மும்பை: இந்தியாவில் இது ஐபிஓக்களின் வாரம் எனக் கூறும் அளவிற்கு இந்த வாரம் 8 ஐபிஓக்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. புதிதாக ஐபிஓ-க்கள் வெளியிடப்பட உள்ளன.
ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மூலதனத்தை திரட்டுவதற்காகவும் வணிக விரிவாக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காகவும் பங்குச்சந்தையில் தங்களது நிறுவனங்களை பட்டியலிடுவதற்காகவும் ஐ பி ஓ எனப்படும் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்கை வெளியிடுகின்றன. அதாவது நிறுவனத்தின் பங்குகள் விற்கப்பட்டு அதன் மூலம் நிதியை திரட்டுவது. அந்த வகையில் இந்த வாரம் பங்குச்சந்தையில் எட்டு ஐபிஓக்கள் பட்டியலிடப்பட உள்ளன. புதிதாக இரண்டு ஐபிஓ-க்கள் வெளியாகின்றன.

Awfis Space Solutions நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு மே 22 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிறுவனம் தங்களது ஐபிஓ வ-ல் ஒரு பங்கின் மதிப்பினை 364 ரூபாய் முதல் 383 ரூபாய் வரை நிர்ணயம் செய்துள்ளது.
GSM Foils நிறுவனத்தின் ஐபிஓ விண்ணப்பம் மே 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி முடிவடைகிறது. இந்த எஸ்.எம்.ஈ ஐபிஓ சுமார் 11 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் மதிப்பு 32 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Rulka Electricals நிறுவனத்தின் ஐபிஓக்கான விண்ணப்பம் விண்ணப்பங்கள் மே 16ஆம் தேதி தொடங்கிவிட்டன. மே 21 ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைகிறது. இதன் ஒரு பங்கின் மதிப்பு 223 முதல் 235 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Hariom Atta & Spices நிறுவனத்தின் ஐபிஓ விண்ணப்பம் மே 16ஆம் தேதி தொடங்கிவிட்டது. இந்த சிறு நிறுவன ஐபிஓ விண்ணப்ப தேதி 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் ஒரு பங்கின் மதிப்பு 48 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு வாரத்தில் இந்திய பங்குச்சந்தையில் புதிதாக 8 ஐபிஓக்கள் பட்டியலிடப்படுகின்றன. அதில் மிகவும் எதிர்பார்க்கப்படுவது Go Digit. விண்ணப்பிக்கும் தேதி முடிந்து, செவ்வாய்க்கிழமை பங்குகளை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற உள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் மே 23ஆம் தேதி இது பட்டியலிடப்பட உள்ளது.
ABS Marine Services நிறுவனத்தின் ஐபிஓ தேசிய பங்குச்சந்தையில் 21ஆம் தேதி பட்டியலிடப்பட உள்ளது. இதற்கான ஒதுக்கீடுகள் 16ஆம் தேதியே நிறைவடைந்துவிட்டன.
Veritaas Advertising's நிறுவனத்தின் ஐபிஓ 21ஆம் தேதி தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. இது எஸ்.எம்.ஈ ஐபிஓ ஆகும்.
Mandeep Auto Industries நிறுவனத்தின் ஐபிஓ பங்கு ஒதுக்கீடு மே 16ஆம் தேதி முடிவடைந்துவிட்டது. இந்நிறுவனமும் தேசிய பங்குச்சந்தையில் 21ஆம் தேதி பட்டியலிடப்படுகிறது.
Indian Emulsifier நிறுவனத்தின் ஐபிஓ புதன்கிழமை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என தெரிகிறது.
Quest Laboratories ஐபிஓ பங்கு ஒதுக்கீடுகள் மே 21ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. மே 23ஆம் தேதி இது சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
Hariom Atta & Spices நிறுவனத்தின் பங்குகள் வரும் வெள்ளிக்கிழமை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. Rulka Electricals ஐபிஓ பங்கு ஒதுக்கீடு மே 22இல் நிறைவடைந்த்உ, மே 24ஆம் தேதி பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications