இந்திய பங்கு சந்தையானது கடந்த வாரத்தில் பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் சற்று சரிவிலேயே முடிவடைந்தது. குறிப்பாக அதானி குழுமட்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் சர்ச்சைக்கு மத்தியில், அதானி குழுமத்தில் பங்குகள் கடும் சரிவினைக் கண்டன.
இதற்கிடையில் கடந்த வாரம் டாப் நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 49,231.44 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது, இதில் எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் கடும் சரிவினைக் கண்டுள்ளது.
டாப் கெயினர் & லூசர்ஸ்
30 பங்குகள் அடங்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் 159.18 புள்ளிகள் அல்லது 0.26% சரிவினை கடந்த வாரம் கண்டுள்ளது.
டாப் 10 நிறுவனங்களில் பார்தி ஏர்டெல், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்.டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் சரிவில் காணப்பட்டன. எனினும் டிசிஎஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஏற்றத்திலும் காணப்பட்டது.
சந்தை மதிப்பு ஏற்றம்?
ஏற்றத்தினை கண்டுள்ள 4 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 35,840.35 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. மற்ற ஆறு நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 49,231.44 கோடி ரூபாய் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
இதில் முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 15,918.48 கொடி ரூபாய் குறைந்து, 6,05,759.87 கோடி ரூபாய் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
இப்பங்கின் விலையானது 0.36% குறைந்து,கடந்த அமர்வில் 2577.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல்லின் சந்தை மதிப்பானது, 12,540.63 கோடி ரூபாய் அளவுக்கு சரிவினைக் கண்டு, 4,29,474.82 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இப்பங்கின் விலையானது 0.69% அதிகரித்து,கடந்த அமர்வில் 771.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஐடிசி
இதே ஐடிசியின் சந்தை மதிப்பானது 11,420.89 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்து, 4,60,932.38 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இப்பங்கின் விலையானது 0.77% குறைந்து, கடந்த அமர்வில் 371.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது, 6863.37 கோடி ரூபாய் குறைந்து, 5,95,885.63 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இப்பங்கின் விலையானது 0.81% குறைந்து,கடந்த அமர்வில் 853.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பானது 1255 கோடி ரூபாய் குறைந்து, 9,23,933.45 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இப்பங்கின் விலையானது 0.40% அதிகரித்து,கடந்த அமர்வில் 1657.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி
ஹெச்டிஎஃப்சி-யின் சந்தை மதிப்பானது 1233.07 கோடி ரூபாய் குறைந்து, 4,91,080 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இப்பங்கின் விலையானது 0.58% அதிகரித்து, கடந்த அமர்வில் 2688.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டிசிஎஸ்
அதேசமயம் டிசிஎஸ் நிறுவனம்19,612.52 கோடி ரூபாயாக சந்தை மதிப்பானது அதிகரித்து, 12,93,639.32 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இப்பங்கின் விலையானது 0.09% குறைந்து,கடந்த அமர்வில் 3537.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
எஸ்பிஐ
இதே எஸ்பிஐ-யின் சந்தை மதிப்பானது 7585.92 கோடி ரூபாய் அதிகரித்து, 4,93,486.41 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இப்பங்கின் விலையானது 0.41% அதிகரித்து, கடந்த அமர்வில் 553.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 4,938.8 கோடி ரூபாய் அதிகரித்து, 15,80,653.94 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இப்பங்கின் விலையானது 0.82% குறைந்து,கடந்த அமர்வில் 2336.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இன்போசிஸ்
இதே இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 3703.11 கோடி ரூபாய் அதிகரித்து, 6,76,638.36 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இப்பங்கின் விலையானது 0.52% குறைந்து,கடந்த அமர்வில் 1608.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications