இன்று காலை சென்செக்ஸ் 38,471 புள்ளிகளில், வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 38,579 புள்ளிகளைத் தொட்டது.
வர்த்தக நேர முடிவில் 214 புள்ளிகள் ஏற்றத்தில் 38,434 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இன்று ஆசிய சந்தைகள் மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் நிலை என்ன? எந்த முன்னணி பங்குகள் எல்லாம் விலை உயர்வில் வர்த்தகமாயின போன்றவைகளைப் பார்ப்போம்.
பி ஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,976 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,840 பங்குகள் ஏற்றத்திலும், 967 பங்குகள் இறக்கத்திலும், 169 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 228 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
பங்கு விலை விவரங்கள்
என் டி பி சி, ஏஷியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜி எண்டர்டெயின்மெண்ட், ஹிண்டால்கோ, ஓ என் ஜி சி, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
உலக சந்தைகள் நிலை என்ன
20 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 1.06 % ஏற்றத்தில் வர்த்தகமானது. 21 ஆகஸ்ட், 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.06 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.07 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.08 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
ஆசிய சந்தைகள்
இன்று (21 ஆகஸ்ட் 2020), ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி தவிர, வர்த்தகமாகும் அனைத்து பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக தென் கொரியாவின் கோஸ்பி 1.34 % ஏற்றத்திலும், தைவானின் தைவான் வெயிடெட் 1.98 % ஏற்றத்திலும் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications