5 ஆண்டுகளில் 147% லாபம் தந்த மல்டிபேக்கர் பங்கு..!! உங்க போர்ட்போலியோவில் இந்த பங்கு இருக்கா?

இந்திய பங்குச்சந்தையில் கெமிக்கல் துறை சார்ந்த மல்டிபேக்கர் பங்கு முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகளில் 147% லாபத்தை ஈட்டி தந்துள்ளது. அதுவும் ஒரே நாளில் 7.71% வரை உயர்வு கண்டு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்டை தந்துள்ளது.

TGV SRAAC என்ற கெமிக்கல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்றைய பங்குச்சந்தையில் அமர்வில் சுமார் 7.71% வரை உயர்ந்து அசத்தியுள்ளது. நேற்று 120.65 ரூபாயாக இருந்த ஒரு பங்கு மதிப்பு, இன்று 125.50 ரூபாய் என்ற விலைக்கு உயர்ந்தது. அதிகபட்சமாக இப்பங்கு 137.80 ரூபாய் என்ற உச்சத்தையும் தொட்டது.

5 ஆண்டுகளில் 147% லாபம் தந்த மல்டிபேக்கர் பங்கு..!! உங்க போர்ட்போலியோவில் இந்த பங்கு இருக்கா?

திடீரென இந்த பங்கின் மதிப்பு உயர்வதற்கு நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகள் மிக சிறப்பாக இருந்ததே காரணம். இந்நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டு அடிப்படையில் 50.4% அதிகரித்து 55.72 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 49.89 கோடியாக இருந்த வரிக்கு முந்தைய லாபம், நடப்பாண்டில் 76.84 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேலும் நிறுவனத்தின் செயல்பாட்டு மூலமான வருவாய் கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்த 499.94 கோடி ரூபாயிலிருந்து 18.1% உயர்ந்து 590.47 கோடி ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வளர்ச்சியை காட்டுகிறது என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Also Read

இந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய், இயக்க லாபம் மற்றும் ஒட்டுமொத்த லாபம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, வருவாயை விட நிகர லாபம் கணிசமாக அதிகரித்துள்ளது. TGV SRAAC பங்குகள் கடந்த பல ஆண்டுகளாகவே முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் மல்டிபேக்கர் லாபத்தை தந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்குகளின் மதிப்பு 147% வரை உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இப்பங்குகள் 514% வரை இமாலய வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இந்நிறுவனம் மருந்து உற்பத்தி மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான ரசாயனங்களை தயாரித்து வழங்குகிறது.

Recommended For You

இந்நிறுவன பங்கு இந்த ஆண்டில் மட்டும் 19% லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. பிரமோட்டர்களே சுமார் 60%க்கும் அதிகமான பங்குகளை சொந்தமாக வைத்துள்ளனர். அதே போல வெளிநாட்டு முதலீட்டாளர்களும் கணிசமாக முதலீடுகளை செய்துள்ளனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+