இந்திய பங்குச்சந்தையில் 116 ஈக்குவிட்டி சார்ந்த ஹைப்ரிட் பண்டுகள் உள்ளன. இதில் 90 திட்டங்கள் இரட்டை இலக்க வருவாயைத் தருகின்றன. அக்ரசிவ் ஹைப்ரிட் ஃபண்டுகள் உங்கள் பணத்தில் 65-80 சதவீதத்தை ஈக்விட்டி பங்குகளிலும் மீதியை பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன.
உங்களின் எல்லாப் பணத்தையும் பங்குகளில் முதலீடு செய்யும் பியூர் ஈக்விட்டி ஃபண்டுகளை விட அவற்றின் வருமானம் சற்றே குறைவாக இருக்கும். ஆனால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையும் போது அவை ஒப்பீட்டளவில் குறைவாகவே வீழும்.

இது கன்சர்வேடிவ் ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கு அல்லது ஏற்ற தாழ்வுகளுக்குப் பழக்கமில்லாத முதல் முறை ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. 2024 நிதியாண்டில் 35 சதவீதத்துக்கும் மேல் வருவாயை தந்த 7 ஹைப்ரிட் மியூச்சுவல் பண்டுகளை இங்கு பார்க்கலாம்.
1. ஜேஎம் அக்ரசிவ் ஹைப்ரிட் பண்டு: ஜேஎம் அக்ரசிவ் ஹைப்ரிட் பண்டு நிலையான தற்போதைய வருமானம், கடன், சமபங்கு ஆகியவற்றின் சமநிலையான போர்ட்ஃபோலியோவிலிருந்து மூலதனத்தின் நீண்ட கால வளர்ச்சியை அடையும் நோக்கத்தில் செயல்படுகிறது.
இந்த அக்ரசிவ் ஹைப்ரிட் பண்டு 48.98 சதவீத வருவாயை 2024 நிதியாண்டில் வருவாயைத் தந்து முதலிடத்தில் உள்ளது.
இந்த திட்டம் கிரிசில் ஹைப்ரிட் 35+65 - அக்ரசிவ் இண்டக்ஸ், 27.27 சதவீத வருவாயை 2024 நிதியாண்டில் தந்தது.
2. பேங்க் ஆப் இந்தியா மிட் அண்டு ஸ்மால் கேப் ஈக்குவிட்டி அண்ட் டெப்ட் பண்டு: பேங்க் ஆப் இந்தியா மிட் அண்டு ஸ்மால் கேப் ஈக்குவிட்டி அண்ட் டெப்ட் பண்டு நிதியானது உள்நாட்டு பங்குகளில் 71.26% முதலீட்டைக் கொண்டுள்ளது. அதில் 5.86% பெரிய கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 27.12% மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 26.39% ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிதியானது 24.79% கடனில் முதலீடு செய்துள்ளது, இதில் 6.08% அரசுப் பத்திரங்களில் உள்ளது. , 18.71% குறைந்த ஆபத்துள்ள பத்திரங்களில் உள்ளது. இந்த திட்டம் 46.02 சதவீத வருவாயை 2024 நிதியாண்டில் தந்துள்ளது. இது நிப்டி மிட் ஸ்மால் கேப் 400 - டிஆர்ஐயுடன் பெஞ்ச்மார்க் செய்யப்பட்டு 59.75 சதவீதத்தை அதே காலகட்டத்தில் தந்தது.
3. குவான்ட் மல்டி அசட் பண்டு: குவான்ட் மல்டி அசட் பண்டு
திட்டம், ஈக்குவிட்டி, டெப்ட், கம்மாடிட்டி ஆகிய மூன்று அசட் வகைகளில் முதலீடு செய்வதன் மூலம் வருமானம் மற்றும் மூலதனத்தை உருவாக்குகிறது. இந்த மல்டி அசட் அலோகேஷன் பண்டு 43.48 சதவீத வருவாயை 2024 நிதியாண்டில் தந்தது. கிரிசில் ஷார்ட் டெர்ம் பாண்ட் இண்டக்ஸுடன் பெஞ்சுமார்க் செய்யப்பட்டு 7.61 சதவீதத்தை தந்தது.
4. ஐசிஐசிஐ ப்ரு ஈக்குவிட்டி அண்டு டெப்ட் பண்டு: ஐசிஐசிஐ ப்ரு ஈக்குவிட்டி அண்டு டெப்ட் பண்டு நிதியானது உள்நாட்டுப் பங்குகளில் 71.5% முதலீட்டைக் கொண்டுள்ளது. அதில் 53.71% பெரிய கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 7.37% மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 1.85% ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியானது 20.29% கடனில் முதலீடு செய்துள்ளது, இதில் 12.08% அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. , 7.08% குறைந்த ஆபத்துள்ள பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.இந்தத் திட்டம் 41.11 சதவீத வருவாயை 2024 நிதியாண்டில் தந்தது. கிரிசில் ஹைப்ரிட் 35+65 - அக்ரசிவ் இண்டக்ஸுடன் பெஞ்ச்மார்க் செய்யப்பட்டு 27.27 சதவீதத்தை தந்தது.
5. யூடிஐ மல்டி அசட் அலோகேஷன் பண்டு: யூடிஐ மல்டி அசட் அலோகேஷன் பண்டு ஈக்விட்டியில் முதலீடு செய்யும் ஓபன்-எண்டட் ஈக்விட்டி திட்டம் ஆகும். நீண்ட கால செல்வத்தை உருவாக்க, நிலையான வருமானம் ஈட்டுவதற்கு இடர் இல்லாத வருவாயை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த மல்டி அசட் அலோகேஷன் பண்டு 39.73 சதவீதத்தை 2024 நிதியாண்டில் வருவாயாகத் தந்தது. எஸ் அண்டு பி பிஎஸ்இ 200 டயர் 2 பெஞ்ச்மார்க் செய்யப்பட்ட இந்த திட்டம் 36.69 சதவீதத்தை தந்தது.
6. எச்டிஎப்சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டு: எச்டிஎப்சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டு நிதியானது உள்நாட்டு பங்குகளில் 66.83% முதலீட்டைக் கொண்டுள்ளது. அதில் 42.43% பெரிய கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 6.58% மிட் கேப் பங்குகளில் உள்ளது. 7.82% ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியானது 26.42% கடனில் முதலீடு முதலீடு செய்யப்பட்டு செய்துள்ளது, இதில் 14.79% அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. , 11.19% குறைந்த ஆபத்துள்ள பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் 39.65 சதவீத வருவாயை 2024 நிதியாண்டில் அளித்தது. நிப்டி 50 - டிஆர்ஐ உடன் பெஞ்சுமார்க் செய்யப்பட்டு 30.08 சதவீதத்தை அளித்தது.
7. குவான்ட் அப்சல்யூட் பண்டு: குவான்ட் அப்சல்யூட் பண்டு நிதியானது உள்நாட்டுப் பங்குகளில் 62.32% முதலீட்டைக் கொண்டுள்ளது. அதில் 25.4% பெரிய கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 15.03% மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 3.89% ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியானது 22.03% கடனில் முதலீடு செய்யப்பட்டுள்ளது, இதில் 19.26% அரசுப் பத்திரங்களில் உள்ளது. , 2.77% குறைந்த ஆபத்துள்ள பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
Story written by: I.jayachandran
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications