நடப்பு ஆண்டில் சர்வதேச சந்தைகள் மிக மோசமான ஏற்ற இறக்கத்தில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையானது கணிசமான லாபத்துடன் காணப்படுகிறது.
அடுத்த ஆண்டிலும் இந்திய பங்கு சந்தையானது ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை அச்சத்தின் மத்தியில், ஐடி பங்குகள் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
நிபுணர்களின் கணிப்பு
ஆனால் நிபுணர்கள் சிலர் ஐடி பங்குகள் நடப்பு ஆண்டிலேயே சரிவினைக் கண்டுள்ளன. இந்த போக்கு அடுத்த ஆண்டு தேவையானது மீண்டு வரலாம். இது ஐடி பங்குகளுக்கு சாதகமாக அமையலாம் என கூறுகின்றனர்.
இதற்கிடையில் நடப்பு ஆண்டில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் எல் & டி டெக்னாலஜி உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பங்கு விலை அதிகரிக்கலாம்
கடந்த சில காலாண்டுகளாகவே ஐடி தேவையானது சரிந்து வந்த நிலையில், ஐடி பங்குகள் சரிவினைக் கண்டு வந்தன. தற்போது இன்னும் சர்வதேச சந்தையில் ரெசசன் வரலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு ஐடி துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. எனினும் அடுத்த 3 - 6 மாதங்களில் சில ஐடி பங்குகள் நல்ல லாபம் கொடுக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இரண்டாம் பாதியில் மீண்டு வரலாம்
அமெரிக்கா மற்றிம் ஐரோப்பிய சந்தைகளில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் தேவையானது சரியலாம் என்றாலும், பணவீக்கத்தினை குறைக்க மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு ரெசசனை ஊக்குவிக்கலாம். இது ஐடி துறையில் ஏற்றுமதியினை பாதிக்கலாம். எனினும் ஆரம்பத்தில் இருந்தாலும், பின்னர் இது மீண்டு வரலாம். 2023ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சந்தை மீண்டு வரலாம்.
மற்ற கவனிக்க வேண்டிய துறை
இதற்கிடையில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் எல்&டி டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பங்குகள் பங்கு சந்தையில் நல்ல வளர்ச்சியினை காணலாம். அடுத்த 2 காலாண்டுகளில் இந்த பங்குகள் வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம். இதே சர்க்கரை பங்குகள் நல்ல ஏற்றத்தினை காணலாம். அடுத்த 2 - 3 ஆண்டுகளில் வங்கி பங்குகள், சர்க்கரை துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றம் காணலாம்.
கெமிக்கல் துறை சார்ந்த பங்குகள்
சிமெண்ட் மற்றும் அக்ரோசெம், சிறப்பு கெமிக்கல்கள், கெமிக்கல்கள் என சில துறைகளும் ஏற்றம் காணலாம். இதி நவீன் ப்ளூரைடு, தீபக் நைட்ரேட், பிஐ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகளும் ஏற்றம் காணலாம்.
இது தவிர கேப்பிட்டல் குட்ஸ் துறையும் நல்ல ஏற்றம் காணலாம். இதுவும் நல்ல ஏற்றம் காணலாம். பவர் டிரான்ஸ்மிஷன், பவர் டிஸ்டிரிபியூசன் என சில துறை சார்ந்த பங்குகளும் நல்ல ஏற்றம் காணலாம்.
ஹிட்டாச்சி
இதில் சீமென்ஸ் நல்ல வலுவான ஆர்டர் புத்தகத்துடன் காணப்படுகின்றது. இது அடுத்த 3 -5 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியினை காணலாம். ஹிட்டாச்சி எனர்ஜி இந்த நிறுவனம் ரோபோட்டிக்ஸ் முதல் செயற்கை நுண்ணறிவு வரை பல பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றது. ஆக இதுவும் நீண்டகால நோக்கில் வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications