5 வருடத்தில் 550% லாபம் கொடுத்த Titan மல்டிபேக்கர் பங்கு.. 1:4 போனஸ் பங்குகளை அறிவித்தது!

டைட்டன் என்ற பெயரால் இது டாடா குழும நிறுவனம் என நினைக்க வேண்டாம், டைட்டன் பியோடெக் நிறுவனம் கடந்த சில நாட்களாகப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒரு நிறுவனமாக இருக்க முக்கிய காரணம் இந்நிறுவனம் அறிவித்துள்ள 1:4 போனஸ் பங்குகள் தான்.

பொதுவாகப் பங்குச்சந்தை முதலீட்டில் மல்டிபேக்கர் பங்குகளை கண்டுப்பிடிப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம், அப்படி கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிறுவனம் போனஸ் பங்குகள் அறிவிப்பது என்பது அரிதிலும் அரிதான விஷயம் என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதோடு போனஸ் பங்குகளுக்கான ரெக்கார்ட் தேதி நெருங்கி வருவதும் இதற்கு முக்கியமான காரணம்.

5 வருடத்தில் 550% லாபம் கொடுத்த Titan மல்டிபேக்கர் பங்கு.. 1:4 போனஸ் பங்குகளை அறிவித்தது!

டைட்டன் பியோடெக் நிறுவனம் பங்கு விலை கடந்த 5 வருடத்தில் வெறும் 61 ரூபாயில் இருந்து யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 408.50 ரூபாயாக உயர்ந்து சுமார் 550 சதவீத லாபத்தை அதன் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 65 சதவீதமும், 2026ல் மட்டும் 90 சதவீத லாபத்தை டைட்டன் பியோடெக் நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது. இதேபோல் மும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து ஈவுத்தொகை கொடுக்கும் நிறுவனங்களில் மிகவும் முக்கியமான ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது டைட்டன் பியோடெக்.

Also Read

2010ஆம் ஆண்டில் இருந்து 2012 மற்றும் 2019 ஆகிய இரண்டு வருடங்களைத் தவிர அனைத்து வருடத்திலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை கொடுத்துள்ளது.

கடைசியாக 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈவுத்தொகை அளித்தது. மேலும் 2010ல் 1:5 அடிப்படையில் பங்கு பிரிப்பை அறிவித்த டைட்டன் பியோடெக் நிறுவனம் தற்போது 1:4 போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது.

Recommended For You

போனஸ் பங்குகள்

டைட்டன் பயோடெக் (Titan Biotech) நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு 1:4 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, ஏற்கெனவே டைட்டன் பயோடெக் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு 4 பங்குகளுக்கும் கூடுதலாக 1 போனஸ் பங்கு இலவசமாக வழங்க உள்ளது.

பொதுவாக நிறுவனங்கள் போனஸ் பங்குகளை வழங்குவதற்குத் தகுதியான பங்கு முதலீட்டாளர்களைக் கணக்கெடுக்க ரெக்கார்டு தேதி (Record Date) என்பதை அறிவிக்கும், அதாவது இந்த தேதியில் டைட்டன் பயோடெக் பங்குகளை வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே போனஸ் பங்குகளை அளிக்கப்படும். இதற்காக டைட்டன் பயோடெக் அக்டோபர் 23 ஆம் தேதியை ரெக்கார்டு தேதியாக நிர்ணயம் செய்துள்ளது.

டைட்டன் பயோடெக் நிறுவனம் மொத்தம் 1,03,29,625 போனஸ் பங்குகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது, அதாவது 2 ரூபாய் முக மதிப்பு கொண்ட 4 பங்குகளுக்கு ஒரு போனஸ் பங்குகளை வழங்கக் கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+