14 குஜராத் நிறுவனங்களின் வியக்க வைக்கும் வளர்ச்சி.. 4 மடங்கு லாபம்..!

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2020 கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு மெல்ல மெல்ல உயர்ந்து வந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் சென்செக்ஸ் குறியீடு ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 60,000 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. வெறும் 150 நாட்களுக்குள் சென்செக்ஸ் குறியீடு 50,000 புள்ளிகளில் இருந்து 60000 புள்ளிகளை எட்டியுள்ளது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வேளையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 14 நிறுவனங்கள் யாரும் எதிர்பார்க்காத வளர்ச்சியை இந்த 2021ஆம் ஆண்டில் அடைந்துள்ளது.

குஜராத் மாநிலம்

குஜராத் மாநிலம்

பொதுவாகவே இந்திய பங்குச்சந்தையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள், நிறுவனங்கள், குஜராத்திகள் நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 14 நிறுவனங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை 2021ஆம் ஆண்டின் 9 மாதத்தில் பெற்றுள்ளனர்.

14 குஜராத் நிறுவனங்கள்

14 குஜராத் நிறுவனங்கள்

சென்செக்ஸ் குறியீட்டின் 50,000 புள்ளிகள் முதல் 60,000 புள்ளிகள் வரையிலான வளர்ச்சியில் 14 குஜராத் நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் 200 சதவீதத்திற்கும் அதிகமாகவும், 7 நிறுவனங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

7 முக்கிய நிறுவனங்கள்

7 முக்கிய நிறுவனங்கள்

1. கனேஷ் ஹவுசிங் - 31.5 ரூபாயில் இருந்து 162.5 ரூபாய் - 416% வளர்ச்சி

2. R&B டெனிம்ஸ் - 35.9 ரூபாயில் இருந்து 143.4 ரூபாய் - 305% வளர்ச்சி

3. அதானி டோட்டல் கேஸ் - 376.6 ரூபாயில் இருந்து 1,392.6 ரூபாய் - 270% வளர்ச்சி

4. மோனார்ச் நெட்வொர்க் - 38 ரூபாயில் இருந்து 138.9 ரூபாய் - 266% வளர்ச்சி

5. அதானி டிரான்ஸ்மிஷன் - 434.5 ரூபாயில் இருந்து 1,537.6 ரூபாய் - 254% வளர்ச்சி

6. பிஜி பாயில்ஸ் - 112.4 ரூபாயில் இருந்து 374.5 ரூபாய் - 233% வளர்ச்சி

7. குஜராத் ஃபூலூரோகெம் - 577.1 ரூபாயில் இருந்து 1,764.2 ரூபாய் - 206% வளர்ச்சி

100-197 சதவீத வளர்ச்சி

100-197 சதவீத வளர்ச்சி

இதேபோல் ஆதானி எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட், நந்சன் டெனிம் லிமிடெட், தீபக் நைட்ரைட் லிமிடெட், குஜராத் தெமிஸ் பயோசின் லிமிடெட் ஆகியவை 100 சதவீதம் முதல் 197 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்த 7 நிறுவனங்கள் பட்டியலில் முக்கியமான நிறுவனமாக விளங்குகிறது.

3 ஐபிஓ நிறுவனங்கள்

3 ஐபிஓ நிறுவனங்கள்

இந்தப் பட்டியலில் தற்போது புதிதாக மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டுள்ள ஜிஆர் இன்பராஸ்ட்ரக்சர், அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட், தத்வா சின்தான் பார்மா கெம் ஆகிய நிறுவனங்கள் 100 சதவீதம் வரையிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை

இதேபோல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இன்னும் 8 நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் 50 முதல் 99 சதவீதம் வரையிலான வளர்ச்சி அடைந்துள்ளது. சர்வதேசச் சந்தை சரிவில் இருக்கும் போதும் இந்திய சந்தையின் வளர்ச்சி பாதிக்காமல் உள்ளது. இதை ஒருபுறம் சாதகமாக பார்க்கப்படும் வேளையில் மறுபுறம் சந்தை வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+