1 லட்ச ரூபாய் முதலீடு ரூ.6 கோடியாக உயர்ந்த அதிசயம்..!

இந்தியா உலகமயமாக்கலுக்குப் பின்பு நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக ஏற்றுமதி, தொழிற்துறை வளர்ச்சி, உற்பத்தி பொருட்களின் அளவுகள் என அனைத்துத் துறையும் பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய பங்குச்சந்தையிலும் முதலீட்டு அளவுகள் கண்மூடித்தனமாக உயர்ந்து காணப்படுகிறது. அப்படி 15 வருடங்களுக்கு முதலீடு செய்த 1 லட்சம் ரூபாய் இன்று 6 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் அதுதான் உண்மை.

 முக்கியமான நிறுவனங்கள்

முக்கியமான நிறுவனங்கள்

இந்தியாவின் வேகமான வளர்ச்சி ஏதுவாக வாகனங்களின் பயன்படும் அதன் உற்பத்தியும் அதிகரித்தது. இந்நிலையில் சிற வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் என அனைத்திலும் பயன்படும் டையர் நிறுவனங்கள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டுக்குப் பெரிய அளவிலான வளர்ச்சி மற்றும் லாபத்தையும் அளித்துள்ளது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இந்தியாவில் அனைத்துத் துறையிலும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் டையர் உற்பத்தித் துறையில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே இன்றளவும் ஆதிக்கம் செலுத்துகிறது. காரணம் ஆரம்பம் முதலேயே பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையான தரத்திலும் இந்திய சாலைகள் மற்றும் இந்தியர்களின் பயன்பாட்டு முறையை அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப டையர்களைத் தயாரித்தது தான் இதன் வெற்றி.

4 முக்கிய நிறுவனங்கள்

4 முக்கிய நிறுவனங்கள்

டையர் உற்பத்தியில் இருக்கும் 4 நிறுவனங்கள் கடந்த 15 வருடத்தில் 5,000 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது, இதுவே அன்றைய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீடு இன்று வரமாக மாறியுள்ளது.

பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்

பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்

மும்பை பங்குச்சந்தையின் தரவுகள் படி நவ.15 2002ஆம் ஆண்டில் வெறும் 3.47 ரூபாயாக இருந்த பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் இன்று 2,083 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

30% எபிடா மார்ஜின் கொண்ட இந்நிறுவனத்தில் 2002ஆம் ஆண்டில் நீங்கள் 1,00,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 6 கோடி ரூபாய். யாரும் நினைத்து பார்க்கமுடியாத வளர்ச்சி.

 

ஏற்றுமதி

ஏற்றுமதி

இந்நிறுவனத்தின் 80 சதவீத வருவாய் 130 நாடுகளில் இருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு டையர்களை ஏற்றுமதி செய்வதிலும் அதனை விநியோகம் செய்வதிலும் பெறுகிறது. இதுவே முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது.

எம்ஆர்எப்

எம்ஆர்எப்

நவ.15, 2002ஆம் ஆண்டு 844 ரூபாயாக இருந்த எம்ஆர்எப் பங்குகள் 15 வருட இடைவேளையில் 8,132 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 69,477 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும் இந்திய பங்குச்சந்தையில் எம்ஆர்எப் நிறுவன பங்குகள் ஒரு காஸ்ட்லியான பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

 

கணிப்பு

கணிப்பு

இந்நிலையில் அடுத்த 2 வருடத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 85,523 ரூபாய் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் ஸ்ரீசக்ரா

டிவிஎஸ் ஸ்ரீசக்ரா

இந்த 15 வருட காலகட்டத்தில் டிவிஎஸ் ஸ்ரீசக்ரா 7,675 சதவீதம் வளர்ச்சி அடைந்து இன்று அதன் மதிப்பு 3,356.80 ரூபாயாக உள்ளது.

சியாட்

சியாட்

டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனத்தைத் தொடர்ந்து சியாட் நிறுவனத்தின் பங்குமதிப்பு 6,159 சதவீதம் உயர்ந்து இன்று 1,820.85 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இதைத் தொடர்ந்து குட்இயர் 2,996 சதவீதமும், ஜேகே டையர் 2,658 சதவீதமும், அப்பலோ டையர்ஸ் 1,701 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

3 பிரிவு வர்த்தக

3 பிரிவு வர்த்தக

இந்திய டையர் சந்தையில் 3 பிரிவு வர்த்தகம் உள்ளது.

2 மற்றும் 3 வாகன டையர்களுக்கான வர்த்தகச் சந்தை மட்டும் 53 சதவீதம், பயணிகள் கார்களுக்கான டையர் வர்த்தகம் 28 சதவீதம், வர்த்தக வாகனங்கள் பிரிவு 16 சதவீத வர்த்தகத்தைக் கொண்டுள்ளது.

 

ஓடஓட விரட்டிய நிறுவனம்

ஓடஓட விரட்டிய நிறுவனம்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+