முதலில் இந்த ஏப்ரல் 2020-ல் இந்தியாவில் இருக்கும் வங்கிகள் சுமாராக 14 நாட்கள் விடுமுறை இருப்பதாகச் செய்திகள் வெளியானது.
இப்போது இந்த ஏப்ரல் 2020-ல் இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை 12 நாட்கள் விடுமுறை இருக்கிறதாம்.
ஆக இந்த 12 நாட்களில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. வாருங்கள் அந்த தேதிகளைப் பார்ப்போம்.
வழக்கமான விடுமுறை
பொதுவாக இந்திய பங்குச் சந்தைகள் வார இறுதி நாட்களான சனிக் கிழமை & ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறையாகத் தான் இருக்கும். எனவே இந்த ஏப்ரல் 2020-ல் 4 சனிக் கிழமைகளும் (ஏப்ரல் மாத தேதிகள் - 4,11,18,25), 4 ஞாயிற்றுக் கிழமைகளும் (ஏப்ரல் மாத தேதிகள் - 5,12,19,26) இருக்கின்றன. இவைகள் எல்லாம் வழக்கம் போல விடுமுறையாக இருக்கும்.
வார நாட்களில் விடுமுறை
ஏற்கனவே ஏப்ரல் 02, 2020 அன்று இந்துக்களின் பண்டிகையான ராம நவமிக்காக இந்திய பங்குச் சந்தைகள் விடுமுறையாக இருந்தன.
இன்று ஏப்ரல் 06, 2020 மகாவீரர் ஜெயந்திக்காக, இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை கொடுத்து இருக்கிறார்கள். மேற்கொண்டு இன்னும் இரண்டு வார நாட்கள் விடுமுறையாக அறிவித்து இருக்கிறார்கள்
இனி வரும் வார நாட்கள் விடுமுறை
இந்த வார வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 10, 2020) கிறிஸ்தவர்களின் புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளிக்காக விடுமுறை அறிவித்து இருக்கிறார்கள்.அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 14, 2020, செவ்வாய்க் கிழமை அன்று இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய சந்தைகள் விடுமுறை அறிவித்து இருக்கிறார்கள்.
மொத்தம்
ஆக வார இறுதி நாட்களான 8 நாட்கள் உடன் இந்த 4 வார வேலை நாட்களையும் சேர்த்தால் 12 நாட்களாகின்றன. இந்திய பங்குச் சந்தைகள் மிகக் கடுமையான ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் போது, இப்படி ஒரு மாதத்தில் 12 நாட்கள் சந்தை விடுமுறையாக இருப்பது ஒரு வகையில் நல்லது தானே. சந்தை நிலை பெறட்டும், மீண்டும் வர்த்தகம் வளரட்டும்.


Click it and Unblock the Notifications