ஒரு வடத்திற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோக்குகளின் மதிப்புகளை நீக்கி அறிவித்தார். இது கருப்புப் பணம், தீவிரவாதம் போன்றவற்றுக்கு எதிரான நடவடிக்கை என்றும் கூறியிருந்தார்.
இந்திய ரூபாய் நோட்டுகளில் 95 சதவீதம் 500 மற்றும் 1,000 ரூபாயாக இருந்தது. அவை ஒரே அறிவிப்பில் செல்லா காகிதம் ஆகின. பின்னர்ப் புதிதாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு ரொக்கப்பணத் தட்டுப்பாடு குறைக்கப்பட்டது.
சென்செக்ஸ்
அதே நேரம் பங்கு சந்தையினைப் பார்த்தால் கடந்த 12 மாதத்தில் 27,500 புள்ளிகளில் இருந்து 33,500 புள்ளிகள் வரை என 6,000 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
காரணம்
இதற்கு எல்லாம் முக்கியக் காரணம் பொதுமக்கள் அனைவரும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தினை வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்தது ஆகும்.
சரிந்த பங்கு சந்தை
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது இந்திய பங்கு சந்தை நவம்பர் 8 முதல் சில வாரங்கள் அதாவது 21 நவம்பர் வரை தடுமாறி 25,717.93 புள்ளிகளாகச் சரிந்தது. ஆனால் அதன் பிறகு வெளியான ஐபிஓ போன்ற காரணங்களால் பங்கு சந்தை நல்ல முன்னேற்றத்தினைக் கண்டது.
இந்திய பங்கு சந்தையின் பொற்காலம்
2017-ம் ஆண்டு இந்திய பங்கு சந்தையின் பிற்காலம் என்று கூறலாம். சென்செக்ஸ் ஒரு பக்கம் 30,000 புள்ளிகளைக் கடந்து செல்ல, நிப்டியும் முதன் முறையாக 10,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டது.
அருண் ஜேட்லி
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பெருத்தவரையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்பது இந்திய பொருளாதாரத்தினைச் சுத்தப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு ஆகும்.


Click it and Unblock the Notifications