டெல்லி: இந்திய பங்கு சந்தையானது கடந்த சில அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த போக்கு இனி வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் கடந்த வாரத்தில் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 2,16,092,54 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது.
இந்த இழப்பீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மோசமான சரிவினைக் கண்டுள்ளது. கடந்த வாரத்தில் இதன் சந்தை மூலதனம் 71,003.2 கோடி ரூபாய் அளவுக்கு சரிவினைக் கண்டு, 15,81,61.11 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இதே எஸ்பிஐ வங்கியின் சந்தை மூலதனம் 46,318.73 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 4,82,107.53 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
இதே நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு 36,836.03 கோடி ரூபாய் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பு, 24,899.93 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 9,01,287.61 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பார்தி ஏர்டெல்
நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல்லின் சந்தை மதிப்பு, 23,747.55 கோடி ரூபாய் குறைந்து, 4,31,583.22 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
இதே ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மதிப்பு 10,257.28 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 4,85,809.79 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 3029.82 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 6,38,891.87 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இதே டிசிஎஸ் நிறுவனம் அதன் சந்தை மதிப்பினை 17,837 கோடி ரூபாய் அதிகரித்து, 12,47,882.88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 14,931.65 கோடி ரூபாய் அதிகரித்து, 6,13,689.74 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 13,591.48 கோடி ரூபாயாக அதிகரித்து, 4,29,031.46 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
டாப் 10 நிறுவனங்கள்
டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவல் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஏர்டெல் மற்றும் ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications