மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது ஆட்சி அமைந்துள்ளது. பாரதிய ஜனதா பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி தயவுடன் ஆட்சியை அமைத்துள்ளது.
இதனால் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுகளில் காணப்பட்டாலும், பிரதமர் மோடி அமைச்சரவை அறிவிப்புகளை வெளியிட்டதை அடுத்து பங்குச் சந்தைகள் பாசிட்டிவான ட்ரெண்டில் சென்று கொண்டிருக்கின்றன.

மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைத்திருப்பதால் இந்த துறை சார்ந்த நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான லாபத்தை பெற முடியும் என்றும் நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
Banking and financial services funds: கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசின் கீழ் நமது வங்கி மற்றும் நிதி சார்ந்த சேவைகள் பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளன. குறிப்பாக பெரும்பாலானவை டிஜிட்டல்மயமாகி உள்ளன. வங்கிகளுக்கு சாதகமான கொள்கைகளையும் அரசு பரவலாக கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக ஃபின்டெக் நிறுவனங்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மக்களும் பெருமளவில் வங்கி சேவைகளை நோக்கியும் டிஜிட்டல் பேமெண்டுகளையும் நோக்கி வந்துள்ளனர்.
வரும் நாட்களிலும் இது தொடரும் என்பதால் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்யலாம். எஸ்பிஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்விசஸ் (sbi banking and financial services) ஆண்டுக்கு 20% லாபத்தை தரக்கூடியதாக உள்ளது.
அதேபோல நிப்பான் இந்தியா பேங்கிங் ,ஐசிஐசிஐ, ஆதித்யா பிர்லா, யூடிஐ ,பந்தன் ஹெச்டிஎஃப்சி, கோடக் என பல்வேறு நிறுவனங்களும் வங்கி மற்றும் நிதி சேவைகள் சார்ந்த ஃபண்டுகளை தனியாக இயக்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை 18 முதல் 22 சதவிகிதம் வரை லாபம் தரக்கூடியவையாக உள்ளன.
Technology funds: இந்தியா தற்போது பல்வேறு சேவைகளும் டிஜிட்டலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே இந்தியாவில் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், ஐடி சேவைகள் மற்றும் பிற தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளன, அடுத்த வரும் காலங்களிலும் இவற்றுக்கான தேவை குறையப் போவது கிடையாது.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி கண்டிப்பாக தகவல் தொழில்நுட்பங்களின் தேவை ஒவ்வொரு துறைக்கும் இருக்கும் என்பதை உணர்த்துகிறது. எனவே இவ்வாறு தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்யலாம் என பல்வேறு நிபுணர்களும் கணித்துள்ளனர்.
உதாரணமாக இந்தியாவில் தற்போது எஸ்பிஐ டெக்னாலஜி ஆப்பர்சுனிட்டி(sbi technology opportunity), டாடா டிஜிட்டல் இந்தியா ஃபண்ட்(tata digital india fund), பிராங்க்ளின் இந்தியா டெக்னாலஜி (franklin india technology), ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா ஃபண்ட்(Aditya birla sun life digital india fund) என பல்வேறு திட்டங்கள் உள்ளன. இவை அனைத்தும் 25 சதவிகிதம் வரை சராசரியாக வருமானம் பெற்று தரக்கூடியவையாக இருக்கின்றன.
Pharma and healthcare funds: இந்தியாவில் மருந்து மற்றும் சுகாதாரத் துறைக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து தான் இருக்கிறது. அரசும் பல்வேறு சுகாதார கட்டமைப்புகளை கொண்டு வருகிறது.
எனவே இந்தியாவில் சுகாதாரத்துறை சந்தை என்பது வரும் காலங்களில் மிகப்பெரிய அளவை எட்ட கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதும் அதிகரித்துள்ளது.
எனவே மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருத்துவத்திற்கு தேவையான உபகரணங்களை தயாரிக்க கூடிய நிறுவனங்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்யக்கூடிய நிறுவனங்கள் இவற்றில் முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிச்சயம் கணிசமான லாபத்தை பெற முடியும்.
இந்தியாவில் எஸ்பிஐ ஹெல்த் கேர் (sbi health care), டிஎஸ்பி ஹெல்த்கேர் (dsp healthcare), மீரா ஆசிட் ஹெல்த் கேர் (mirae asset health care), டாடா இந்தியா பார்மா ஃபண்டு (tata india pharma fund) என பல மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன. இவை அனைத்து 25% மேல் லாபம் தந்துள்ளன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications