வரும் வாரத்தில் இந்திய பங்கு சந்தையில் 4 புதிய நிறுவனங்கள் பங்கு சந்தையில் நுழையவுள்ளன.
அதில் குளோபல் ஹெல்த், பிகாஜி உணவுகள், பியூசன் மைக்ரோ பைனான்ஸ், டிசிஎஸ் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும்.
இந்த 4 நிறுவனங்களும் 4500 கோடி ரூபாய் தங்களது பொது பங்கு வெளியீடு மூலம் திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த நேரம் எப்போது?
இதில் டிசிஎக்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடானது அக்டோபர் 31 அன்று தொடங்கவுள்ளது. இது நவம்பர் 2 அன்று முடிவடையவுள்ளது.
இதே பியூசன் மைக்ரோ பைனான்ஸ் நவம்பர் 2 - 4 வரையிலான காலகட்டத்தில் தனது பங்குகளை வெளியிட உள்ளது.
பிகாஜி ஃபுட்ஸ் நிறுவனம் நவம்பர் 3 அன்று பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இது நவம்பர் 7 அன்று முடிவடையவுள்ளது. இதே தேதியில் குளோபல் ஹெல்த் நிறுவனமும் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.
மற்ற ஐபிஓ
இது தவிர யுனிபார்ட்ஸ் இந்தியா மற்றும் ஃபைவ் ஸ்டார் பிசினஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் நவம்பர் மாதத்தில் தங்களது பங்கு வெளியீட்டினை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021ல் மொத்தம் 63 நிறுவனங்கள் தங்களது பங்கு வெளியீட்டினை செய்தன. இதன் மூலம் 1.19 லட்சம் கோடி ரூபாய் நிதியினை திரட்டின.
குளோபல் ஹெல்த் விவரங்கள்
குளோபல் ஹெல்த் நிறுவனம் நவம்பர் 3 அன்று பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இது நவம்பர் 7 அன்று முடிவடையவுள்ளது. முதலீட்டாளார்கள் குறைந்தபட்சம் 44 குறைந்தபட்சம் பங்குகளை வாங்கலாம். இந்த ஐபிஓ மூலம் 500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும், இந்த பங்கு வெளியீட்டின் விலை 319 - 336 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிசிஎக்ஸ் சிஸ்டம்ஸ்
டிசிஎக்ஸ் சிஸ்டம்ஸ் புதிய வெளியீட்டின் மூலம் 400 கோடி ரூபாய் நிதியினை திரட்ட உள்ளதாகவும், ஆஃபர் ஃபார் சேல் மூலம் 100 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் 197 - 207 ரூபாயாக விலையினை நிர்ணயம் செய்துள்ளது.
பிகாஜி ஃபுட்ஸ்
டிசிஎக்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடானது அக்டோபர் 31 அன்று தொடங்கவுள்ளது. இது நவம்பர் 2 அன்று முடிவடையவுள்ளது.இதன் வெளியீட்டு ப்விலை 197 - 207 ரூபாயாகும். நவம்பர் 7 அன்று அதன் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யவுள்ளது. இது 500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
பியூசன் மைக்ரோ பைனான்ஸ்
பியூசன் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் 1104 கோடி ரூபாய் நிதி திட்டமிட்டுள்ளது. இதில் 600 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டு மூலம் திரட்டவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் விலை 350 - 368 ரூபாயாகும். இதே ஆஃபர் ஃபார் சேல் மூலம் 13,695,466 பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிகிறது.
சிறு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பா?
பொதுவாக ஐபிஓ என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு என்று கூறப்படும். ஆக மேற்கண்ட 4 நிறுவனங்களும் சிறு முதலீட்டாளார்களுக்கும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனினும் இதில் முதலீடு செய்யும் முன்னர் நிறுவனங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications