வர்த்தக சந்தையில் ஒவ்வொரு நிறுவனங்கள் தங்களது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டும் நோக்கில் பங்குச் சந்தையில் புதிய பங்கு வெளியீ்ட்டை (ஐபிஓ) மேற்கொண்டு நிதி திரட்டுகின்றன.
கடந்த அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான 5 மாதங்களில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியின் பாதையில் இருந்தது. இதனால் நிறுவனங்கள் ஐபிஓ மேற்கொள்வது மந்தகதியில் இருந்தது. பங்கு விலைகளில் ஏற்பட்ட சரிவு, பலவீனமான முதலீட்டாளர்களின் மனநிலை மற்றும் கடந்த ஒரு வருடத்தில் பட்டியலிடப்பட்ட ஐபிஓகளின் மோசமான செயல்திறன் காரணமாக கடந்த பிப்ரவரி முதல் இந்தியாவின் ஐபிஓ சந்தை ஸ்தம்பித்தது. இதன் விளைவாக பல நிறுவனங்கள் தஙகள் பங்கு விற்பனை திடடங்களை நிறுத்தி வைத்தன.

பிரைம்டேட்டாபேஸ் டாட் காம் நிறுவனத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை 9 நிறுவனங்கள் மட்டுமே ஐபிஓக்களை மேற்கொண்டு ரூ.15,723 கோடியை திரட்டியுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டில் 57 நிறுவனங்கள் மொத்தம் ரூ.1.6 லட்சம் கோடியை திரட்டி இருந்தன. இன்னும் ஐபிஓ சந்தையில் வறட்சி இன்னும் முடிவடையவில்லை.
ஆனாலும் பல நிறுவனங்கள் ஐபிஓ மேற்கொள்வதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளன. கடந்த 3 தினங்களில் மட்டும், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) 14 நிறுவனங்கள் தங்களது ஐபிஓவுக்கான வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன.
2024 செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைகளுடன் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை நிறுவனங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு காரணமாக நிறுவனங்கள் அவசர அவசரமாக ஆவணங்களை தாக்கல் செய்தன.
பங்குச் சந்தையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், எதிர்வரும் காலத்தில் ஐபிஓக்கள் அதிகளவில் நடைபெறும் என்பதை இந்த வரைவு ஆவணங்கள் தாக்கல்களில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு குறிக்கிறது. இது 52 நிறுவனங்கள் தங்கள் ஐபிஓ வெளியீடுகளுக்கு செபியின் ஒப்புதலை பெற்றுள்ளன. அதேநேரத்தில் மொத்தம் 65 நிறுவனங்கள் செபியிடம் ஆணையத்திடம் வரைவு ஐபிஓ ஆவணங்களை தாக்கல் சமர்ப்பித்துள்ளன.
கடந்த மார்ச் 31ம் தேதியன்று செபியிடம் ஐபிஓ ஆவணங்களை தாக்கல் செய்த 14 நிறுவனங்களில், அட்வான்ஸ் அக்ரோலைஃப், ஆனந்த் ரதி ஷேர் அண்ட் ஸ்டாக் புரோக்கர்ஸ், ஆர்டீ இன்ஜினியரிங், டிஎஸ்டிஎஸ் சாப்ட்வேர் சொல்யூஷன், குஜராத் கிட்னி அண்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்ளிங், ஓம் ஃபிரைட் ஃபார்வர்டர்ஸ், பேஸ் டிஜிடெக், டார்க் மெடி வேர்ல்ட், புரோசீல் கிரீன் எனர்ஜி, ரன்வால் என்டர்பிரைசஸ், எஸ்ஐஎஸ் கேஷ் சர்வீசஸ், ஸ்வஸ்திகா இன்ஃப்ரா மற்றும் டீ போஸ்ட் ஆகியவை அடங்கும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications