2023ம் ஆண்டில் இதுவரை நிறுவனங்கள் ஐபிஓ வாயிலாக சுமார் ரூ.41,000 கோடி திரட்டி உள்ளன. இந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் (அக்டோர்ப-டிசம்பர்) இதுவரை 21 ஐபிஓ-க்கள் நடந்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள் ஐபிஓ-வில் நிதி திரட்ட தயாராக உள்ளன.
அதில் வரும் வாரத்தில் மட்டும் மொத்தம் 6 நிறுவனங்கள் ஐபிஓ-வில் களம் இறங்கின்றன. இதில் மெயின்போர்டில் 2, எஸ்.எம்.இ. பிரிவில் 4 ஐபிஓ-க்களும் நடைபெற உள்ளது. ஐபிஓ மேற்கொள்ளும் 6 நிறுவனங்கள் குறித்து சிறு பார்வை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஷெல்டர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
வீட்டு கடன் வழங்கும் இந்தியா ஷெல்டர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ இம்மாதம் 13ம் தேதி தொடங்கி 15ம் தேதி நிறைவடையும். இந்நிறுவனம் ஐபிஓ-வில் மொத்தம் 2.43 கோடி பங்குகளை விற்பனை செய்து ரூ.1,200 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இப்பங்கின் வெளியீட்டு விலை ரூ.469-493 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபிஓ-வில் குறைந்தபட்சம் 30 பங்குகள் மற்றும் அதன் பிறகு 30 பங்குகளின் மடங்குகளில் பங்கு கோரி விண்ணப்பிக்கலாம்.
டிஓஎம்எஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
டிஓஎம்எஸ் (DOMS) இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ஸ்டேஷனரி மற்றும் கலைப்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வரும் புதன்கிழமை தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை நிறைவடையும். இந்நிறுவனம் ஐபிஓ-வில் மொத்தம் 1.52 கோடி பங்குகளை விற்பனை வாயிலாக ரூ.1,200 கோடி திரட்டும் எண்ணத்தில் உள்ளது. இப்பங்கின் வெளியிட்டு விலை ரூ.750-790என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 18 பங்குகள் மற்றும் அதன் பிறகு 18 பங்குகளின் மடங்குகளில் பங்கு கோரி விண்ணப்பிக்கலாம்.
எஸ்.ஜே. லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்
எஸ்.ஜே. லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட் தனது வாடிக்கையாளர்களுக்கு லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் தீர்வுகளை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் ஐபிஓ வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை நிறைவடையும். இந்நிறுவனம் ஐபிஓ-வில் 38.4 லட்சம் பங்குகளை விற்பனை செய்து ரூ.48 கோடி திரட்ட உள்ளது. இப்பங்கின் வெளியீட்டு விலை ரூ.121-125 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1,000 பங்குகள் மற்றும் அதன் பிறகு 1,000 பங்குகளின் மடங்குகளில் பங்கு கோரி விண்ணப்பிக்கலாம்.
பிரஸ்டோனிக் என்ஜினீயரிங் லிமிடெட்
மெட்ரோல் ரயில் தயாரிப்பு மற்றும் இன்ஃப்ரா தொடர்பான தயாரிப்புகளை தயாரிப்பதில் பிரஸ்டோனிக் என்ஜினீயரிங் லிமிடெட் ஈடுபட்டுள்ளது.இந்நிறுவனத்தின் ஐபிஓ திங்கட்கிழமை (டிச.11) தொடங்கி புதன்கிழமை (டிச.13) நிறைவடையும். இந்நிறுவனம் ஐபிஓ-வில் 32.37 லட்சம் பங்குகளை விற்பனை செய்து ரூ.23.30 கோடி திரட்ட உள்ளது. இப்பங்கின் வெளியீட்டு விலை ரூ.72 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1,600 பங்குகள் மற்றும் அதன் பிறகு 1,600 பங்குகளின் மடங்குகளில் பங்கு கோரி விண்ணப்பிக்கலாம்.
ஸ்ரீ ஓஎஸ்எஃப்எம் இ மொபிலிட்டி
ஸ்ரீ ஓஎஸ்எஃப்எம் இ மொபிலிட்டி நிறுவனம் நம் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் இருக்கும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணியாளர் போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஐபிஓ-வில் 37.84 லட்சம் பங்குகளை விற்பனை செய்து ரூ.24.60 கோடி திரட்ட உள்ளது. இந்நிறுவனத்தின் ஐபிஓ வரும் வியாழக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை நிறைவடையும். பங்கின் வெளியீட்டு விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2,000 பங்குகள் மற்றும் அதன் பிறகு 2,000 மடங்குகளில் விண்ணப்பிக்கலாம்.
சியாராம் ரீசைக்கிளிங் இண்டஸ்ட்ரீஸ்
சியாராம் ரீசைக்கிளிங் இண்டஸ்ட்ரீஸ் பித்தளை சார்ந்த பாகங்கள் உற்பத்தி உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ஐபிஓ இம்மாதம் 14ம் தேதி தொடங்கி 18ம் தேதி முடிவடையும். இந்நிறுவனம் ஐபிஓ-வில் 49.92 லட்சம் பங்குகளை விற்பனை செய்து ரூ.22.96 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இப்பங்கின் வெளியீட்டு விலை ரூ.43-46 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.குறைந்தபட்சம் 3,000 பங்குகள் அதன் பிறகு 3,000 மடங்கில் விண்ணப்பிக்கலாம்.
ஆக்சென்ட் மைக்ரோசெல் லிமிடெட்
மருந்து துறையை சேர்ந்த ஆக்சென்ட் மைக்ரோசெல் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 8ம் தேதி தொடங்கியது. வரும் செவ்வாய்க்கிழமை நிறைவடைய உள்ளது. இந்நிறுவனம் ஐபிஓ-வில் 56 லட்சம் பங்குகளை விற்பனை செய்து ரூ.78.40 கோடி திரட்ட உள்ளது. இப்பங்கின் வெளியீட்டு விலை ரூ.133-140 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1,000 பங்குகள் அதன் பிறகு 1,000 பங்குகள் மடங்கில் விண்ணப்பிக்கலாம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications