இந்தியாவில் மிகவும் பிரபலமான வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம், உப்பு முதல் விமான போக்குவரத்து வரை டாடா குழுமம் களம் காணாத வணிகம் இல்லை. ஒருவர் நினைக்கும் கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையிலும் டாடா நிறுவனம் உள்ளது. நாட்டில் மக்கள் மத்தியில் டாடா குழுமத்துக்கு நம்பகமான பெயர் உள்ளது. டாடா குழுமம் பரஸ்பர நிதித் துறை (மியூச்சுவல் பண்ட்) வணிகத்திலும் தனது கொடியை நாட்டியுள்ளது.
1994ம் டாடா அசெட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை டாடா குழுமம் தொடங்கியது. இந்நிறுவனத்துக்கு முதலீட்டு நிர்வாகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ளது. இந்நிறுவனம் டாடா மியூச்சுவல் பண்டின் முதலீடுகளை நிர்வகிக்கிறது. 2024 ஜூலை 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனம் 61.70 லட்சம் கணக்குகளை கொண்டுள்ளது. மேலும், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.1.76 லட்சம் கோடியாக உள்ளது.

டாடா மியூச்சுவல் பண்ட் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் பல வகையான மியூச்சுவல் பண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இருப்பினும், அதில் 2004ல் தொடங்கப்பட்ட ஒரு திட்டம், ரூ.7,000 மாத எஸ்ஐபி முதலீட்டை ரூ.1 கோடிக்கு மேல் பெருக்கியுள்ளது.
இந்த மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் பெயர் டாடா ஈக்விட்டி பிஇ பண்ட் ரெகுலர் பிளான். 20 ஆண்டு பழமையான இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதலே 18.49 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. 2024 டிசம்பா 31ம் தேதி நிலவரப்படி, டாடா மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.8,592 கோடியாக உள்ளது.
2004 ஜூனில் தொடங்கப்பட்ட டாடா ஈக்விட்டி பிஇ பண்ட் திட்டத்தில், யாராவது எஸ்ஐபி மூலம் மாதந்தோறும் ரூ.7,000 முதலீடு செய்து இருந்தால், அவர்களின் செல்வம் 20 ஆண்டுகளில் ரூ.1.06 கோடியாக வளர்ந்திருக்கும். 2004 ஜூன் முதலான கடந்த 20 ஆண்டுகளில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.16.80 லட்சமாக மட்டுமே இருந்திருக்கும்.
2024 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, டாடா ஈக்விட்டி பிஇ பண்ட் ரெகுலர் திட்டம், பங்கில் 93.74 சதவீதத்தையும், கேஷ் அண்ட் கேஷ் ஈக்விட்டியில் 6.26 சதவீதத்தையும் முதலீடு செய்துள்ளது. இந்த மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் போர்ட்போலியாவில், எச்டிஎஃப்சி வங்கி, பாரத் பெட்ரோலியம், விப்ரோ,ராடிகோ கைதான், கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகளும் அடங்கும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

போருக்கு நடுவில் குத்தாட்டம்! சென்செக்ஸ் 2350 புள்ளிகள் உயர உண்மை காரணம் என்ன? பங்குகளில் முதலீடு செய்யலாமா?

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications