பங்குச் சந்தைகளில் ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்களுக்கு சில தாக்கத்தை கொடுத்துவிடுகிறது. சிலருக்கு அது மீண்டுவர முடியாத வகையிலும் இருக்கும். பலருக்கு சாதகமான ஒன்றாகவும் இருக்கும். அந்த வகையில்,பல்வேறு பங்குகள் சில சமயங்களில் அதிக லாபத்தை வழங்குகின்றன. அதேசமயம் நஷ்டத்தையும் அளிக்கின்றன. சிலர் பங்குச் சந்தையில் ஆண்டு அடிப்படையில் அதிக பணத்தையும் சம்பாதிக்கின்றனர். ஆனால் சிலர் ஒரே நாளில் ஒட்டுமொத்த பணத்தையும் இழக்கின்றனர். அப்படி 2024 ஆம் ஆண்டில் இதுவரை எந்த பங்குகளில் அதிகம் முதலீட்டாளர்கள் செல்வத்தை இழக்க செய்துள்ளது எனபதை பார்க்கலாம்.
மும்பை பங்குச் சந்தை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளில் உள்ள 70% பங்குகள் நடப்பு காலண்டர் ஆண்டில் சிறப்பான வருமானத்தை அளித்திருந்தாலும் 325 பங்குகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளன. அதன்படி, இதுவரை ஏறக்குறைய 68% வீழ்ச்சியுடன், 2024 ஆம் ஆண்டில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீட்டில் ஃப்யூஷன் மைக்ரோ ஃபைனான்ஸ் மிகக் குறைந்துள்ளது. டிசம்பர் 29, 2023 அன்று ரூ.576 ஆக இருந்த நிறுவனத்தின் பங்குகள் டிசம்பர் 13, 2024 அன்று ரூ.186.75 ஆக சரிந்தன.

அதேபோல், ஸ்பந்தனா ஸ்பூர்தி ஃபைனான்சியல் மற்றும் ஃபிலாடெக்ஸ் ஃபேஷன்களும் தலா 67% குறைந்தது. ஸ்மால்கேப் பிரிவில் எச்எம்ஏ அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் 51%, ஜிவிகே பவர் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் 50%, கம்தேனு வென்ச்சர்ஸ் 48% மற்றும் இந்தியா பெஸ்டிசைட் 47% சரிந்தன. ஒட்டுமொத்தமாக ஸ்மால்கேப் பிரிவில் 33.5% ஏற்றம் கண்டுள்ளன.
சென்செக்ஸ் மிட்கேப் குறியீட்டில் ஆண்டு முதல் தேதி வரையில் 30% ஏற்றம் கண்டுள்ளது. இதில் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் ஆண்டு முதல் தேதி வரையில் கிட்டத்தட்ட 52% சரிந்தது. ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், பந்தன் வங்கி, ரிலாக்ஸோ ஃபுட்வேர்ஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவையும் டிசம்பர் 13 வரையிலான காலண்டர் ஆண்டில் 25%க்கும் மேல் இழந்துள்ளன.
அதேபோல், 2024 அக்டோபரில் இருந்து உள்நாட்டு பங்குச் சந்தைக்கு மிகவும் ஏற்ற இறக்கமாக மாறியது. என்எஸ்இ நிஃப்டி மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கடுமையாக சரிவதற்கு முன்பு செப்டம்பரில் உச்சத்தை எட்டின.
இந்த சரிவிற்கு உலகளாவிய பொருளாதார பலவீனங்கள், புவிசார் அரசியல் பதட்டங்கள், அதிக மதிப்பீடுகள் மற்றும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடந்த தேர்தல்கள் முக்கிய காரணமாகின. அதேபோல், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) செப்டம்பர் வரை ரூ. 93,000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கினர். ஆனால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ரூ.1.10 லட்சம் கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்றுள்ளனர்.
30-பங்குகளை கொண்ட சென்செக்ஸில் உள்ள 8 நிறுவனங்கள் நவம்பர் 13 வரை ஆண்டு முதல் தேதி அடிப்படையில் முதலீட்டாளர்களின் செல்வத்தை அரித்துள்ளன. டிசம்பர் 2023 முதல் இண்டஸ்இண்ட் வங்கி 38% சரிந்தது. அதேபோல் ஏசியன் பெயிண்டஸ் 29%,நெஸ்ட்லே இந்தியா 15% மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் 10% சரிந்தன. அதே காலகட்டத்தில் முறையே கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டைட்டன் நிறுவனமும் தலா 5% குறைந்துள்ளது. 2024ல் இதுவரை சென்செக்ஸ் கிட்டத்தட்ட 14% ஏற்றம் கண்டுள்ளது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?: சிறிய மற்றும் மிட் கேப் பங்குகளில் கவனம் செலுத்துவதைவிட லார்ஜ்கேப் அவற்றைவிட கவர்ச்சிகரமான மதிப்பீடுகள் மற்றும் சிறந்த வருவாய் வழங்கியுள்ளதாக உலகளாவிய நிதிச் சேவை நிறுவனமான எச்எஸ்பிசி கூறியுள்ளது.
அதேபோல், ஜேஎம் மோர்கன் அசெட் மேனேஜ்மென்ட்டின் கூற்றுப்படி, வீழ்ச்சி விகிதங்கள் மற்றும் வலுவான சேவைகள் ஏற்றுமதி வளர்ச்சி காரணமாக இந்தியா வலுவான வருவாய் வேகத்தை பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் நீண்ட கால முதலீடுகள் மிகச்சிறந்தது என்றும் கூறியுள்ளது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications