பிஜேபி ஆட்சியில் தடாலடியாக உயர்ந்த குஜராத் நிறுவன பங்குகள்..!

குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிப்பெற்று, தன்னிச்சையாக ஆட்சி அமைக்கப்போகிறது பிஜேபி கட்சி.

இந்நிலையில் கடந்த 5 வருடத்தில் பிஜேபி ஆட்சியில் குஜராத்தில் இருக்கும் நிறுவனங்கள் தடாலடியாக பங்குச்சந்தையில் உயர்வை சந்தித்துள்ளது.

குஜராத் நிறுவன பங்குகள்

குஜராத் நிறுவன பங்குகள்

5 வருட பிஜேபி ஆட்சியில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள குஜராத் மாநில நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்திற்கும், இனி வரும் நாட்களுக்கும் இந்த தகவல்கள் முதலீட்டாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 

போரோசில்

போரோசில்

டிசம்பர் 14, 2012 முதல் டிசம்பர் 15, 2017 வரையிலான 5 வருட காலக்கட்டத்தில், குஜராத் போரோசில் நிறுவனம் அதிகபடியாக 2,474 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்நிறுவன பங்குகள் 5.18 ரூபாயில் இருந்து 133.35 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

 

சிம்போனி

சிம்போனி

அதேபோல் சிம்போனி நிறுவனம் 900 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 5 வருடத்தில் 163.15 ரூபாயில் இருந்து 1,652.50 ரூபாய் வரையில் உயர்ந்து அசத்தியுள்ளது.

 400 முதல் 600 சதவீத வளர்ச்சி

400 முதல் 600 சதவீத வளர்ச்சி

2012-2017 வருடத்தின் இடைப்பட்ட காலத்தில் குஜராத் அம்புஜா எக்ஸ்போர்ட் 620 சதவீதமும், GNFC நிறுவனம் 467 சதவீதம், குஜராத் கிராப்ட் இண்டஸ்ட்ரீஸ் 408 சதவீதமும், குஜராத் ஆல்கலீஸ் 403 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

பிற முக்கிய நிறுவனங்கள்

பிற முக்கிய நிறுவனங்கள்

குஜராத் தெமிஸ் பயோசின் 393 சதவீதமும், குஜராத் ஸ்டேட் பெட்ரோ 176 சதவீதமும், குஜராத் பிப்பாவ் 175 சதவீதமும், குஜராத் ப்ளூரோகெமிகெல்ஸ் 166 சதவீதமும், குஜார்த் சித்தி சிமெண்ட் 134 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

அதானி போர்ட்ஸ்

அதானி போர்ட்ஸ்

டிசம்பர் 14, 2012இல் 135 ரூபாயில் வர்த்தகம் செய்யப்பட்ட அதானி போர்ட்ஸ் கடந்த 5 வருடத்தில் 196 சதவீதம் வரையில் உயர்ந்து டிசம்பர் 15, 2017 தேதி 401 ரூபாய் என்றளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.

அதேபோல் ஏஐஏ இன்ஜினியரிங் நிறுவன பங்குகள் 400 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 20-200 சதவீதம் வரையிலான வளர்ச்சி

20-200 சதவீதம் வரையிலான வளர்ச்சி

சந்பாவ் இன்ஜினியரிங், GSFC, குஜராத் அப்பலோ இண்டஸ்ட்ரீஸ், குஜராத் இண்டஸ்ட்ரீஸ் பவர், குஜராத் ஆட்டோமோடீவ், குஜராத் மினரெல் டெவலப்மென்ட் கார்பரேஷன், குஜராத் டிரீஸ், குஜராத் ஹோட்டல்ஸ், குஜராத் நேச்சுரல் ரிசோர்சஸ், குஜராத் பாயில்ஸ், குஜராத் எனஆர்ஈ கோக் ஆகிய நிறுவனங்கள் இக்காலக்கட்டத்தில் 20 சதவீதம் முதல் 200 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+