கோயம்பத்தூர் எப்பொழுதும் தங்கத்தின் மீது மோகம் கொண்டுள்ளது. பழங்காலத்திலிருந்தே இந்த நகரத்து மக்கள் எப்பொழுதும் நேர்த்தியான வேலைப்பாடுடைய தங்க நகைகள் மீது ஒரு கண் வைத்திருந்தார்கள்.
கிராம் | 22 கேரட் தங்கம் இன்று |
22 கேரட் தங்கம் நேற்று |
22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,636 | ₹ 4,636 | ₹ 0 |
8 கிராம் | ₹ 37,088 | ₹ 37,088 | ₹ 0 |
10 கிராம் | ₹ 46,360 | ₹ 46,360 | ₹ 0 |
100 கிராம் | ₹ 4,63,600 | ₹ 4,63,600 | ₹ 0 |
கிராம் | 24 கேரட் தங்கம் இன்று |
24 கேரட் தங்கம் நேற்று |
24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 5,061 | ₹ 5,061 | ₹ 0 |
8 கிராம் | ₹ 40,488 | ₹ 40,488 | ₹ 0 |
10 கிராம் | ₹ 50,610 | ₹ 50,610 | ₹ 0 |
100 கிராம் | ₹ 5,06,100 | ₹ 5,06,100 | ₹ 0 |
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
Jan 26, 2021 | ₹ 46,360 0 | ₹ 50,610 0 |
Jan 25, 2021 | ₹ 46,360 -180 | ₹ 50,610 -180 |
Jan 24, 2021 | ₹ 46,540 -10 | ₹ 50,790 -10 |
Jan 23, 2021 | ₹ 46,550 -90 | ₹ 50,800 -80 |
Jan 22, 2021 | ₹ 46,640 -270 | ₹ 50,880 -300 |
Jan 21, 2021 | ₹ 46,910 400 | ₹ 51,180 450 |
Jan 20, 2021 | ₹ 46,510 190 | ₹ 50,730 220 |
Jan 19, 2021 | ₹ 46,320 190 | ₹ 50,510 190 |
Jan 18, 2021 | ₹ 46,130 60 | ₹ 50,320 60 |
Jan 17, 2021 | ₹ 46,070 -10 | ₹ 50,260 -10 |
ஒவ்வொரு நகரத்திலும் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கும் தங்கம் விற்பனையாளர்களின் கூட்டமைப்பு இருக்கும், அதே போலக் கோயம்புத்தூரிலும் உள்ள தங்க விற்பனையாளர் கூட்டமைப்பே தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும்.
அந்தக் கூட்டமைப்பினர் தங்கத்தின் விலையைக் கோயம்புத்தூரில் தினமும் நிர்ணயிக்க உதவும் காரணிகள், விலையுடன் சேர்க்கப்படும் இந்தியாவின் பல்வேறு பண்ட பரிமாற்ற (MCX) ஃப்யூச்சர்ஸ், உள்ளூர் வரிவிதிப்புகள் மற்றும் இதர வரிகள் ஆகியனவாகும். பொதுவாகச் சர்வதேச தங்க விலைகள் தங்கத்தின் வருங்கால விலைகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் தொடர் இணையாக நகர்கின்றது. உள்ளூர் வரிவிதிப்புகள் மற்றும் வரிகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் தங்கத்தின் விலையை மாற்றி அமைக்கிறது. இதனால் தான் தங்கத்தின் விலை நகரத்திற்கு நகரம் வேறுபடுகிறது. எனவே ஒவ்வொரு நகரத்திலும் தினமும் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் வெவ்வேறு கூட்டமைப்புகள் இருக்கின்றன.
கோயம்பத்தூரில் தங்கம் வாங்க நிறைய இடங்கள் இருக்கின்றன. நீங்கள் கோயம்பத்தூரில் லலிதா ஜூவல்லரி, கல்யாண் ஜூவல்லரி அல்லது ஜோய் ஆலுக்காஸ் மற்றும் பல இடங்களில் 22 கேரட் தங்கத்தை வாங்கலாம். கற்பகம் நகைக்கடை நீங்கள் தங்கம் வாங்க மற்றொரு புகழ் பெற்ற சங்கிலித்தொடர் கடையாகும். இந்த நிறுவனத்தின் காட்சி அறை கிராஸ் கட் சாலையில் அமைந்துள்ளது. கோயம்பத்தூரில் உள்ள பெரும்பாலான நகைகள் சமீபத்திய ஆடம்பரமான வடிவமைப்பையும் மற்றும் நவீன பாங்கினையும் கொண்டது.
மேலும் நீங்கள் இதர தேர்வுகளைத் தேடுபவர் என்றால், நீங்கள் நகைக்கடைக்காரரிடம் அவரிடம் பல்வேறு தங்கச் சேமிப்புத் திட்டங்களை வைத்திருக்கிறாரா என்று கேட்கலாம். இந்தத் திட்டங்களின் கீழ் ஒவ்வொரு மாதமும் சேமிப்பதன் மூலம் நீங்கள் ஒரு பெரிய ஒட்டுமொத்த தொகைக்குத் தங்கம் வாங்கலாம். ஆனால் நீங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட நகையின் வடிவமைப்பு மற்றும் மாதிரியை விற்பனையின் போது சோதிக்க வேண்டியது நிச்சயமாகத் தேவையாகும். நகை வாங்கும்போது கோயம்புத்தூரில் 22 கேரட் தங்கத்தின் அந்த நாளைய நேரலை விலையைச் சரிபார்க்க வேண்டியது, நீங்கள் மறக்கக்கூடாத ஒரு முக்கியமான விஷயமாகும்.
கோயம்புத்தூரிலும் இந்தியாவிலும் தங்கத்தின் விலை பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மாறுகிறது. உங்கள் பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்யும் ஆர்வம் இருந்தால் நீங்கள் பார்க்க வேண்டிய சில தாக்கத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் உள்ளன. அவை:
1. அமெரிக்க டாலர்.
டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கங்களைக் காணும் போது தங்கத்தின் விலையும் ஏறி இறங்குகிறது. ஏனெனில் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரின் வலிமைக்கு நேர் எதிர் விகிதாச்சாரமானது. டாலரின் விலைமதிப்பு ஏற்றமடையும் போது தங்கத்தின் விலை இறங்கும் மற்றும் நேர்மாறாக இருக்கும். மற்ற பரிமாற்றங்களின் வலிமையில் ஏற்படும் மாற்றங்களும் பாதிக்கிறது ஆனால் டாலரின் தாக்கம் மிகவும் அதிகமாகும். அத்துடன் ஒப்பிடும் போது இதர நாணயங்களின் தாக்கம் மிகுதியாக இல்லை.
2. ரிசர்வ் வங்கியின் நிலையற்ற தன்மை
ரிசர்வ் வங்கி கொள்கைகளின் நிலைப்புத்தன்மையும் கோயம்புத்தூரிலும் இந்தியாவிலும் தங்கத்தின் விலையைப் பாதிப்பதில் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது. எனவே தங்கத்தில் முதலீடு செய்துள்ள ஒரு தனிநபர் வங்கிகள் தரும் ஏமாற்றங்களை மற்றும் பண மதிப்பீட்டிழப்பு போன்ற முன்கூட்டி கணிக்க முடியாத நாணய உத்திகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் தங்கம் அத்தகைய சூழ்நிலைகளில் பாதுகாப்பான அடைக்கலத்தில் உள்ளது. காகித பணக் கட்டமைப்பு முறை பாதிப்புக்குள்ளாகும், ஆனால் தங்கம் போன்ற பொருட்கள் பாதிக்கப்படுவதில்லை. எனவே அது போன்ற சமயங்களில் எல்லோரும் தங்கத்தைத் துரத்திப்பிடிக்க முற்படுகிறார்கள் எனவே தங்கத்தின் விலையும் அத்துடன் அதிகரிக்கிறது.
3. நிதியளிப்புச் செலவினங்கள்
தங்கத்தின் விலையானது கடன் கட்டணங்களில் அதிகரிப்பு மற்றும் குறைவை பிரதிபலிக்கிறது. கடன் கட்டண களத்தில் மதிப்பு குறையும் போது தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கிறது. தங்கத்தின் விலை கனியும் எனச் சொத்துக்களுக்காகத் தங்கத்தை வழங்கும் தனிநபர்களுக்கு வெவ்வேறு ஊகங்களால் முரண்பட்டிருப்பதால் விலை உயரும் என்று தங்கத்தையே நம்பியிருந்தால் மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. தங்கக் கடனுக்கான விலை மதிப்பேற்றம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறைவாகவே உள்ளது.
சில நகைக் கடைகள் வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க உங்களை வாங்கும் நகைக்கு ரசீதைப் பெற வேண்டாம் என்று வலியுறுத்துவார்கள் மேலும் ரசீதைப் பெறாமல் இருந்தால் உங்களுக்குத் தள்ளுபடிகள் தருவதாகக் கூடச் சொல்வார்கள், ஆனால் அப்படி ரசீதைப் பெறாமல் நகை வாங்குவது பிற்காலத்தில் அந்த நகையை வேறு ஏதேனும் நகைக் கடையிலோ அல்லது மூன்றாம் தரப்பினருக்கோ விற்கும் போது நீங்கள் பாதிப்புக்குள்ளாவீர்கள். உண்மையில் அவர்கள் ரசீதைக் காட்டும்படி வலியுறுத்துவார்கள். ஏனெனில் இந்த ரசீது நீங்கள் விற்கும் நகையின் உண்மைத்தன்மையைப் பிரதிபலிக்கும் விஷயங்களில் ஒன்றாகும்.
இன்றைய நாட்களில் பெயர்பெற்ற கடைகளின் காட்சி அறைகளில் நகையை விற்கும் போது ரசீதைக் காட்ட வேண்டியது கட்டாயம் ஆகியுள்ளது. இல்லையெனில் அவர்கள் அந்த நகையை வாங்க மாட்டார்கள். எனவே நகை வாங்கும் போது ரசீதைப் பெறுவது சிறந்ததாகும். இல்லையென்றால் நீங்கள் அந்த நகையை விற்க நேரிடும் போது கோயம்புத்தூரில் உள்ள தங்க விலையை விட மலிவான விலைக்கு விற்பதில் சென்று முடியும்.
கோயம்புத்தூரில் 22 கேரட் தங்கத்தின் விலைகள் நிறைய முழுமையான காரணங்களின் அடிப்படையில் உயர்ந்து கொண்டே போகிறது. இவற்றில் மிக முக்கியமானது சர்வதேச தங்க விலை நிர்ணயங்களாகும். இந்த விலைகள் ஏற்றமடையும் போது நிச்சயமாகக் கோயம்புத்தூரிலும் தங்கத்தின் விலை உயரும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தமிழ்நாட்டில் மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்கள் அனைத்திலும் தங்கத்தின் விலை ஒரே மாதிரியாகவே இருக்கும். விலைகள் ஒன்றாக இருந்தாலும், செய்கூலி ஒரு நகைக்கடைக்கும் மற்றொரு நகைக்கடைக்கும் இடையே வித்தியாசப்படுகிறது.
நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.