பங்குச்சந்தையில் ஒரு சில பங்குகள் தான் ஜாக்பாட் அடிக்கும் அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு 5 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் முதலீட்டாளர்களுக்கு 268.93 சதவீத லாபத்தை கொடுத்து ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐடி சேவை துறை பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் வேளையில் ESDS சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் லாபத்தை அள்ளி கொடுத்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது கிளவுட், டேட்டா சென்டர், ஏஐ இன்பரா சேவைகளை வழங்கி வரும் நிலையில், ஏஐ யுகத்தின் உச்சத்தில் பங்குச்சந்தையில் என்டரி கொடுத்து, இன்று தனது சந்தை மதிப்பை கிட்டத்தட்ட 3 மடங்கு உயர்த்தி புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது.

இந்நிறுவனத்தின் ஐபிஓ ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் 429 ரூபாய் பங்கு மதிப்பில் சந்தைக்கு வந்தது. இந்த ஐபிஓ மூலம் சுமார் 720 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்டிய ESDS சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் செப்டம்பர் 4ஆம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
பங்குச்சந்தைக்கு வந்த நாளில் இருந்து தொடர்ந்து அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டு வரும் காரணத்தால் வெறும் 5 நாள் வர்த்தகத்தில் 429 ரூபாய் மதிப்பு கொண்ட பங்குகள் இன்று 1,582.70 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது.
இதன் மூலம் 268.93% வளர்ச்சியை ESDS சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவன பங்குகள் பதிவு செய்துள்ளது.
இந்த நிறுவனம் 2026ஆம் நிதியாண்டில் 480.65 கோடி ரூபாய் வருவாயும், வரிக்கு பிந்தைய லாபமாக 120.82 கோடி ரூபாயும் பெற்றுள்ள சிறிய நிறுவனமாக இருந்தாலும் ஏஐ துறைக்கான சேவையை அளிக்கும் காரணத்தால் இந்நிறுவனத்திற்கான வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதை நம்பி முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டுவதால் அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது.
தற்போது இந்தியாவின் டேட்டா சென்டர் திறன் என்பது 1.4 ஜிகாவாட் ஆக உள்ளது, இது அடுத்த 10 வருடத்தில் 6-7 ஜிகாவாட் ஆக உயரும் என நித்தி அயோக் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால் ESDS சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான பியூஷ் சோமணி அடித்த 10 வருடத்தில் இந்தியாவின் டேட்டா சென்டர் திறன் 30-40 ஜிகா வாட் அளவுக்கு உயர்ந்திருக்கும் என கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.goodreturns.co.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications
