக்கலாம் அல்லது தங்கத்தின் மீது கடன் பெறலாம். ஆதலால் தங்கம் வாங்குவது எப்போதும் நல்லது. அவ்வாறு செய்வதற்கு முன், எப்போதும் தங்க விலையைப் பார்ப்பது ஒரு நல்ல யோசனை. இந்தியாவில் தினசரி தங்க விலையை நாங்கள் வழங்குகிறோம். தங்க விலை தினமும் இரண்டு முறை புதுப்பிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் தங்கத்தை வாங்க விரும்பினால், விலைமதிப்பற்ற உலோக விலைகளைப் பாருங்கள்.


இந்தியாவில் தங்கத்தின் தூய்மையைச் சரிபார்ப்பது எப்படி..?

 

இந்த நாட்களில் நாட்டில் தங்கத்தின் பெரும்பகுதி ஹால்மார்க் செய்யப்படுவதால் முன்பு போலவே தங்க தூய்மையின் மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. தங்கத்தின் தூய்மை உகந்ததாக இருக்கம் என்பதால், ஹால்மார்க் தங்கத்தை வாங்குவது எப்போதும் நல்லது. இந்த நாட்களில் நாம் பார்க்கும் பெரும்பாலான தங்கம் ஹால்மார்க் குறிக்கப்படுகிறது, அதனால்தான் நாட்டில் உள்ள பெரிய நகை கடைகளிலிருந்து தங்கத்தை வாங்குவது நல்லது

இருப்பினும், இந்தியாவில் தங்கத்தின் தூய்மை பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், நீங்கள் ஆய்வு செய்ய முடியும். மிகப்பெரிய அளவில், விலைமதிப்பற்ற உலோகம் இந்தியாவில் தூய்மையான வடிவத்தில் இருப்பதைக் காண்கிறோம்.

இந்தியாவில் இன்றைய தங்க விலையைப் பற்றிப் பேசுகையில், உலகெங்கிலும் இருந்து சில உறுதியான குறிப்புகளைத் தவிர்த்து, விலை நிலையானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவில் தங்கம் விலையைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் உள்ளன. உள்ளூர் கட்டணங்களும் வரிகளும், தங்கத்தின் சர்வதேச விலைகள், பெரும்பாலும் வட்டி விகிதங்களைச் சார்ந்தது. இது தவிர, டாலருக்கு எதிரான ரூபாயின் இயக்கமும் இந்தியாவில் உள்ள உள்ளூர் விலைகளைப் பாதிக்கும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இந்தியாவில் தங்க விலையைச் சரிபார்க்கும் முன், இந்தியாவில் சமீபத்திய தங்கத்தின் விலையை எங்களிடம் நீங்கள் பெறலாம்.

 

தங்கத்தின் தூய்மை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது..!!

 

சந்தையில் நாம் காணும் அல்லது கொள்முதல் செய்யும் தங்கத்தில் செம்பு, நிக்கல், வெள்ளி, பல்லேடியம் மற்றும் துத்தநாகம் போன்ற வேறு சில உலோகங்கள் கலக்கப்படுகிறது வெள்ளி மற்றும் தாமிரம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் குறைந்தபட்சம் அல்லது மலிவான தங்கம், இளஞ்சிவப்புத் தங்கம் அல்லது வெள்ளி அல்லது செம்பு கலந்த தங்கம் என அழைக்கப்படுகிறது, சில நேரங்களில் பச்சை தங்கம் என அழைக்கப்படுகிறது, வெள்ளைத் தங்கம் என்பது தங்கம் மற்றும் பல்லேடியம், நிக்கல் & துத்தநாகம் கலந்தது. வெள்ளி தாமிரம் மற்றும் துத்தநாகத்துடன் கலந்த மஞ்சள் கலந்த தங்கம் விலை மிகுதியானது.. காரட் என்பது தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் .

24 காரட் -99.9%
23 காரட் -95.6%
22 காரட் -91.6%
21 காரட் -87.5%
18 காரட் -75.0%
17 காரட் -70.8%
14 காரட் -58.5%
10 காரட் -41.7%
9 காரட் -37.5%
8 காரட் -33.3%

கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் காரட்கள் குறைவாக இருக்கும் தங்கம் வலு மிக்கது. . உலோகத்தை வாங்குவதற்கு முன், நாட்டில் எப்போதும் தங்க விலைகளைப் பாருங்கள்.


இந்த வருடம் தங்கம் விலை எப்படி இருக்கும்..?

 

துல்லியமாகத் தங்க விலைகளை முன்கூடியே மதிப்பிடுவதற்கு முயற்சி செய்கிறவர்கள் அவசரக்காரர்கள். உண்மை என்னவென்றால் 2017 ல் தங்கத்தின் விலையை யாரும் கணித்துவிட முடியாது. உலோகம் மிகப்பெரிய அளவிலான ஏற்றத்தாழ்வை நோக்கிச் செல்லும் என்பதை நாம் அறிவோம். இது புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்குப் பொருளாதாரக் கொள்கைகள் உலகெங்கிலும் உள்ள பூகோள-அரசியல் பதட்டங்கள் உட்படப் பல்வேறு காரணிகளால்.

நீங்கள் இந்தியாவில் தங்கத்தை வாங்க விரும்பினால், வாங்குவதற்கு முன் இந்தியாவில் இன்று தங்கத்தின் விலை என்ன என்று பார்க்க வேண்டும். விலை உங்கள் வசதிக்கு இருந்தால் வாங்குங்கள் . இல்லையென்றால், விலையுயர்ந்த உலோக விலை வீழ்ச்சிக்குக் காத்திருங்கள்.

விலைமதிப்பற்ற உலோக விலைகளிலிருந்து எந்தவொரு கெளரவமான பணத்தையும் நீங்கள் சம்பாதிக்கக்கூடிய ஒரே வழி இதுதான். உண்மையில், சர்வதேச சந்தையில் தங்கம் கடந்த ஆண்டு 9 சதவீதம் இலாபம் கொடுத்தது, நீங்கள் ஒரு நீண்ட கால முதலீட்டாளர் என்றால், இந்த விஷயங்கள் உங்களைக் கவலைப்படுத்தக்கூடாது, நீங்கள் உலோகத்தை வாங்கிக் கொள்ளலாம்.


916 ஹால்மார்க் தங்க என்றால் என்ன..?

 

916 ஹால்மார்க் கோல்ட்

நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.

Find IFSC