சிலர் வருமான வரி விலக்கு பெறும் நோக்கில் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது வாடிக்கை. அப்படிப்பட்ட சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் ஈக்விட்டியுடன் இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்கள் (ELSS). இது ஒரு மியூச்சுவல் பண்டு திட்டமாகும்.
பொதுவாக இஎல்எஸ்எஸ் திட்டங்களுக்கு 3 ஆண்டுகள் லாக் இன் காலம் உள்ளது. இஎல்எஸ்எஸ் திட்டத்தில் முதலீடு செய்தால், ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும். இந்த திட்டங்களில் மூலம் திரட்டப்படும் நிதியில் 80 சதவீதத்தை பங்கு தொடர்பான திட்டங்களில் மியூச்சுவல் பண்டுகள் முதலீடு செய்கின்றன.

இந்த இஎல்எஸ்எஸ் மியூச்சுவல் பண்டுகள் பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் மற்ற முதலீட்டு வாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானத்தை வழங்குகின்றன. இருப்பினும் அதே அளவுக்கு மற்ற முதலீட்டு வாய்ப்புகளை காட்டிலும் அதிக ரிஸ்க்கும் உள்ளது என்பதும் நிதர்சனம்.
இஎல்எஸ்எஸ் பிரிவில் சுமார் 38 திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. இதில், 12 திட்டங்கள் 2023ல் 25 சதவீதத்துக்கு மேல் ஆதாயம் அளித்துள்ளன. இந்த ஆண்டில் அதிகபட்சமாக SBI Long Term Equity Fund 33.99 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது.
2023ம் ஆண்டின் டாப் 12 இஎல்எஸ்எஸ் பண்டுகள்
1.SBI Long Term Equity Fund இந்த ஆண்டில் 33.99 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது.
2.Motilal Oswal ELSS Tax Saver Fund இதுவரை 32.76 சதவீதம் லாபம் அளித்துள்ளது.
3.ITI ELSS Tax Saver Fund தற்போது 31.54 சதவீதம் உயர்ந்துள்ளது.
4.Bank of India Tax Advantage Fund-ல் மேற்கொண்ட முதலீடு 30.49 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
5.HDFC ELSS Tax saver இந்த ஆண்டில் 29.62 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
6.Samco ELSS Tax Saver Fund இந்த ஆண்டில் இதுவரை 28.81 சதவீதம் அதிகரித்துள்ளது.
7.WOC ELSS Tax Saver Fund இதுவரை 28.74 சதவீதம் ரிட்டர்ன் கொடுத்துள்ளது.
8.JM ELSS Tax Saver Fund தற்போது வரை 27.68 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
9.Franklin India Taxshield பண்டு 26.87 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
10.Baroda BNP Paribas ELSS Tax Saver Fund-ல் மேற்கொண்ட முதலீடு தற்போது 26.80 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
11.Invesco India ELSS Tax Saver Fund இந்த ஆண்டில் 26.54 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
12.DSP ELSS Tax Saver Fund இதுவரை 25.69 சதவீதம் ரிட்டர்ன் வழங்கியுள்ளது.
இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டில் முதலீட்டாளர்கள் இஎல்எஸ்எஸ் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் ரூ.3,773.46 கோடி முதலீடு செய்துள்ளனர். 2023 நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி, இஎல்எஸ்எஸ் பிரிவில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.1.88 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஜனவரியில் ரூ.1.51 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டில் இஎல்எஸ்எஸ் பிரிவில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 24.39 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications