வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் 10 முக்கிய காரணிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீடுகள் வெளியேற்றம், ஓமிக்ரான், பொருளாதாரம் என மாறி மாறி சந்தையினை பதம் பார்த்து வருகின்றன. இதற்கிடையில் கடந்த வாரத்தில் பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டாலும், ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது சந்தையானது ஏற்றத்தில் தான் காணப்பட்டது.

இது வரும் வாரத்தில் எப்படியிருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன? டெக்னிக்கல் நிலை என்ன? அடுத்து என்ன செய்யலாம்? சந்தையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் என்னென்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

 2024 தேர்தல்: மோடி எதிர்கொள்ள வேண்டிய 5 முக்கிய சவால்கள்..! 2024 தேர்தல்: மோடி எதிர்கொள்ள வேண்டிய 5 முக்கிய சவால்கள்..!

சென்சென்ஸ் நிலவரம்?

சென்சென்ஸ் நிலவரம்?

கடந்த வாரத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 589.31 புள்ளிகள் அதிகரித்து, 57,696.46 புள்ளிகளாகவும், நிஃப்டி 170.25 புள்ளிகள் அதிகரித்து, 17,196.70 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப், உள்ளிட்ட குறியீடுகள் முறையே 1.35% மற்றும் 1.25% ஏற்றத்தில் காணப்பட்டது.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

புதிய வகை கொரோனா குறித்த அச்சம் சந்தையில் நிலவி வருகின்றது. குறிப்பாக தென்னாப்பிரிக்க நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கிட்டதட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவியிருக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதில் இந்தியாவும் அடங்கும். ஆக வரும் வாரத்தில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில், இதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்பிஐ பாலிசி கூட்டம்

ஆர்பிஐ பாலிசி கூட்டம்

ஆர்பிஐ மானிட்டரி கூட்டம் வரும் வாரத்தில் நடக்கவுள்ள நிலையில், வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவுகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் பணவீக்கம் குறித்த அச்சத்தின் மத்தியில், விரைவில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஓ

ஐபிஓ

வரும் வாரத்தில் 4 பங்கு வெளியீடு செய்யப்படவுள்ளது.
ரேட் கெயின் டிராவல் டெக்னாலஜி (RateGain Travel Technologies) - பங்கு வெளியீடு டிசம்பர் 7 - 9, 2021
மெட்ரோ பிராண்ட்ஸ் (Metro Brands) - பங்கு வெளியீடு டிசம்பர் 10 - 14, 2021
ஸ்ரீராம் பிராபர்டீஸ் (Shriram Properties) - பங்கு வெளியீடு டிசம்பர் 8 - 10, 2021
சிஇ இன்ஃபோ சிஸ்டம்ஸ் (CE Info Systems (MapmyIndia) - பங்கு வெளியீடு டிசம்பர் 9 - 13, 2021

பங்கு சந்தையில் பட்டியல்

பங்கு சந்தையில் பட்டியல்

ஆனந்த் ரதி நிறுவனத்தின் பங்கு விலையானது டிசம்பர் 6 அன்று பட்டியலிடப்படவுள்ளது.
இதே ராகேஷ் ஜுன் ஜுன்வாலா புரோமோட்டாராக உள்ள ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கானது டிசம்பர் 10 அன்று பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் விலை

எண்ணெய் விலை

எண்ணெய் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 70 டாலர்களுக்கு அருகில் குறைந்து முடிவடைந்துள்ளது. இது தேவை குறையலாம் என்ற கவலைக்கு மத்தியில் வாரத் தொடக்கத்தில் இருந்து, 14.4% சரிவினைக் கண்டுள்ளது. இது பல நாடுகளிலும் ஓமிக்ரான் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இதனால் கச்சா எண்ணெய் தேவையானது குறையலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இது வரும் வாரத்திலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

டிசம்பர் 3ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் விகிதமானது வெளியேறி வருகின்றது. எனினும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் விகிதமானது அதிகரித்த நிலையில், அது சந்தையில் சரிவினைத் தடுத்துள்ளது எனலாம். இந்த போக்கு வரும் வாரத்திலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார தரவு

பொருளாதார தரவு

வரும் வாரத்தில் தொழில்துறை உற்பத்தி குறித்தான தரவு, அன்னிய பணப் பரிமாற்றம் குறித்தான தரவு போன்ற தரவுகள் வெளியாகவுள்ளன. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழை காரணமாக விவசாய பொருட்கள் உற்பத்தி பாதிப்பு, அறுவடை பாதிப்பு, செமிகண்டக்டர்கள் பற்றாக்குறை, வாகன உற்பத்தி பாதிப்பு, ஐஐபி குறியீடு உள்ளிட்ட பலவும் வெளியாகவுள்ளன. ஆக அதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

நிஃப்டி 50ன் முக்கிய சப்போர்ட் லெவல் 17,000 என நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த சில தினங்களாக பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. எப்படியிருப்பினும் வரும் வாரத்திலும் ஏற்ற இறக்கம் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

கவனிக்க வேண்டிய கார்ப்பரேட் நடவடிக்கைகள்

கவனிக்க வேண்டிய கார்ப்பரேட் நடவடிக்கைகள்

கோல் இந்தியா லிமிடெட் - டிவிடெண்ட் பற்றி டிசம்பர் 6 அன்று அறிவிக்கலாம்.
Panchsteel organics ltd - போனஸ் அறிவிப்பு 1:1 - டிசம்பர் 6, 2021
Chartered logistics ltd - E.G.M - டிசம்பர் 7, 2021
Grandeur Products ltd - Amalgamation - டிசம்பர் 8, 2021
BNK capital markets ltd - Dividend - Rs.2.5000 - டிசம்பர் 9, 2021
Dugar housing developments ltd - E.G.M - டிசம்பர் 9, 2021
Oriental Aromatics ltd -- interim Dividend - Rs.1.5000 - டிசம்பர் 9, 2021
Ridhi Synthetic ltd - Rights issue of Equity - டிசம்பர் 9, 2021
Shivam Auto tech ltd - Rights issue of Equity - டிசம்பர் 9, 2021
TT ltd - interim Dividend - Rs.1.0000 - டிசம்பர் 9, 2021
Weizmann ltd - buyback of shares - டிசம்பர் 9, 2021
Seacoast Shippinh services ltd - E.G.M - டிசம்பர் 9, 2021

கவனிக்க வேண்டிய சர்வதேச காரணிகள்

கவனிக்க வேண்டிய சர்வதேச காரணிகள்

அமெரிக்காவின் மொத்த வாகன விற்பனை குறித்தான தரவு வரும் செவ்வாய்க்கிழமையன்று வெளியாகவுள்ளது. இதே மார்ட்கேஜ் அப்ளிகேஷன்ஸ் குறித்தான தரவு புதன்கிழமையன்றும், வேலையின்மை குறித்தான நலன், அமெரிக்க பணவீக்கம், மொத்த இருப்பு குறித்தான தரவுகளும் வரும் வாரத்தில் வெளியாகவுள்ளன.
இதே ஐரோப்பிய நாடுகளில் ஜிடிபி மதிப்பீடு செவ்வாய்க்கிழமையன்று வெளியாகவுள்ளது.
இதே ஜப்பானில் நுகர்வோர் செலவினங்கள், ஜிடிபி, மெஷின் டூல்ஸ் ஆர்டர், பணவீக்கம், பிபிஐ
சீனாவில் பணவீக்கம் மற்றும் பிபிஐ டேட்டாவும் வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 key factors that will keep traders busy in coming week

10 key factors that will keep traders busy in coming week/ வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் 10 முக்கிய காரணிகள்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X