முகப்பு  »  தங்கம் விலை  »  மதுரை

மதுரை தங்கம் விலை நிலவரம் (28th September 2022)

Sep 28, 2022
4,625 /கிராம்(22ct) 15

மதுரையில் எப்பொழுதும் இன்றைய தங்கத்தின் விலை நேற்றைய தங்கத்தின் விலையிலிருந்து மாறுபட்டிருக்கும். நாங்கள் தினமும் மதுரையின் நேரடி தங்க விலைகளை எங்கள் வாசகர்களுக்கு வழங்குகிறோம். இருப்பினும், இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தங்கத்தின் விலைகள் பங்குகளின் விலைகளைப் போல விநாடிகளின் அடிப்படையில் மாறுவது அல்ல. மதுரையில் தங்கத்தின் விலை தினமும் மாறுகிறது. அதுவும் ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறுகிறது.

மதுரை இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)

கிராம் 22 கேரட் தங்கம்
இன்று
22 கேரட் தங்கம்
நேற்று
22 கேரட் தங்கத்தின்
தினசரி விலை மாற்றம்
1 கிராம் 4,625 4,610 15
8 கிராம் 37,000 36,880 120
10 கிராம் 46,250 46,100 150
100 கிராம் 4,62,500 4,61,000 1,500

மதுரை இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)

கிராம் 24 கேரட் தங்கம்
இன்று
24 கேரட் தங்கம்
நேற்று
24 கேரட் தங்கத்தின்
தினசரி விலை மாற்றம்
1 கிராம் 5,045 5,029 16
8 கிராம் 40,360 40,232 128
10 கிராம் 50,450 50,290 160
100 கிராம் 5,04,500 5,02,900 1,600

கடந்த 10 நாட்களில் மதுரை தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)

தேதி 22 கேரட் 24 கேரட்
Sep 28, 2022 46,250 150 50,450 160
Sep 27, 2022 46,100 -410 50,290 -450
Sep 26, 2022 46,510 10 50,740 10
Sep 25, 2022 46,500 0 50,730 0
Sep 24, 2022 46,500 -200 50,730 -220
Sep 23, 2022 46,700 -50 50,950 -50
Sep 22, 2022 46,750 250 51,000 270
Sep 21, 2022 46,500 200 50,730 220
Sep 20, 2022 46,300 -20 50,510 -20
Sep 19, 2022 46,320 -80 50,530 -90

மதுரை தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

தங்க விலையின் வரலாறு மதுரை

 • தங்கம் விலை மாற்றங்கள் மதுரை, August 2022
 • தங்கம் விலை 22 கேரட் 24 கேரட்
  1 st August விலை Rs.47,950 Rs.52,300
  31st August விலை Rs.47,540 Rs.51,860
  உயர்ந்த விலை August Rs.49,140 on August 13 Rs.53,610 on August 13
  குறைவான விலை August Rs.47,540 on August 31 Rs.51,860 on August 31
  ஒட்டுமொத்த செயல் பாடு Falling Falling
  % மாற்றம் -0.86% -0.84%
 • தங்கம் விலை மாற்றங்கள் மதுரை, July 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மதுரை, June 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மதுரை, May 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மதுரை, April 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மதுரை, March 2022
 • தங்கம் விலை மாற்றங்கள் மதுரை, February 2022

தங்கம் மற்றும் தங்க இ.டி.எஃப்.கள் மீதான வரிகள்:

தங்கம் மற்றும் தங்க இ.டி.எஃப்.(exchange-traded fund) ஆகியவற்றின் மீதான வரி என்று சொன்னால், அது தங்கத்தை வாங்குவதற்கும், விற்ப‌தற்கும் விதிக்கப்படும் மூலதன லாப வரியை தான் குறிக்கும். தங்கத்தின் மீது கிடைக்கும் லாபத்திற்கு தான் மூலதன லாப வரி விதிக்கப்படும் என்பது உண்மை தான். தங்கத்தின் மீதான மூலதன லாப வரி எல்லா நகரங்களுக்கும் பொருந்தும். தங்கத்தில் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் தான் மூலதன லாப வரியாக செலுத்தப்படும் தொகை தெரியவரும். வாங்கிய 36 மாதங்களுக்குள் லாத்துடன் தங்கத்தை வாங்கினாலோ விற்றாலோ, வரி அடுக்குகளின்படி நீங்கள் வரியை செலுத்த நேரிடும்.

மற்றொருபுறம், நீங்கள் தங்கத்தை வாங்கி 36 மாதங்களுக்குப் பிறகு விற்றாலோ வாங்கினாலோ, அதே தங்கத்தின் மீது 20 சதவிகித மூலதன லாப‌ வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். விலைக் குறியீட்டுடன் இணைக்கப்பட்ட லாபங்கள் வளரும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சுருக்கமாக சொல்வதென்றால், நீங்கள் தங்கத்தை வாங்குவதிலும் விற்பதிலும் உள்ள வருவாய் குறையும் வாய்ப்புள்ளது. அது குறுகிய காலமாக இருந்தாலோ அல்லது நீண்டகாலமாக இருந்தாலோ இறுதியில் நீங்கள் வரிகளைச் செலுத்தியாக வேண்டும்.

ஆனால், ஒரு சில திட்டங்களில் முதலீடு செய்தால், மனைத்தொழிலில்(அசையா சொத்துக்கள்) வரி சேமிப்புக்கான வாய்ப்புகள் அதிகம். வரிகளை பொருத்தவரை, வரித் தாக்கல் செய்யும் போது தான் நீங்கள் வரியை செலுத்துவீர்கள். எனவே, நீங்கள் ஒரு பெரிய முதலீட்டாளராக இருந்தால், தங்க வர்த்தகத்தின் அம்சங்களை மறக்காதீர்கள். வருமான வரியைப் போல அல்லாமல், தங்கத்தின் மீதான வரிகளில் சேமிக்க எந்த திட்டமும் இல்லை. ஆனால், அதே காலகட்டத்தில் தான் வரிகளைச் செலுத்த வேண்டியிருக்கும்.

இத்துடன், செல்வ வரியையும் செலுத்த வேண்டும். அது தனியாக விளக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், முதலீடு செய்வதற்கு தங்க இ.டி.எஃப். தான் சிறந்த தேர்வாக இருக்கும்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, மிகக் குறைவான சேமிப்புக் கட்டணம் மற்றும் கூடுதலாக பிற நன்மைகளும் கிடைக்கும். தங்க இ.டி.எஃப். போன்றவற்றில் முதலீடு செய்தாலும், தங்கத்தின் விலையை ஒப்பிட்டு பார்க்க‌ மறந்துவிடாதீர்கள். தனித்துவமான சில கட்டணங்கள் விதிக்கப்பட்டாலும், நீண்டகாலத்திற்கு முதலீடு செய்துவிட்டு, பொறுமை காத்திருந்தால் மட்டுமே முதலீடுகள் மீது லாபத்தை காண முடியும். எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதை அறுதியிட்டு கூறிவிட முடியாது. எனினும், கடந்த காலங்களில் தங்கத்தின் மீதான முதலீடுகளுக்கு குறுகிய காலம் முதல் நீண்டகாலத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதை அறிய முடிகிறது. இந்த லாபத்தை ஈட்டுவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை கணிக்க முடியாது. உங்களால் இதை புரிந்து கொள்ள முடியாவிட்டால், இந்தியாவில் தங்கத்தின் மீதான வரிவிதிப்புகளை புரிந்து கொள்ளக் கூடிய நிதி ஆளுநர் அல்லது நிபுணரை அணுகி தக்க வழிகாட்டுதல்களை பெறலாம். அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சவரம் தங்கப் பத்திரங்களுக்கும் 2.75 சதவிகித வட்டித்தொகை கிடைத்துள்ளது. இந்த பத்திரங்கள் மீது கிடைக்கும் வட்டித்தொகை முழுமைக்கும் வட்டி விதிக்கப்படும். எனவே, நீங்கள் அதிக வரி விதிப்பு வரம்புக்கு உட்பட்டவராக இருந்தால், சவரன் தங்கப் பத்திரங்களின் மீது ஈட்டப்படும் வட்டி வருவாய்க்கு வரிகளைச் செலுத்த நேரிடும்.

பழைய தங்கத்தை என்ன செய்வது?

உங்களிடம் பயன்படுத்தாத பழைய தங்கம் இருந்தால், அவற்றை என்ன செய்வது என்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

முதலாவதாக, உங்கள் பழைய தங்க ஆபரணத்தை நகைக்கடைக்காரரிடம் கொடுத்து, அதை புதிதாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது விற்று விடலாம். பல்வேறு காரணங்களுக்காக, பழைய தங்க ஆபரணங்களை விற்று விடுவது நல்லது. தங்க ஆபரணங்களை விற்கும்போது உடனடியாக கையில் பணம் அல்லது காசோலை கிடைத்துவிடும். தங்க நகைக்காரர்களைவிட ஒருசில தங்க கடன் நிறுவனங்கள் பழைய தங்க ஆபரணங்களுக்கு நல்ல விலையை தருகின்றன. தங்கத்தின் தூய்மையை அறிந்து கொள்ள ஒரு சில நிறுவனங்கள் ஜெர்மன் இயந்திரங்களை பயன்படுத்துகின்றன. பழைய தங்க ஆபரணங்களை விற்க விரும்பினால், உடனடியாக தங்க கடன் நிறுவனங்களை அணுகலாம். அங்கு, தங்க ஆபரணங்களுக்கு எவ்வித சேதமும் இல்லாமல், தங்கத்திற்கு நல்ல விலை கிடைக்கும். எனினும், அங்கு செல்லும்போது முகவரியை உறுதி செய்யும் ஆதாரத்தை கொண்டு செல்ல வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள். இல்லாவிட்டால் தங்கத்தை பணமாக்கி கொள்வது கடினமாகி விடும். தங்கத்தை பணமாக்கி கொள்ளாவிட்டால் அதனால் ஒரு பயனும் ஏற்படாது.

தங்கத்தின் கேரட்கள்:

தங்கத்தின் தூய்மையை அறிந்து கொள்வதற்கு பயன்படுத்தும் அளவீட்டு குறிசொல் தான் கேரட்(Karat). கேரட் அதிகமாக இருந்தால், அதற்கேற்ப தங்கம் தூய்மையாக இருக்கிறது என்று பொருள். கேரட் என்பது தங்கத்தின் தூய்மையை குறிக்கும். தங்கத்துடன் பிற உலோகங்களை கலக்கும்போது, தங்கத்தின் தூய்மையை கேரட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

24 கேரட் என்பது வேறு எந்த உலோகத்தின் கலப்படமும் இல்லாத தூய்மையான தங்கத்தை குறிப்பதாகும். கேரட்டின் அளவை பொருத்தும் உலோகக்கலவையில் தங்கத்தின் தூய்மை அளவை தெரிந்து கொள்ளலாம். கேரட்டின் குறியீடு "K" ஆகும்.

24 கேரட் தங்கம்:
24 கேரட் தங்கத்தை தூய்மையான தங்கம் அல்லது 100 சத தங்கம் என்று குறிப்பிடுவார்கள். தங்கத்தின் 24 பகுதிகளிலும் வேறு உலோகங்களின் கலவை இல்லாத தூய்மையான தங்கம் என்பதே அதன் பொருளாகும். இதை 99.99 சத தூய்மை என்றும் கூறுவார்கள். அந்த தங்கம் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் ஒளிரும். தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் அனைத்தும் 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டவையாகும். சென்னையில் 24 கேரட் தங்கத்திற்கு பரவலான வரவேற்பு காணப்படுகிறது. இதர தங்க வகைகளை காட்டிலும், 24 கேரட் தங்கத்தை வாங்குவதையே மக்கள் விரும்புகிறார்கள்.

24 கேரட் தங்கம் மென்மையானது, அடர்த்தி மற்றும் நெகிழ்வுத்தன்மை குறைவானது. எனவே, இந்த தங்கத்தை கொண்டு வழக்கமான ஆபரணங்களை வடிவமைத்து தயாரிக்க முடியாது. 24 கேரட் தங்கம் மின்னணு மற்றும் மருத்துவக்கருவிகளில் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, காது தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் பயன்படுத்தும் மருத்துவக்கருவிகளில் 24 கேரட் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

22 கேரட் தங்கம்:
22 கேரட் தங்கம், தங்கத்தின் 22 பகுதிகளை கொண்டதாகும். எஞ்சியுள்ள 2 பகுதிகளில் வேறு உலோகங்கள் சேர்க்கப்படும். இந்த வகை தங்கம் தான் ஆபரணங்கள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி, துத்தநாகம், நிக்கல் மற்றும் இதர கலவை உலோகங்களை சேர்ப்பதால் தங்கத்தின் மேற்பரப்பு வலிமையாக்கும். இது தங்க ஆபரணங்களின் நீடித்த உழைப்புக்கு காரணமாக இருக்கும்.

22 கேரட் தங்கத்தில் 100 சதத்திற்கு 91.67 சதம் தூய்மையான தங்கம் இருக்கும். மீதமுள்ள 8.33 சதம் வேறு உலோகங்களாக இருக்கும்.

18 கேரட் தங்கம்:
18 கேரட் தங்கத்தில் 75 சதம் தங்கத்துடன் 25 சதம் தாமிரம் அல்லது வெள்ளி சேர்க்கப்பட்டிருக்கும்.

கல் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் மற்றும் வைர ஆபரணங்களில் 18 கேரட் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் மற்றும் 22 கேரட் தங்கத்தை காட்டிலும் 18 கேரட் தங்கம் விலை மலிவாக இருக்கும். ஆனால் தங்கத்தின் நிறம் கொஞ்சம் மங்கலாக இருக்கும்.

ஆபரணத்தின் மீது 18 கேரட் என்று பொறிக்கப்பட்டிருக்கும் என்பதால் 18 கேரட் தங்கத்தை எளிதாக கண்டறியலாம்.

தங்கம் வாங்குவது குறைகிறதா?

தங்கத்தை தங்கமாகவே வாங்கும் போக்கு இந்தியாவில் வேகமாக மாறி வருகிறது. தங்கம் வாங்குவதில் இந்தியர்களுக்கு இருந்த பழைய ஆர்வம் மீண்டும் துளிர்விடுவது கடினம் என்கிறது உலக தங்க கவுன்சிலின் ஆய்வு முடிவுகள். தங்கத்திற்கு பல முனைகளில் இருந்து அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. தங்கத்தின் நுகர்வை குறைக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வயிறு எரியும் அளவுக்கு தங்கத்தின் மீது வரி மேல் வரி விதித்து வருகிறது. இப்படி செய்வதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்துக் கொள்ள முடியும் என்று அரசு கருதுகிறது. பணமதிப்பிழப்பு போன்ற அரசின் நடவடிக்கையால் தங்கத்திற்கான தேவை அதிகரித்ததாக ஒருசிலர் கூறுகிறார்கள். ஐதராபாத்தில் தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகள் விண்ணை நோக்கி பாய்ந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நிலை நீடிக்குமா? என்பதை அடித்து சொல்ல முடியாது. தங்கத்தை தங்கமாக மக்கள் வாங்குவதை குறைக்க சவரன் தங்கப்பத்திர திட்டங்களை அரசு கொண்டு வந்தது.

தங்கம் உற்பத்தி

தங்கத்தின் உற்பத்தியின் அடிப்படையிலும் இந்தியாவில் தங்கத்தின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக தென்னாப்பிரிக்கா இருந்தது. உலகில் இன்று புழக்கத்தில் உள்ள தங்கத்தில் 60 முதல் 70 சதவீதம் தென்னாப்பிரிக்காவின் சுரங்கங்களில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இப்போது இந்த நிலை மாறிவிட்டது. இன்று உலகிலேயே அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடு சீனா. கணிசமான அளவு தங்கத்தை சுரங்கத்தில் இருந்து எடுப்பதால், உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக சீனா மாறியுள்ளது. தங்கத்தின் உற்பத்தியை அதிகமாக்கும் போக்கு சீனாவில் தொடர வாய்ப்புள்ளது. தங்கத்தின் உற்பத்தி குறைந்தால், இந்தியாவில் இன்றைய தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது. தங்கத்தின் தேவையும் உற்பத்தியும் சீராக இருப்ப‌தால் தான் தங்கத்தின் விலை குறையாமல் உள்ளது.

சிறப்பிடம் பிடித்துள்ள தங்கம்:

தங்கம் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. பெரும்பாலான மக்கள் விலைமதிப்பற்ற இந்த உலோகத்தை வாங்குவதை காட்டிலும், எளிதாக விற்று விடுகிறார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் பங்குகளுடன் ஒப்பிடும்போது தங்கத்தை வாங்குவதும் விற்பதும் மிகவும் எளிதானது. சிறிய நகரங்களில் இருக்கும் பலருக்கு பங்குகளை பற்றி எதுவும் தெரியாது. ஆனால், தங்கம் என்றால் என்ன? அதை எப்படி விற்பது? எப்படி வாங்குவது? என்பது அவர்களுக்கு நன்றாக‌ தெரியும். இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கும், விற்பதற்கும் இந்த விழிப்புணர்வு சாதகமாக அமைந்துள்ளது. தங்கம் தொடர்பான தகவல்களை புரிந்து கொள்வது எளிதானது என்பதால், குறுகியகால முதலீட்டாளர்கள் தங்கம் சார்ந்த முதலீடுகளை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களிடையே தங்கத்திற்கு சிறப்பிடம் உள்ளது. தங்கத்தின் விலையை கணிக்க முடியாது என்பதால், தங்கத்தின் விலை சரியும் போதெல்லாம், உடனடியாக தங்கத்தை வாங்க நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

தங்கத்திற்கு சிறப்பானது என்பது தவிர, அதை பதுக்கி வைக்கவும் பலரும் வாங்குகிறார்கள். இந்தியர்கள் தங்கத்தை மிகவும் விரும்புவதும், அதை சொந்தமாக்கிக் கொள்ள ஆர்வம் காட்டுவதும் தான் தங்கத்தை பதுக்க முக்கிய காரணமாகும். திருமணங்கள் அல்லது முக்கிய விழாக்களின் போது தங்கத்தை வாங்கி, பத்திரப்படுத்தி வைக்கும் வழக்கம் இந்தியாவில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தங்கம் விலை எதுவாக இருந்தாலும், தங்கத்திற்கு இந்தியாவில் தனி இடம் இருப்பதை மறுக்க முடியாது.

தங்கம் மீதான இறக்குமதி வரி

இந்தியாவில் தற்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதமாகும். அவ்வப்போது இறக்குமதியை கட்டுப்படுத்தும் தேவையின் அடிப்படையில், இறக்குமதி வரியை அரசு மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கும். மார்ச் மாதத்தில் தங்க இறக்குமதி மீண்டும் அதிகமாகியுள்ளது. விரைவில் இறக்குமதி வரியில் சில திருத்தங்களை செய்ய இந்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நடப்பு கணக்கு பற்றாக்குறையில் ஏற்படக்கூடிய இறுக்கத்தை தவிர்க்கும்பொருட்டு, நீண்டகால அடிப்படையில் தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கான உடனடி தேவை இருக்கிறது. உலக அளவில் அதிக தங்கத்தை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடு. இந்த பின்னணியில், இது போன்ற கட்டுப்பாடுகள் இந்தியாவில் தங்கத்தின் பயன்பாட்டில் பல‌ விளைவுகளை ஏற்படுத்தும்.

கடந்த முறை தங்கம் மீதான இறக்குமதி வரியை அரசு உயர்த்தியபோது, ஒரு சில மனக் கசப்புகள் ஏற்பட்டதை பார்த்தோம். இது வழக்கம் ஆகி விடுமா? என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது இது சாத்தியமாகியுள்ளது. எதுவாக இருந்தாலும், இறக்குமதி வரி விதிப்பதால் தங்கத்தின் விலை தற்போது உள்ளது போல‌ மேலும் உயரும். இது வாடிக்கையாளர்களின் நலன் சார்ந்தது அல்ல. அதேபோல, தங்கத்தை விற்கும் ஆபரண விற்பனையாளர்களுக்கும் இது நல்லதல்ல. தங்கத்தின் தேவை குறைந்தால், தங்கத்தை விற்கும் ஆபரண கடைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, தங்கம் வாங்க விரும்பினால், இறக்குமதி வரி குறைவாக இருக்கும்போது வாங்கலாம். ஆனால், அது எப்போது நடக்கும் என்பதை நாம் ஊகிப்பது மிகவும் கடினமாகும்.

தங்கம் மீதான இறக்குமதி வரிகளில் மாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களில், இந்தியாவில் தங்கம் விலையின் ஏற்ற இறக்கம் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கின்றன. தங்கத்தின் விலை அதிகமாக இருந்தால், அரசு தலையிட்டு இறக்குமதி வரியை குறைக்கும். அதன் மூலம் தங்கத்தின் விலையில் மீண்டும் சரிவு ஏற்படும். ஒரு வேளை தங்கத்தின் விலை குறைவாக இருந்தால், அதன் விலையை உயர்த்த அரசு யோசிக்கலாம்.

தங்கத்தின் விலை, இறக்குமதி வரியை அடிப்படையாக கொண்டுள்ளது. இறக்குமதி வரியின் ஏற்ற இறக்கம் குறித்து தற்போதைக்கு ஊகிக்க முடியாது.

இந்தியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை எப்படி முடிவுசெய்யப்படுகிறது?

1) செலாவ‌ணி: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தால், இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகமாகும்
2) சர்வதேச காரணங்கள்: இவற்றில், நிலையில்லா கொள்கைகள், உலக பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை, பல்வேறு நாடுகளின் செலாவணிகளுக்கு நிகராக தாக்குப்பிடிக்கும் டாலரின் மதிப்பு போன்றவை உள்ளன.
3) தங்கத்திற்கான உலக தேவை: இந்தியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலையை முடிவுசெய்வதில், உலக அளவிலான தங்கத்தின் தேவை முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கத்திற்கு தேவை குறைந்தால், விலை சரியும். இதற்கு மாறாக, தங்கத்தின் தேவை உயர்ந்தால், தங்கத்தின் விலை கூடும்.
4) வட்டி விகிதம்: இந்தியாவில் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் வட்டி விகிதம் முக்கிய பங்காற்றுகிறது. இது, பெரும்பாலானோருக்கு தெரியாததாகும். அமெரிக்கா போன்ற முக்கியமான நாடுகளில் வட்டிவிகிதம் அதிகமானால், தங்கத்தின் விலை சரியும்; அங்கு வட்டிவிகிதம் குறைந்தால், தங்கத்தின் விலை உயரும்.
5) அரசின் கொள்கைகள்: ஒருசில சமயங்களில், தங்கத்தின் நுகர்வை அரசே ஊக்கப்படுத்தாது. விலைவாசி உயர்வின்போது மற்றும் நடப்பு கணக்கு வீக்கத்தின்போது இது நடக்கும். அண்மைகாலமாக, பற்றாக்குறையில் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதால், தங்கத்தின் பயன்பாட்டை அரசு கட்டுப்படுத்தி வருகிறது. நமது நாட்டில் ஏற்கெனவே தங்கம் குவிந்துள்ளது. ஏற்கெனவே குவிந்துள்ள தங்கத்தை என்ன செய்வது?
6) விலை: இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுவதால், தங்கத்தை வாங்குவதில் மக்கள் ஆர்வம் குறைந்துள்ளது. அண்மையில், இந்தியாவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.29 ஆயிரம் அளவுக்கு உயர்ந்தது. எனினும், ஒட்டுமொத்தமாக கருத்தில் கொண்டால், இந்தியாவில் தங்கவிலை நிர்ணயிக்கப்படும் முறை சிக்கலாக உள்ளது.

தங்கம் மூலம் வரும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்? ஏன் தெரியுமா?

தங்கத்தை நகையாகவோ, பத்திரங்களாகவோ எப்படி வாங்கினாலும் விற்றாலும் வரி செலுத்த வேண்டும். 30 லட்சத்திற்கும் அதிகமாக நீங்கள் தங்கம் வைத்துள்ளீர்கள் என்றால் செல்வ வரி செலுத்த வேண்டும்.

அதே நேரம் தங்கத்தை வாங்கும் போது இருந்த விலையை விட அதிக விலைக்கு விற்றாலும் தனிநபர்கள் வரி செலுத்த வேண்டும். அதாவது மதுரையில் இருக்கும் நீங்கள் 1 கிராம் தங்கத்தை 2,300 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் சில வருடங்களுக்குப் பிறகு 1 கிராம் தங்கம் 4,000 ரூபாய் என இருக்கும் போது அதனை நீங்கள் விற்க நேரிட்டால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

எனவே தங்கம் வாங்கும் போதும் விற்கும் போது வரி செலுத்துவது நல்லது..!

தங்கத்தின் மீதான உங்கள் வரிகளைச் செலுத்த மறவாதீர்கள்.

தங்கம் பருப்பொருள் வடிவமாகவோ அல்லது வர்த்தகப் பரிமாற்ற நிதிகளாகவோ இருந்தால் அவற்றிற்கு வரிவிதிப்புகள் பொருந்தும். நீங்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு 30 இலட்சங்களைத் தாண்டினால் நீங்கள் சொத்து வரியைச் செலுத்த வேண்டும் மற்றும் சில தனி நபர்கள் மதுரையில் தங்கத்தின் விலை குறைந்திருக்கும் போது வாங்கிப் பின்பு தங்கத்தின் விலை அதிகரிக்கும் போது விற்பது போன்ற தங்கம் வாங்கி விற்கும் வர்த்தகத்தின் மூலம் லாபம் சம்பாதிக்கிறார்கள்.

எனவே அத்தகைய லாபங்களைச் சம்பாதிக்கும் தனிநபர்கள் முதலீட்டு ஆதாய வரியைச் செலுத்த வேண்டும்.

எனவே வரி செலுத்துவதை மறந்து அதற்காக அபராதத்தைச் செலுத்துவதை விட வரிகளை முறையாகச் செலுத்திவிடுவதே சிறந்ததாகும்.

எனவே நீங்கள் மதுரையில் எப்போது தங்கம் வாங்கலாம்?

இது எப்பொழுதும் பதிலளிப்பதற்குத் தந்திரமான கேள்வியாகும் மற்றும் இதில் அபாயங்கள் நிறைய உள்ளன. இருப்பினும், நேர்மையாகச் சொல்வதென்றால், மதுரையில் தங்கம் வாங்கி நீங்கள் பணம் சம்பாதிக்க நினைத்தால், விலை குறைந்திருக்கும் சமயம் பார்த்து வாங்குவதே சிறந்த பந்தயமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, நீண்ட கால முதலீட்டைத் தேடுபவர்களுக்கு விலைகள் ரூபாய் 26,000 த்திற்கு நெருக்கமாக வீழும் போது வாங்குவது மோசமான முன்மொழிவு அல்ல.

எது எப்படியிருப்பினும், நீங்கள் மதுரையில் தங்கம் வாங்கும் போது எல்லா நேரங்களிலும் உயர்தர 916 தர அடையாளக் குறியீட்டின் மீது நிலையான கவனத்தைச் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். மேலும் இது நீங்கள் தேவைப்படும் போது எளிதாகத் தங்கத்தை விற்கலாம் என்பதை உறுதி செய்கிறது. நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால் தர அடையாளக் குறியீடு உள்ள தங்கத்தை மட்டுமே மதுரை மாநகரில் வாங்குங்கள்.

இது ஏனென்றால் இந்தத் தர அடையாளக் குறியீட்டை கொண்ட தங்கம் தரப் பரிசோதனை செய்யப்படுகிறது அதைத்தான் பொதுவாகக் கேரட் என்றும் அல்லது இந்த விலையுயர்ந்த உலோகத்தின் தூய்மையின் அடையாளம் என்றும் அழைக்கப்படுகிறது. உங்களுக்கு இது போன்ற தூய்மையான தங்கம் மதுரையில் எங்கே கிடைக்கும் என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால் நீங்கள் இது போன்ற தங்கத்தை உங்கள் உள்ளூர் நகைக்கிடையில் பரிசோதித்து வாங்க வேண்டியது அவசியமாகும்.

மதுரையில் 916 தர அடையாளக் குறியீட்டைக் கொண்ட தங்கம் என்பதன் பொருள் என்ன?

916 என்பது தங்கத்தின் தூய்மையை விளக்குகிறது. அது உங்கள் தங்கம் 22 கேரட் என்பதை விளக்குகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், நகைகளில் 916 என்று தர அடையாளக் குறியீடு இடப்பட்டிருந்தால் அதில் 91.6 சதவிகிதம் தங்கமும் 8.4 சதவிகிதம் இதர உலோகங்களும் உள்ளடங்கியுள்ளது என்று பொருள். தங்கத்துடன் இதர உலோகங்கள் கலக்கப்படுவதற்கான காரணம் எளிமையானது, ஏனென்றால் அது ஒட்டுமொத்த தயாரிப்பையும் உறுதியானதாக்குகின்றது.

இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) மதுரை மற்றும் இந்தியாவில் தங்க நகைகளுக்கு அந்த நகைகளின் மிக உயர்ந்த தரத்தை உறுதிப்படுத்த தர அடையாளத்தைக் குறியிடுகிறது. இந்த அடையாளமானது மதுரையில் தங்கம் வாங்க நீங்கள் செலுத்தும் பணத்திற்குச் சிறந்த தரமான தங்கத்தைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்தத் தர அடையாளமிடுதல் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களில் செய்யப்படுகிறது. அந்த நகை எங்கே தர அடையாள முத்திரையிடப்பட்டது, எந்த வருடம் தயாரிக்கப்பட்டது மற்றும் நகை எத்தனை கேரட் என்ற அனைத்துத் தகவல்களையும் நீங்கள் இந்த இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (BIS) தர அடையாள குறியீட்டின் மீது கண்டறியலாம்.

மதுரை மற்றும் இதர இந்திய நகரங்களில் தங்கம் வாங்குவதற்குப் பணம் செலுத்துவதற்கு முன்னர் அனைத்துத் தகவல்களையும் சரிபார்த்துக் கொள்வது சிறந்ததாகும்.

மதுரையின் தங்க விலைகளை ஏன் பின்தொடர வேண்டும்?

நீங்கள் மதுரை நகரில் மிகப்பெரிய அளவில் தங்கம் வாங்குவதாக இருந்தால் வாங்குவதற்கு முன்பாகத் தங்க விலைகளைச் சரிபார்ப்பது புத்திசாலித்தனமாகும். இது ஏனென்றால் இந்த விலை மதிப்பு மிக்க உலோகத்தின் விலைகள் கடந்த சில வருடங்களாகக் கணிசமாக உயர்ந்துள்ளது.

எனவே இந்த விலையுயர்ந்த உலோகத்தின் விலைகளில் ஏற்படும் 10 ரூபாய்க்கான சிறிய மாறுபாடு கூட ஏராளமான வேறுபாடுகளை ஏற்படுத்தும். நீங்கள் மதுரையில் 100 கிராம்கள் தங்கம் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம். இங்கு ரூபாய் 1000 வேறுபாடு இருக்கும். எனவே, மதுரையில் 22 கேரட் தங்கத்தின் அன்றைய தினத்தின் நேரலை விலையைப் பார்த்து வாங்குவது புத்திசாலித்தனமாகும். இருப்பினும், எப்போது தங்கம் வாங்க வேண்டும் மற்றும் எப்போது வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நீங்கள் சுயமாக முடிவு எடுக்க வேண்டும்.

நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X