கடந்த அக்டோபர் 2019 அன்று தான் சென்செக்ஸ் கடைசியாக 38,000 புள்ளிகளுக்கு கீழ் நிறைவடைந்தது.
அதற்குப் பின், இன்று தான் சென்செக்ஸ் 38,000 என்கிற வலுவான சப்போர்ட் புள்ளிகளை உடைத்துக் கொண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
அவ்வளவு ஏன், இன்று வர்த்தகத்தில் சென்செக்ஸ் தன் குறைந்தபட்ச புள்ளியாக 37,011 புள்ளிகளைத் தொட்டது கூட ஒரு முறை நினைவு கூறத்தக்கது. ஆக 37,000 புள்ளிகள் கூட ஒரு நல்ல வலுவான சப்போர்ட் புள்ளியாக இருக்காது என்றே தோன்றுகிறது.
ஐரோப்பிய சந்தைகள்
லண்டனின் எஃப் டி எஸ் இ 2.86 % சரிவு, பிரான்ஸின் சி ஏ சி 3.59 % சரிவு, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 3.36 % சரிவு என ஐரோப்பிய சந்தைகள் எல்லாமே சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அவர்களே சரியும் போது ஆசிய சந்தைகளும் சரியத் தானே செய்யும்.
ஆசிய சந்தைகள்
இன்றைய வர்த்தகத்தில் அதிகம் சரிந்த ஆசியச் சந்தை சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி தான். 2.93 % சரிந்து இருக்கிறது. மிகக் குறைவாக சரிந்த சந்தை என்றால், அது சீனாவின் ஷாங்காய் காம்போஸைட் தான் 1.21 % சரிந்து இருக்கிறது. ஆக ஆசிய சந்தைகளும், ஐரோப்பிய சந்தைகளுக்கு நிகரான சரிவைச் சந்தித்து இருக்கின்றன. இந்தியாவின் சென்செக்ஸ் 2.32 % சரிந்து இருக்கிறது.
காரணங்கள்
கொரோனா வைரஸ் பரவல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73.8-த் தொட்டு வர்த்தகமாவது, யெஸ் பேங்கில் இருந்து பணம் எடுக்கும் அளவை மத்திய அரசு குறைத்து இருப்பது என பல காரணங்கள் ஒன்றாக சேர்ந்து இன்றைய சந்தையை புரட்டி எடுத்து இருக்கிறது.
சென்செக்ஸ் விவரம்
நேற்று மாலை சென்செக்ஸ் 38,470 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,613 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ். இன்றைக்கு குறைந்தபட்சமாக 37,011 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. இப்போது சுமாராக 37,576 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 893 புள்ளிகள் சரிந்து இருக்கிறது சென்செக்ஸ்.
பங்குகள் விவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 03 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,574 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 528 ஏற்றத்திலும், 1,917 பங்குகள் இறக்கத்திலும், 129 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமான ஒட்டு மொத்த 2,574 பங்குகளில், 24 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 607 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாயின.
ஏற்ற இறக்கம்
மாருதி சுசூகி இந்தியா, பஜாஜ் ஆட்டோ இந்தியா, கெயில் இந்தியா, ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட், டாடா ஸ்டீல், எஸ் பி ஐ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications