6 தரமான லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் தற்போது 52 வார சரிவில் காணப்படுகின்றன. இந்த பங்குகளில் சிப்லா, இன்ஃபோசிஸ், கோடக் மஹிந்திரா வங்கி, விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டாடா பவர் லிமிடெட் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.
இன்ஃபோசிஸ்: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் பங்கு விலையானது சற்று குறைந்து 1422.10 ரூபாயாக கடந்த அமர்வில் காணப்பட்டது. இதன் 52 வார உச்ச விலையானது 1856.95 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலையானது 1355.50 ரூபாயாகவும் உள்ளது. இதன் சந்தை மதிப்பானது 5,89,966.72 கோடி ரூபாயாக உள்ளது. இப்பங்காகது கடந்த 1 ஆண்டில் 22% சரிவினைக் கண்டு, இதே 2 ஆண்டுகளில் 0.78% எனும் அளவுக்கு வருவாய் கொடுத்துள்ளது. இதே 3 ஆண்டுகளில் 142% எனும் அளவுக்கும் வருவாய் கொடுத்துள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கி: தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலையானது, கடைசியாக 1757.30 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது, 1630 ரூபாயாகவும், இதே 52 வார உச்ச விலையானது 1997 ரூபாயாகும். இதன் சந்தை மதிப்பானது 3,49,088.50 கோடி ரூபாயாகும். இப்பங்கானது க்லடந்த 1 ஆண்டில் 1.25% சரிவினைக் கண்டும், 2 ஆண்டுகளில் 0.63% ஆகவும் 3 ஆண்டுகளில் 54% எனும் அளவுக்கு வருவாய் கொடுத்துள்ளது.
விப்ரோ: ஐடி நிறுவனமான விப்ரோ லார்ஜ் கேப் நிறுவனமாகும். இதன் பிஎஸ்இ-யில் 366.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 355 ரூபாயாகும். இதே 52 உச்ச விலை 598.95 ரூபாயாகும். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 2,01,241.94 கோடி ரூபாயாகும். இந்த பங்கானது 38% சரிவிலும், கடந்த 2 ஆண்டுகளில் 14% சரிவிலும், 3 ஆண்டுகளில் 103% ஏற்றத்திலும் கஆணப்படுகின்றது.

ஏசியன் பெயிண்ட்ஸ்: லார்ஜ் கேப் நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் கடந்த அமர்வில் 2809.95 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது 2560.25 ரூபாயாக உள்ளது. இதே 52 வார உச்ச வியையானது 3590 ரூபாயாகும். இதன் சந்தை மதிப்பானது 2,69,472.23 கோடி ரூபாயாகும். இதன் பங்கு விலையானது கடந்த 1 வருடத்தில் 10% சரிவினைக் கண்டும், 2 வருடத்தில் 7 ஏற்றத்திலும், 3 வருடத்தில் 84% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.
டாடா பவர் நிறுவனம்: கடந்த அமர்வில் டாடா பவர் நிறுவனம் மிட் கேப் நிறுவனமாகும். இது கடந்த அமர்வில் இப்பங்கின் விலையானது 195.15 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலையாக 182.45 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலையானது 298 ரூபாயாகும். இதன் சந்தை மூலதனம் 62,357.05 கோடி ரூபாயாகும். இது 1 வருடத்தில் 32% சரிவிலும், 2 வருடத்தில் 86% ஏற்றத்திலும், 3 வருடத்தில் 546% ஏற்றத்திலும் காணப்படுகிறது.
சிப்லா: பார்மா நிறுவனமான சிப்லா லார்ஜ் கேப் நிறுவனமான 892.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 852 ரூபாயாகும். இதன் 52 உச்ச விலையானது 1185.20 ரூபாயாகவும் உள்ளது. இதன் சந்தை மதிப்பானது 72,054.33 கோடி ரூபாயாகும். இந்த பங்கானது 1 வருடத்தில் 13% சரிவிலும், 2 வருடத்தில் 6% ஏற்றத்திலும், 3 வருடத்தில் 98% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications