இந்த 5 FMCG பங்குகளை வாங்கி போடலாம்.. 28% வரையில் லாபம் கிடைக்கலாம்.. தரகு நிறுவனம் கணிப்பு!

இந்திய சந்தையில் நிலவி வரும் தடுமாற்றத்தின் மத்தியில் தற்போது பங்குகளை வாங்கலாமா? என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. குறிப்பாக கடந்த 4 சந்தை அமர்வுகளாகவே தொடர்ந்து இந்திய சந்தையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில் இந்த கேள்வி எழுவது நியாயமான ஒரு விஷயம் தான்.

ஆனால் சந்தையில் என்னதான் ஏற்ற இறக்கம் என்பது இருந்தாலும், இன்றும் லாபம் பார்க்கும் முதலீட்டாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தரமான பங்குகள் விலை குறையும்போது, நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

ஷேர்கான் பரிந்துரையா?

ஷேர்கான் பரிந்துரையா?

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஷேர்கான் நிறுவனத்தின் பங்கு பரிந்துரைகளை தான். 5 லார்ஜ் கேப் மற்றும் மிட்கேப் எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இது எந்த அளவுக்கு ஏற்றம் காணும்? இதன் இலக்கு விலை எவ்வளவு? என்னென்ன பங்குகள் பட்டியலில் உள்ளன, வாருங்கள் பார்க்கலாம்.

பங்குகள்?

பங்குகள்?

இந்த பங்குகள் அனைத்தும் எஃப். எம்.சி.ஜி துறையை சார்ந்த பங்குகளாகும்.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

கோத்ரேஜ் கன்சியூமர் ப்ராடக்ஸ்

இமாமி லிமிடெட்

டாபர் இந்தியா

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகளை தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பங்குகள் அதிகபட்சம் 28% வரையில் லாபம் கொடுக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் இலக்கு விலையினை ஒரு பங்குக்கு 2900 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ள நிலையில், இதன் தற்போதைய சந்தை விலையானது 2493.30 என்ற லெவவில் காணப்படுகின்றது. இது ஒரு லார்ஜ் கேப் நிறுவனமாகும். இந்த பங்கு 16% வரையில் லாபம் கொடுக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. இதன் சந்தை மூலதனம் 5,85,823.59 கோடி ரூபாயாகும்.

கடந்த ஓராண்டில் இப்பங்கானது 10% லாபம் கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 11% லாபத்தினை கொடுத்துள்ளது.

இமாமி லிமிடெட்

இமாமி லிமிடெட்

இமாமி லிமிடெட் நிறுவனத்தின் இலக்கு விலையை தரகு நிறுவனம் 500 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் கடந்த அமர்வின் விலையானது 391.25 ரூபாயாகவும் ஒருந்தது. இது 28% வரையில் வருமானம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சந்தை மதிப்பானது 17,391.60 கோடி ரூபாயாகும்.

இப்பங்கானது கடந்த 3 மாதங்களில் 9% சரிவினைக் கண்டுள்ள நிலையில், கடந்த 1 ஆண்டில் 20% சரிவிலும், 3 ஆண்டுகளில் 45% லாபமும் கொடுத்துள்ளது.

டாபர் இந்தியா

டாபர் இந்தியா

டாபர் இந்தியா பங்கு விலையினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம் அதன் இலக்கு விலையை 640 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த பங்கும் லார்ஜ் கேப் நிறுவனமாகும். இது 20% வரையில் லாபம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சந்தை மூலதனம் 94,4,61.57 கோடி ரூபாயாக உள்ளது.

இப்பங்கானது 1 ஆண்டில் 3% சரிவினைக் கண்டும், 3 ஆண்டுகளில் 5% ஏற்றம் கண்டும், 5 ஆண்டுகளில் 63% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.

கோத்ரேஜ் கன்சியூமர்

கோத்ரேஜ் கன்சியூமர்

கோத்ரேஜ் கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலையானது, ஒரு பங்குக்கு 1055 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான இது தற்போது 929.45 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இப்பங்கானது 14% வரையில் லாபம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சந்தை மூலதனம் 95,054.42 கோடி ரூபாயாக உள்ளது.

இது கடந்த 3 ஆண்டுகளில் 10% ஏற்றத்திலும், 1 ஆண்டில் 19% ஏற்றத்திலும், 3 ஆண்டுகளில் 47% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இலக்கு விலையானது 5285 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் கடந்த அமர்வின் விலையானது 4482.45 ரூபாயாகும். இப்பங்கானது 18% லாபம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சந்தை மதிப்பானது 1,07,968.01 கோடி ரூபாயாகும்.

இப்பங்கானது கடந்த 3 மாதங்களில் 7% ஏற்றத்திலும், 1 ஆண்டில் 28% லாபத்திலும், 3 ஆண்டுகளில் 46% லாத்திலும் காணப்பட்டது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+