இந்திய பங்கு சந்தையினை பொறுத்தவரையில் டாலரின் மதிப்பு உச்சம் தொட்டு வரும் நிலையில், பங்கு சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது.
டாப் 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் அதன் சந்தை மதிப்பில் 1,68,260.37 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது.
இதில் முதலாவதாக அதிக இழப்பினை கண்டிருப்பது முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் தான்.
சென்செக்ஸ் சரிவு
கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 721.06 புள்ளிகள் அல்லது 1.32 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு, பணவீக்க அச்சம், உக்ரைன் பிரச்சனை, பத்திர சந்தை என பல காரணிகளுக்கு மத்தியில் பங்கு சந்தையானது சரிவினைக் கண்டுள்ளது.
டிசிஎஸ்
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 99,270.07 கோடி ரூபாய் குறைந்து, 10,95,355.32 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இது ஜூன் காலாண்டில் அதன் வருவாயினை தவறவிட்ட நிலையில் தொடர்ந்து சரிவினைக் கண்டது.
இன்ஃபோசிஸ்
மற்றொரு ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 35,133.64 கோடி ரூபாய் குறைந்து, 6,01,900.14 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு, 18,172.43 கோடி ரூபாய் குறைந்து, 7,57,659.72 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
எஸ்பிஐ & ஹெச் டி எஃப் சி
எஸ்பிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 8433.76 கோடி ரூபாய் குறைந்து, 4,27,488.90 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே நிதி நிறுவனமான ஹெச் டி எஃப் சியின் சந்தை மூலதனம் 4091.62 கோடி ரூபாய் குறைந்து, 4,02,121.99 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 3158.85 கோடி ரூபாய் குறைந்து, 5,22,498.11 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
எனினும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 17,128.52 கோடி ரூபாய் அதிகரித்து, 6,03,551.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேபோல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 6801.72 கோடி ரூபாய் அதிகரித்து, 16,24,681.08 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஐடிசியின் சந்தை மதிப்பானது 1318.80 கோடி ரூபாய் அதிகரித்து, 3,62,327.81 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 316.25 கோடி ரூபாய் அதிகரித்து, 4,48,157.71 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
டாப் 10 நிறுவனங்கள்
டிசிஎஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எல்ஐசி, எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி மற்றும் ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications