அசோக் சூட்டா ஐடி துறையில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த பெயரினை அறிந்திருக்கலாம். ஐடி துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவராவர்.
இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு இரு மடங்கு லாபம் கொடுத்துள்ளது.
தொடர்ந்து ஐடி துறையில் நிலவி வரும் வளர்ச்சி விகிதத்திற்கு மத்தியில் இப்பங்கின் விலையானது, தொடர்ந்து உச்சம் தொட்டு
ஓராண்டு நிலவரம்
நடப்பு நிதியாண்டில் இதுவரையில் இப்பங்கின் விலையானது 115% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த மார்ச் 31, 2021ல் 540.10 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் 17, 2022 நிலவரப்படி இப்பங்கின் விலையானது 1159.45 ரூபாயாக இருந்தது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் குறியீடானது 17% மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்சம் தொட்ட லாபம்
டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது 16.1% அதிகரித்து, 48.92 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 42.15 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வருவாய் விகிதமானது டிசம்பர் காலாண்டில் 47.2% அதிகரித்து, 283.94 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 192.84 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஓ-வில் இருந்து என்ன நிலை?
இப்பங்கின் விலையானது அதன் பங்கு வெளியீட்டில் இருந்து பார்க்கும்போது கிட்டதட்ட 600% ஏற்றத்தில் காணப்படுகிறது. இதன் ஐபிஓ விலையானது 166 ரூபாயாகும். ஐடி துறையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது தொடர்ந்து உச்சம் தொடலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
டிஜிட்டல் சேவை
இந்த டெக்னாலஜி நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 96% அதன் டிஜிட்டல் வணிகத்தில் இருந்தே கிடைக்கிறது. இந்த நிறுவனம் டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் மற்றும் ஐடி ஆலோசனை, சேவைகளை வழங்கி வரும் ஒரு ஐடி நிறுவனமாகும். இது மிகப்பெரிய தரவு, அனலிடிக்ஸ், கிளவுட் சேவை, மொபைலிட்டி, பாதுகாப்பு உள்ளிட்ட திறன்களையும் கொண்டுள்ளது.
பங்கு வெளியீட்டு நிலவரம்
இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் 2020ல் தனது பங்கு வெளியீட்டினை செய்தது. அப்போது 165 - 166 ரூபாய் என்ற விலையிலேயே பங்குகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட போதே 111% பிரீமிய விலையில் பட்டியலிடப்ப நிலையில் பி.எஸ்.இயில் 351 ரூபாயாக தொடங்கியது. இதே என்.எஸ்.யில் 350 ரூபாயாகவும் தொடங்கியது.
இன்றைய விலை நிலவரம்
தற்போது 2.08 மணி நிலவரப்படி பி.எஸ்.இயில் இப்பங்கின் விலையானது 0.55% குறைந்து, 1153.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1176.75 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 1150 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1580.80 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 510 ரூபாயாகும்.
இதே என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 0.40% குறைந்து, 1154.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1177.25 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 1150 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1580 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 510 ரூபாயாகும்.
More From GoodReturns

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications