இந்தியாவின் முதன்மை சந்தைகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட மந்தநிலைக்குப் பிறகு, தற்போது மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பங்குச் சந்தை மீட்பு நிலைக்கு திரும்பியதால், முதலீட்டாளர்களின் ஆர்வம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், முதன்மை சந்தையை மீண்டும் நோக்கி நகர்கின்றன. மூலதனச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, சமீபத்தில் 15 நிறுவனங்கள் மூலதனச் சந்தைகளில் முதலீடு செய்ய வழிவகை செய்துள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த IPO-க்களின் மதிப்பு ரூ.37,000 கோடியாகும்.
அங்கீகரிக்கப்பட்ட IPO-களில், ஹீரோ ஃபின்கார்ப், ஹெச்.டி.பி. ஃபைனான்சியல் மற்றும் கிரெடிலா ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகியவை சில முக்கிய பெயர்களாகத் தனித்து நிற்கின்றன. அதேபோல், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பிரிவான HDB ஃபைனான்சியல், ரூ.12,500 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. HDB ஃபைனான்சியல் நிறுவனத்தின் ரூ.12,500 கோடியும், ரூ.2,500 கோடி மதிப்பிலான புதிய வெளியீட்டையும், தாய் நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சியின் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான விற்பனை சலுகையையும் உள்ளடக்கியது.

கடந்த அக்டோபர் 2022ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி, ஹெச்.டி.பி. ஃபைனான்சியல் சர்வீசஸ், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் "Upper Layer" பிரிவின் கீழ் வருகிறது. இந்தப் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து NBFC-களும் இந்தாண்டு செப்டம்பருக்கும் பட்டியலிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ் கேபிட்டலின் ஆதரவுடன், ஹீரோ ஃபின்கார்ப் நிறுவனத்தின் ரூ.3,668 கோடி மதிப்புள்ள ஐபிஓவை வெளியிட செபியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
இந்த பொதுச்சலுகை ரூ.2,100 மதிப்புள்ள புதிய பங்கு பங்குகள் வெளியீடு மற்றும் முதலீட்டாளர்களால் ₹1,568 கோடி மதிப்புள்ள OFS கூறு ஆகியவற்றின் கலவையாகும். விக்ரம் சோலார் நிறுவனம் தனது ஐபிஓவைத் தொடர செபியிடம் ஒப்புதல் வாங்கியுள்ளது. இதில், ரூ.1,500 கோடி வரையிலான புதிய பங்குகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விளம்பரதாரர்களால் ரூ.1.7 கோடி வரையிலான பங்குகளை விற்பனை செய்யவும் முடிவு செய்திருக்கிறது.
அதேபோல், LG எலக்ட்ரானிக்ஸ் இப்போது அதன் இந்திய பிரிவின் ஐபிஓவை மே மாதத்திற்குப் பதிலாக 2026ஆம் நிதியாண்டின் 2-வது அல்லது 3-வது காலாண்டில் தொடங்க உள்ளது. பிரிகேட் ஹோட்டல் வென்ச்சர்ஸ் கடந்தாண்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் அதன் ஐபிஓ ஆவணங்களை தாக்கல் செய்தது. இந்த ரூ.900 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளை வெளியிட்டது. NSDL நிறுவனம், அதன் ஐபிஓவுக்காக DRHP-க்கு ஒரு கூடுதல் இணைப்பை SEBI-யிடம் தாக்கல் செய்தது. அதே நேரத்தில் வெளியீட்டு அளவை முன்பு அறிவித்தபடி, 5.7 கோடி பங்குகளில் இருந்து 5 கோடியாகக் குறைத்தது.
பிரைம் டேட்டாபேஸின் கூற்றுப்படி, தற்போது மொத்தம் 72 நிறுவனங்கள் ஏற்கனவே ஐபிஓக்களுக்கான செபி அனுமதியைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்புதல்கள் ரூ.1.4 லட்சம் கோடி நிதி திரட்டும் திறனைக் குறிக்கிறது. கூடுதலாக 68 நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. நிலுவையில் உள்ள ஐபிஓக்கள் மொத்தமாக ரூ.94,000 கோடி திரட்டக்கூடும். மொத்தத்தில், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள 140 நிறுவனங்கள், விரைவில் இந்தியாவின் முதன்மை சந்தைகள் மூலம் ரூ.2.35 லட்சம் கோடி திரட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications