பங்குச் சந்தையில் மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றான எராயா லைஃப்ஸ்பேஸ் (Eraaya Lifespaces Limited) நிறுவனத்தின் பங்குகளை பிரிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு, பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்காக, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் டெல்லியில் சனிக்கிழமை, அக்டோபர் 19 அன்று கூடும் என்று நிறுவனம் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது. இதனால், இதன் பங்குகள் தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகின்றன. அத்துடன் தொடர்ந்து அக்டோபர் 18ஆம் தேதி 5% உயர்வுடன் வர்த்தகமானது.
இயக்குநர்கள் குழு கூட்டம் அக்டோபர் 19, நடத்தப்பட்டதாக தெரிகிறது. முதலீட்டாளர்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதோடு பங்குப் பிரிப்பு மூலம் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூட்டத்தின் போது, இயக்குநராக அருண் பத்ரா மற்றும் மற்றொரு இயக்குநராக விவேக் டேவ் நியமனம் போன்ற பல்வேறு வணிக நடவடிக்கைகள் குறித்தும் பரிசீலிக்கும் என்று கூறப்பட்டது.

அத்துடன் ஊதியக் குழு, தலைமைத்துவத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், மூலோபாய நோக்கங்களுடன் சீரமைப்பதற்கும், பங்குச் சந்தை தாக்கல் செய்ததன் படி Ebix Inc. கையகப்படுத்துதலுக்குப் பிந்தைய திறமையான ஒருங்கிணைப்பை உறுதி செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று நிறுவனம் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெறும் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், நீண்ட கால மதிப்பை உயர்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் கொள்கைகளின் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய ஒரு ESG குழுவை அமைத்து விரிவான ESG கொள்கைகளை பின்பற்றுவது குறித்து பரிசீலிக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.
அத்துடன் உலகளவில் தரநிலைகளுடன் இணைந்த பொறுப்பான வணிக நடைமுறைகளை ஆதரிக்கவும், உள்நாட்டு வணிக நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்யவும், திறனை மேம்படுத்தவும், அபாயங்களை நிர்வகிக்கவும் அவற்றை மேம்படுத்தவும், மற்றும் மதிப்பு உருவாக்கத்தை அதிகரிக்கவும் நியமிக்கப்பட்ட ஒரு வெளிப்புற நிபுணர் குழுவான TPO Bharat இன் அறிக்கைகளைக் கவனிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Ebix நிறுவனம் மற்றும் அதன் உலக அளவிலான துணை நிறுவனங்களின் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கும் செயல்பாட்டு செயல்திறன் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தும் என்றும், அதேபோல், சட்டப்பூர்வ தேவைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யவும் இதன் இயக்குநர்கள் குழு பரிசீலனை செய்யும் என்றும் கூறியுள்ளது.
சமீபத்தில் அக்டோபர் 10, 2024 அன்று, எராயா லைஃப்ஸ்பேஸின் FCCB கமிட்டி, 5,00,000 அமெரிக்க டாலரின் மதிப்புள்ள FCCBகளை மாற்றுவதற்கான அறிவிப்புகளைப் பெற்றவுடன், முகமதிப்பு 10 ரூபாய் மதிப்பு கொண்ட 52409 முழுமையாக செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்குகளை ஒதுக்க ஒப்புதல் அளித்தது. இதன் விளைவாக, நிறுவனத்தின் செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனம் ரூ.18,48,91,780 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் 1,84,89,178 முழுமையாக செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.10 மதிப்புடையது.
எராயா லைஃப்ஸ்பேஸ் பங்கு விலை: இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தையில் எராயா லைஃப்ஸ்பேஸ் பங்குகள் தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகின்றன. 2024 இல் இதுவரை, பங்கு 2,501 சதவீதம் உயர்ந்துள்ளது, ஒரு வருட அடிப்படையில், பங்கு 7,299 சதவீதம் உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை வழங்குகிறது.
அக்டோபர் 20 நிலவரப்படி, எராயா லைஃப்ஸ்பேஸ் நிறுவனத்தின் பங்குகள் 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.3,169 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.43.36 ஆகவும் இருந்தது. இதன் ஒட்டுமொத்த சந்தை மூலதனம், ரூ.4.95 ஆயிரம் கோடியாக உள்ளது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications