வரும் வாரம் இந்திய பங்குச் சந்தையில் 10 புதிய ஐபிஓக்கள் வெளியிடப்பட உள்ளன. இவற்றின் மூலம் சுமார் ரூ.1,240 கோடி நிதி திரட்டப்படவுள்ளது. எனவே இந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் களைகட்ட போகின்றன.
இந்த 10 ஐபிஓ வெளியீடுகளில், விக்ரன் இன்ஜினியரிங் (Vikran engineering) மற்றும் அன்லோன் ஹெல்த்கேர் (Anlon healthcare) ஆகிய இரண்டு பெரிய IPO-க்களும் அடங்கும். இந்த நிறுவனங்கள் ரூ.893 கோடியை திரட்டுகின்றன. இந்த ஐபிஓக்கள் ஆகஸ்ட் 26 அன்று சந்தா தொடங்கி, ஆகஸ்ட் 29 அன்று நிறைவடையும்.

மின்சாரம் மற்றும் நீர் உள்கட்டமைப்பு சேவைகளை வழங்கும் விக்ரன் இன்ஜினியரிங், தனது ஐபிஓ மூலம் ரூ.772 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. அன்லோன் ஹெல்த்கேர், மருந்து இடைநிலைப் பொருட்கள் மற்றும் ஆக்டிவ் பார்மசூட்டிகல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், ரூ.121 கோடி நிதி திரட்ட இலக்கு வைத்துள்ளது. விக்ரன் இன்ஜினியரிங்கின் ஒரு பங்கின் விலை ரூ.92- ரூ.97 ஆகவும், அன்லோன் ஹெல்த்கேரின் பங்கின் விலை ரூ.86-ரூ.91 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SME) சந்தையில் எட்டு IPO-க்கள் வெளியிடப்பட உள்ளன. NIS மேனேஜ்மென்ட் மற்றும் குளோடயர் இன்ஃபோடெக் (globtier infotech) ஆகஸ்ட் 25 அன்று சந்தா தொடங்கி, ஆகஸ்ட் 28 அன்று நிறைவடையும்.
பாதுகாப்பு மற்றும் வசதி மேலாண்மை சேவைகளை வழங்கும் NIS மேனேஜ்மென்ட், ஒரு பங்குக்கு ரூ.105-111 என்ற விலையில் ரூ.60 கோடி திரட்டுகிறது. IT தீர்வு நிறுவனமான குளோடயர் இன்ஃபோடெக், ஒரு பங்குக்கு ரூ.72 என்ற நிலையான விலையில் ரூ.31 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
சத்வா இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் (Sattva engineering) மற்றும் கரண்ட் இன்ஃப்ராப்ரோஜெக்ட்ஸ் (current infraprojects) ஆகிய SME IPO-க்கள் ஆகஸ்ட் 26 அன்று தொடங்குகின்றன. சத்வா இன்ஜினியரிங்கின் பங்கு விலை ரூ.70- ரூ. 75 ஆகவும், கரண்ட் இன்ஃப்ராப்ரோஜெக்ட்ஸ் பங்கு விலை ரூ. 76- 80 ஆகவும் இருக்கும். சத்வா இன்ஜினியரிங் ரூ.35.4 கோடி மற்றும் கரண்ட் இன்ஃப்ராப்ரோஜெக்ட்ஸ் ரூ.41.8 கோடி திரட்ட இலக்கு வைத்துள்ளன.
ஆயில் & கேஸ் துறைகளில் கவனம் செலுத்தும் ஓவல் பிராஜெக்ட்ஸ் இன்ஜினியரிங் (oval projects engineering) , ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1 வரை 54.99 லட்சம் பங்குகளை வெளியிட்டு ரூ.46.74 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.80-85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான ஆகஸ்ட் 29 அன்று, சுக்ஸ் லாயிட் (Sugs lyod) , ஏப்ரில் பேப்பர் டெக் (Abril paper tech) மற்றும் ஸ்நேஹா ஆர்கானிக்ஸ் (Sneha organics) ஆகிய மூன்று IPO-க்கள் சந்தா தொடங்குகின்றன. இந்த வாரம் இந்திய பங்குச்சந்தையில், அடுத்த வாரம் ஐந்து நிறுவனங்கள் பட்டியலிடப்பட உள்ளன. இவற்றுள் படேல் ரீடெய்ல் (Patel retails) , விக்ரம் சோலார் (Vikram solar) , ஜெம் அரோமேட்டிக்ஸ் (gem aromatics) மற்றும் ஸ்ரீஜி ஷிப்பிங் குளோபல் (shreeji shipping global) ஆகியன ஆகஸ்ட் 26 அன்றும், மங்கள் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் (mangal electrical ) ஆகஸ்ட் 28 அன்றும் பட்டியலிடப்பட உள்ளன.
பங்குச் சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, படேல் ரீடெய்ல், விக்ரம் சோலார், ஸ்ரீஜி ஷிப்பிங் குளோபல் மற்றும் ஜெம் அரோமேட்டிக்ஸ் பங்குகள் கிரே மார்க்கெட்டில் 9-20% வரம்பில் வர்த்தகமாகியுள்ளன. மங்கள் எலக்ட்ரிக்கல் குறைந்த பிரீமியத்தைப் பெற்றுள்ளது. கிரே மார்க்கெட் என்பது, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு முன் IPO பங்குகளின் அதிகாரப்பூர்வமற்ற வர்த்தக சந்தையாகும். SME பிரிவில், ஸ்டுடியோ LSD ஆகஸ்ட் 25 அன்றும், LGT பிசினஸ் கனெக்ஷன்ஸ் ஆகஸ்ட் 26 அன்றும், ARC இன்சுலேஷன் & இன்சுலேட்டர்ஸ் ஆகஸ்ட் 29 அன்றும் பட்டியலிடப்பட உள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications