பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு அடுத்த வாரம் வர்த்தகம் செய்ய 3 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை முன்னணி பங்குத் தரகு நிறுவனமான ஆக்சிஸ் செக்யூரிட்டிஸிலிருந்து தொழில்நுட்ப ஆராய்ச்சித் தலைவர், மூத்த துணைத் தலைவர் ராஜேஷ் பல்வியா பரிந்துரை செய்துள்ளார். இந்த 3 பங்குகளின் பட்டியலில் முதல் இடம் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த DLF லிமிடெட், இரண்டாவது நுகர்வோர் மின்னணுத் துறையைச் சேர்ந்த வோல்டாஸ் லிமிடெட் மற்றும் மூன்றாவது நிதித் துறையைச் சேர்ந்த L&T ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகும். மேலும் இந்த 3 பங்குகளின் இலக்கு விலை, ஸ்டாப் லாஸ் மற்றும் முழுமையான விவரங்கள் குறித்து விரிவாக ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் வழங்கியுள்ளது.
டிஎல்எஃப் லிமிடெட்: லார்ஜ்கேப் வகையைச் சேர்ந்த டிஎல்எஃப் லிமிடெட் பங்கு விலை கடந்த வர்த்தகத்தில் 3.6 சதவீதம் அதிகரித்து ரூ. 866ல் முடிந்தது. இந்தப் பங்கிற்கு ரூ. 888 இலக்கு விலையுடன் ரூ. 848 ஸ்டாப் லாஸ் ஆக பரிந்துரைக்கப்படுகிறது.

அதேபோல், கடந்த ஓராண்டில், இந்த பங்கு அதன் பங்குதாரர்களுக்கு 63 சதவீத லாபத்தை அளித்துள்ளது. மேலும் இந்த பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ. 967.60 ஆகவும், 52 வாரங்களில் குறைந்த விலை ரூ. 512.55 ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,14,000 கோடியாகவும் உள்ளது.
வோல்டாஸ் லிமிடெட்: மிட் கேப் வகையைச் சேர்ந்த வோல்டாஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வர்த்தகத்தில் 3.89 சதவீதம் அதிகரித்து ரூ. 1925 இல் முடிந்தது. இந்தப் பங்கிற்கு ரூ. 1975 இலக்கு விலையாகவும், ரூ.1895 ஸ்டாப் லாஸ் ஆக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில், இந்த பங்கு அதன் பங்குதாரர்களுக்கு 115 சதவீத லாபத்தை அளித்துள்ளது. மேலும் இந்த பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ. 1935 இல், 52 வார குறைந்தபட்ச விலை ரூ. 806.70 ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 63,580 கோடி ஆகவும் உள்ளது.
எல்&டி ஃபைனான்ஸ்: மிட் கேப் வகையைச் சேர்ந்த எல் அண்ட் டி ஃபைனான்ஸ் லிமிடெட் பங்கு விலை கடந்த வர்த்தகத்தில் 2.09 சதவீதம் உயர்ந்து ரூ. 178ல் முடிந்தது. இந்தப் பங்கிற்கு ரூ. 186 இலக்கு விலையுடன் ரூ.174 ஸ்டாப் லாஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில், இந்த பங்கு அதன் பங்குதாரர்களுக்கு 6 சதவீத லாபத்தை அளித்துள்ளது. மேலும் இந்த பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ. 194.25 ஆகவும், 52 வாரங்களில் இல்லாத அளவு ரூ. 144.60 ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 44,350 கோடி ஆகும்.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications