ராம நவமி என்பதால் நேற்று இந்திய சந்தைகள் மட்டும் வர்த்தகம் ஆகவில்லை.
சரி, கடந்த ஏப்ரல் 01, 2020 அன்று சுமார் 1200 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ், இன்றாவது ஏற்றத்தில் வர்த்தகமாகுமா என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது. இன்ரும் சென்செக்ஸ் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதிகபட்சமாக 500 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.]
சென்செக்ஸ்
ஏப்ரல் 01, 2020 சென்செக்ஸ் 28,265 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 28,623 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. நல்ல கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், சரியத் தொடங்கி, இன்றைக்கு குறைந்தபட்சமாக 27,765 புள்ளிகளைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சுமார் 500 புள்ளிகள் சரிவில் 27,765 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நிஃப்டி
நேற்று மாலை நிஃப்டி 8,253 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 8,356 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 8,115 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக நிஃப்டி 138 புள்ளிகள் சரிவில் வர்த்தகமகிக் கொண்டு இருக்கிறது.
பி எஸ் இ
சென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,809 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 829 ஏற்றத்திலும், 856 பங்குகள் இறக்கத்திலும், 124 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
சிப்லா, மஹிந்திரா & மஹிந்திரா, சன் பார்மா, ஐடிசி, கெயில் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. கோட்டக் மஹிந்திரா இண்டஸ் இண்ட் பேங்க், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், கோல் இந்தியா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக சந்தைகள்
ஏப்ரல் 02, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 1.72 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 0.47 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.33 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.27 % ஏற்றத்திலும் வர்த்தகமாயின. உலக சந்தைகளே ஏற்றத்தில் வர்த்தகமானாலும் இந்திய சந்தைகள் இன்று அந்த ஏற்றத்தை பிரதிபலிக்கவில்லை.
ஆசிய சந்தைகள்
ஆசிய சந்தைகளின் இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர மற்ற எல்லா சந்தைகளும் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 2.57 % சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. எனவே இந்திய சந்தைகளும் வழக்கம் போல சரிய வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. எனவே முதலீட்டாளர்கள் உஷாராக இருக்கவும்.


Click it and Unblock the Notifications