ஹெச்1பி விவகாரத்தை தூக்கிப்போடுங்க.. AI யுகத்தில் இப்படியொரு சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்தியாவில் டெக் துறை வேகமாக வளர்ச்சி பாதையில் இருக்கும் இதேவேளையில், மிகப்பெரிய அளவிலான தொழில்நுட்ப மாற்றத்தையும் எதிர்கொண்டு வருகிறது. இப்படியிருக்கையில் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் டெக் துறையில் ஏற்படும் தடுமாற்றத்தை சமாளிக்க இத்துறையில் செய்திருக்கும் முதலீட்டை டேட்டா சென்டர் நிறுவனங்களுக்கு மாற்றுவார்கள் என தெரிகிறது. ஏதற்காக மாற்ற வேண்டும்..? இந்தியாவில் டேட்டா சென்டர் வர்த்தகத்தை தொடர்புடை பங்குகள் என்னென்ன..?

இந்தியாவின் டிஜிட்டல் யுகத்தின் மறைமுக தொழிற்சாலைகளாக டேட்டா சென்டர்கள் உருவெடுத்துள்ளன. அனைத்து டிஜிட்டல் சேவைகளுக்கும் தகவல்களை சேமித்து செயல்படுத்த டேட்டா சென்டர் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் டிஜிட்டல் சேவை பயன்பாடு அதிகரித்துள்ளது, இச்சேக்காக கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் தினசரி உருவாகும் டிஜிட்டல் கண்டென்ட் என டேட்டா சென்டர்களுக்கான தேவை வேகமாக உயர்ந்துள்ளது.

ஹெச்1பி விவகாரத்தை தூக்கிப்போடுங்க.. AI யுகத்தில் இப்படியொரு சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..!!

சமீபத்தில் கொலியர்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2018-இல் 0.3 ஜிகாவாட் (GW) இருந்த இந்தியாவின் டேட்டா சென்டர் திறன், ஏப்ரல் 2025-இல் 1.26 GW ஆக உயர்ந்துள்ளது. FY17-இலிருந்து 30 மடங்கு அதிகரித்த தரவு பயன்பாடு, ஸ்மார்ட்போன் பயன்பாடு, OTT தளங்கள், டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் இ-காமர்ஸ் வளர்ச்சியே டேட்டா சென்டர் துறை வளர்ச்சிக்கான முதன்மையான காரணங்களாக உள்ளது. இதேபோல் ஜெஃப்ரீஸ் வெளியிட்டுள்ள கணிப்பின் படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் டேட்டா சென்டர் திறன் 8 GW ஆக ஐந்து மடங்கு உயரும், இதற்கு 30 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும், தோராயமாக ரூ.2.6 லட்சம் கோடி.

டேட்டா சென்டர் விரிவாக்கத்தின் லாபம்
இந்தியாவின் டேட்டா சென்டர் திறன் விரிவாக்கத்தின் மூலம் இத்துறைக்கு மட்டும் அல்லாமல் பிற துறைகளும் வாய்ப்புகளை பெறும். உதாரணமாக இந்த 30 பில்லியன் டாலர் முதலீட்டு கணிப்பில் ரியல் எஸ்டேட் (6 பில்லியன் டாலர்), மின்சார மற்றும் எனர்ஜி அமைப்புகள் (10 பில்லியன் டாலர்), ரேக்குகள் (7 பில்லியன் டாலர்), கூலிங் அமைப்புகள் (4 பில்லியன் டாலர்) மற்றும் நெட்வொர்க் உள்கட்டமைப்பு (1 பில்லியன் டாலர்) போன்ற துறைகளிலும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்தியாவின் டேட்டா சென்டர் வளர்ச்சி, உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கியமானதாக உள்ளது. ஆனால் இந்தியாவில் இத்துறையின் வளர்ச்சி இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்பது தான் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

இந்திய மக்கள் பொருத்த வரையில் டேட்டா சென்டர் பங்குகள் என்றாலே அனந்த் ராஜ், நெட்வெப் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ்/ஜியோ, பார்தி ஏர்டெல் அல்லது அதானி என்டர்பிரைசஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தான் பிரபலமாக உள்ளது. ஆனால், தற்போது நாம் பார்க்கப்போவது டேட்டா சென்டர் வளர்ச்சியால் பயன்பெறும் சில 'மறைமுக' பங்குகள்.

டேட்டா சென்டர் என்றால் வெறுமென ஒரு நிறுவனம் மொத்த கட்டமைப்பையும் உருவாக்கிட முடியாது. இதில் பல உள்கட்டமைப்புகள் உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். எப்படி நாட்டின் உள்கட்டமைப்பு துறை வளர்ச்சிக்கு சிமெண்ட், ஸ்டீல் போன்ற துறைகள் முக்கியமாக உள்ளதோ, இதேபோல் இந்த டேட்டா சென்டர் நிறுவவனங்களுக்கு சேவை அளிக்கும், சப்ளையராக இருக்கும் நிறுவனங்களும் இந்த வளர்ச்சியில் பலன் பெறும். அப்படி பலன் பெறும் 3 நிறுவனங்களை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ஹெச்1பி விவகாரத்தை தூக்கிப்போடுங்க.. AI யுகத்தில் இப்படியொரு சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..!!

கிர்லோஸ்கர் ஆயில் இஞ்சின்ஸ்:
கிர்லோஸ்கர் ஆயில் இஞ்சின்ஸ், டேட்டா சென்டர்களுக்கு ஜெனரேட்டர்கள் மற்றும் தீயணைப்பு பம்புகள் வழங்குவதில் முன்னணியில் உள்ளது, இவை தடையில்லா எனர்ஜி பேக்அப் அளிப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் ஜெனரேட்டர்கள், பேக்அப் தீர்வுகள், ஜெனரேட்டர் மின்சார அமைப்புகள், ரெட்ரோஃபிட் எமிஷன் கன்ட்ரோல் சாதனங்கள் மற்றும் டூயல்-ஃப்யூல் கிட்கள் ஆகியவற்றை தயாரித்து டேட்டா சென்டர்களுக்கு சப்ளை செய்து வருகிறது.

இந்த நிலையில் Q1FY26-இல் இந்நிறுவன வருவாய் 8 சதவீதம் உயர்ந்து ரூ.1760 கோடியாக உள்ளது, இதில் B2B பிரிவு வருவாய் 9 சதவீதம் உயர்ந்து ரூ.1270 கோடியாக உள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் (PAT) 14 சதவீதம் குறைந்து ரூ.130 கோடியாக உள்ளது. இந்நிறுவனத்தின் சராசரி வருமான விகிதங்கள் RoE 15.4 சதவீதம் மற்றும் RoCE 13.7 சதவீதமாக உள்ளது. விலை-லாப விகிதம் 31.3x ஆக உள்ளது, இது 10 ஆண்டு சராசரி 20.5x-ஐ விட உயர்ந்தது, ஆனால் துறை சராசரி 44.12x-ஐ விட குறைவு.

செப்டம்பர் 24ஆம் தேதி கிர்லோஸ்கர் ஆயில் இஞ்சின்ஸ் பங்குகள் 1.80 சதவீதம் உயர்ந்து 970.75 ரூபாயாக உள்ளது. கடந்த 6 மாதத்தில் 30 சதவீத வளர்ச்சியும், ஒரு வருடத்தில் 20 சதவீத சரிவையும் பதிவு செய்துள்ளது.

பஜெல் ப்ராஜெக்ட்ஸ் (Bajel Projects):
பஜாஜ் குழுமத்தின் ஒரு பிரிவாக இருக்கும் பஜெல் ப்ராஜெக்ட்ஸ், இந்தியாவின் எனர்ஜி உள்கட்டமைப்பு துறையில் செயல்படுகிறது, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் இன்ஜினீயரிங், கொள்முதல் மற்றும் கட்டுமான (EPC) சேவைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் எனர்ஜி உள்கட்டமைப்பில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளது.

Bajel Projects நிறுவனத்தின் சிறப்பு என்னவென்றால் எக்ஸ்ட்ரா-ஹை வோல்டேஜ் (EHV) டிரான்ஸ்மிஷன் லைன்கள், சப்ஸ்டேஷன்கள் மற்றும் அண்டர்கிரவுண்ட் கேபிளிங் வழங்குகிறது தான். இந்தியாவில் சுமார் 19+ மாநிலங்களில் 8,686 சர்க்யூட் கிலோமீட்டர் டிரான்ஸ்மிஷன் லைன்களை கட்டியுள்ளது மற்றும் 43 AIS/GIS சப்ஸ்டேஷன் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதன் EPC நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, டேட்டா சென்டர்களுக்கு முழு எலெக்ட்ரிஃபிகேஷன் தீர்வுகளை வழங்குகிறது.

Bajel Projects நிறுவனம் Q1FY26-இல் ஆப்ரேட்டிங் வருவாய் 19 சதவீதம் உயர்ந்து ரூ.6.1 பில்லியனாக உள்ளது. EBITDA 33 சதவீதம் உயர்ந்து ரூ.250 மில்லியனாக உள்ளது, மார்ஜின் 40 அடிப்படை புள்ளிகள் விரிவடைந்துள்ளது. PAT 39.8 சதவீதம் குறைந்து ரூ.33 மில்லியனாக உள்ளது. ஜூன் 30, 2025 வரை நிறைவேற்றப்படாத ஆர்டர் புத்தகம் ரூ.3610 கோடியாக உள்ளது.

Bajel Projects பங்குகள் இன்று 0.89 சதவீதம் உயர்ந்து 214.30 ரூபாயாக உள்ளது. கடந்த 6 மாதத்தில் 21.66 சதவீத வளர்ச்சியும், ஒரு வருடத்தில் 11 சதவீத சரிவையும் பதிவு செய்துள்ளது.

ஹெச்1பி விவகாரத்தை தூக்கிப்போடுங்க.. AI யுகத்தில் இப்படியொரு சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..!!

KRN ஹீட் எக்ஸ்சேஞ்சர்:
KRN ஹீட் எக்ஸ்சேஞ்சர் நிறுவனம் டேட்டா சென்டர்கள் தொடர்ந்து செயல்பட உதவியாத இருக்கும் ஹீட்டிங், வென்டிலேஷன், ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெஃப்ரிஜரேஷன் (HVAC&R) துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இது 100 சதவீதம் B2B வணிக மாதிரியில் செயல்படுகிறது, முதன்மையாக ஒரிஜினல் இக்விப்மெண்ட் உற்பத்தியாளர்களுக்கு (OEMs) வழங்குகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் பட்டியலில் டைக்கின் ஏர் கண்டிஷனிங், ஸ்னைடர் எலெக்ட்ரிக், ப்ளூ ஸ்டார் மற்றும் கிர்லோஸ்கர் சில்லர்ஸ் ஆகியவை அடங்கும்.

இந்நிர்வாகத்தின் மதிப்பீட்டின்படி, கூகுளின் ரூ.5000 கோடி டேட்டா சென்டர் முதலீடு, HVAC பிரிவுக்கு ரூ.100 கோடி வாய்ப்பை உருவாக்கும்.

KRN ஹீட் எக்ஸ்சேஞ்சர் பங்குகள் இன்று 0.68 சதவீதம் உயர்ந்து 860.00 ரூபாயாக உள்ளது. கடந்த 6 மாதத்தில் 7.50 சதவீத சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் டேட்டா சென்டர் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கும் வேளையில் இத்துறையுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் வர்த்தகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் பலன் பெற வாய்ப்பு இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்களுக்கு இத்துறை முதலீடுகள் நீண்ட கால அடிப்படையில் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

இதேபோல் இத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யும் போது அனைத்து அடிப்படை நிதி தரவுகளையும் ஆய்வு செய்து அதன் பின்பு முதலீடு செய்யவும். மேலும் முதலீட்டுக்கு முன் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி முடிவுகளை எடுக்கவும். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் இதில் எந்த நிறுவன பங்குகளையும் வாங்க பரிந்துரைக்கவில்லை.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+