சர்வதேச சந்தையின் மந்தமான வர்த்தகம், அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட நிலையற்ற வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாகப் புதன் கிழமை இந்திய பங்கு சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிந்தன.
அதுமட்டும் இல்லாமல் வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி மற்றும் புதன்கிழமை புனித வெள்ளி போன்ற காரணங்களால் இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை என்பதால் வரும் வாரம் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
பிராட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பிராட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன பங்குகளை 4,940 முதல் 4,970 ரூபாய் வரை வாங்கினால் அடுத்த வாரம் 5,210 ரூபாய் வரை உயரும். இதுவே சந்தை ரிஸ்க் காரணங்களால் 4,785 ரூபாய்க்கும் கீழாகச் சரியும் போது விற்றுவிடுவது நல்லது.
மகேந்திரா & மகேந்திரா ஃபினான்ஷியல் சர்வீசஸ்
நிதி சேவைகள் நிறுவனமான மகேந்திரா & மகேந்திரா ஃபினான்ஷியல் சர்வீசஸ் பங்குகளை 460 முதல் 464 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 488 ரூபாய் அடுத்த வாரத்தில் உயரும். இதுவே சந்தை ரிஸ்க் காரணங்களால் 450 ரூபாய்க்கும் கீழாகச் சரியும் போது விற்றுவிடுவது நல்லது.
முத்தூட் ஃபினான்ஸ்
நிதி சேவைகள் நிறுவனமான முத்தூட் ஃபினான்ஸ் பங்குகளை 404 ரூபாய் முதல் 408 ரூபாய்க்குள் வாங்கினால் 434 ரூபாய் வரை உயரும். இதுவே சந்தை ரிஸ்க் காரணங்களால் 395 ரூபாய்க்கும் கீழாகச் சரியும் போது விற்றுவிடுவது நல்லது.
பால்ராம்பூர் சினி மில்ஸ் லிமிடெட்
இந்தியாவின் மிகப் பெரிய சர்க்கரை உற்பத்தி நிறுவனமான பால்ராம்பூர் சினி மில்ஸ் லிமிடெட் பங்குகளை 75 ரூபாய் முதல் 76.5 ரூபாயாக இருக்கும் போது அல்லது 80 ரூபாயாக லாபம் அளிக்கும் போது விற்றுவிடுவது நல்லது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
ஆர்காம் நிறுவனம் டிடிஎச் சேவையில் கேஷ்பேக் சலுகைகளை வழங்கி பெரிய அளவில் வெற்றி அடையும் முடியும் என்று எதிர்பார்த்த திட்டம் தோல்வியில் முடிந்ததால் பங்குகள் மேலும் சரிய துவங்கியுள்ளது. 21 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை வாங்கி 23 ரூபாய் லாபம் அளித்து இருந்தாலே இந்தப் பங்குகளை விற்றுவிடுவது நல்லது.
நீண்ட கால மூலதன ஆதாயங்கள்
ஏப்ரல் 1ம் தேதி முதல் வாங்கும் மற்றும் விற்கும் பங்குகளில் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக லாபம் கிடக்கும் எனில் அதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
பொருத்துத் துறப்பு
இங்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வல்லுநர்கள் கருத்தாகும். இதில் முதலீடு செய்வது சந்தை மற்றும் முதலீட்டாளரின் ரிஸ்க்கிற்கு உட்பட்டது. எந்த வகையிலும் இந்த இணையதளமும், ஆசிரியரும், நிர்வாகமும் இதனால் ஏற்படும் நட்டத்திற்கோ லாபத்திற்கும் பொறுப்பேற்காது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications