அதானி குழுமத்தினை சேர்ந்த நிறுவனங்கள் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 4 நாட்களில் 1.70 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்திய பங்கு சந்தைகள் கடந்த சில வர்த்தக தினங்களாகவே சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதானி வில்மர், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலையானது சரிவினைக் கண்டுள்ளது.
அதானி வில்மரின் பங்கு விலையானது 7% குறைந்து, 512.65 ரூபாயாக காணப்பட்டது. இது சந்தையில் தொடர்ந்து செல்லிங் அழுத்தம் இருந்து வரும் நிலையில், கடந்த 4 அமர்வுகளில் இப்பங்கின் விலையானது 18.53% சரிவினைக் கண்டுள்ளது. இதே 4 நாள் சரிவில் பி எஸ் இ சென்செக்ஸ் 1630 புள்ளிகள் அல்லது 2.65% சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கும் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது எனலாம்.
அதானி பவர்
அதானி பவர் பங்கு விலையானது கடந்த அமர்வில் 5% குறைந்து, 262.65 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது. இதே கடந்த டிசம்பர் 19ல் இருந்து பார்க்கும்போது 14.23% சரிவில் காணப்படுகிறது. இதன் முந்தைய முடிவு விலையானது 305.75 ரூபாயாகவும் காணப்பட்டது.
அதானி டிரான்ஸ்மிஷன்
அதானி டிரான்ஸ்மிஷன் பங்கின் விலையானது 6.82% அல்லது 2345.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. கடந்த 4 அமர்வுகளில் 12.5% சரிவினைக் கண்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 4% குறைந்து, 3719 ரூபாயாக காணப்பட்டது. இதே கடந்த 4 அமர்வுகளில் 8.6% சரிவினைக் கண்டுள்ளது.
அதானி கீரின் எனர்ஜி & போர்ட்ஸ்
அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனமானது, கடந்த 4 அமர்வுகளில் 8 - 9% சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 3% மேலாக ஏற்றம் கண்டுள்ளது.
அதானி குழும நிறுவனங்கள்
அதானி குழுமத்தினை சேர்ந்த 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 17.04 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது9.41% சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 19 அன்று 18.81 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மட்டும் 40,000 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தினை தொடர்ந்து அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 36,521.23 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி டோட்டல் கேஸின் சந்தை மதிப்பு 27,533.75 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டும், இதே அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 24,528.75 கோடி ரூபாயாகவும் சரிவினைக் கண்டுள்ளது.
எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு ஏற்றம்?
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 115% ஏற்றம் கண்டும், அதானி வில்மரின் பங்கு விலையானது 92%மும், அதானி டோட்டல் கேஸின் பங்கு விலையானது, 90%மும், அதானி கிரீன் எனர்ஜியின் பங்கு விலையானது 39%மும், அதானி டிரான்ஸ்மிஷன் 36%மும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 9% ஏற்றம் கண்டும் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications