ஒரே வருடத்தில் உச்சம் தொடப்போகும் வங்கி பங்குகள்.. எந்த வங்கியில் அதிக லாபம் கிடைக்கும் தெரியுமா?!

பங்குச் சந்தையில் லார்ஜ் கேப் வகையை சேர்ந்த தனியார் துறை பங்குகள் சமீபத்தில் கடுமையான விற்பனை அழுத்தத்தை எதிர்கொண்டதால் அதன் பங்குகள் சரிந்தன. பொதுத்துறை வங்கிப் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டதாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்ததாலும் தனியார் வங்கிப் பங்குகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

செப்டம்பர் மாத பணவீக்கம், RBI வட்டி விகிதக் குறைப்பு அறிவிக்கப்பட்ட கட்டணக் குறைப்பு ஆகியவை குறுகிய காலத்தில் வங்கிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், காலாண்டு வருவாய் சீசனிலும் வங்கிகளிடமிருந்து சிறந்த முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. வங்கிகளின் வராக்கடன்கள், நிகரக் கடன்களும் குறைந்து வருவது பொதுத்துறை வங்கிகளுக்கு ஒரு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது.

ஒரே வருடத்தில் உச்சம் தொடப்போகும் வங்கி பங்குகள்.. எந்த வங்கியில் அதிக லாபம் கிடைக்கும் தெரியுமா?!

வங்கிப் பங்குகளில் உள்ள அபாயத்தைக் குறைக்க, உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஸ்மால் கேப் மற்றும் லார்ஜ் கேப் வங்கிப் பங்குகளைச் சேர்க்க சந்தை ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில், அடுத்த 12 மாதங்களில் 56 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ள 8 வங்கிப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

DCB வங்கி: 19 ஆய்வாளர்கள் அடுத்த 12 மாதங்களில் டிசிபி வங்கியின் பங்கு விலை 55.9 சதவீதம் உயரக்கூடும் என்று கணித்துள்ளனர். ஸ்மால் கேப் வகையைச் சேர்ந்த இந்த நிறுவனம் வாங்குதல் மதிப்பை கொண்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ. 3,600 கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 114ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. 52 வார அதிகபட்ச விலை ரூ.163 ஆகும்

கர்நாடக வங்கி: கர்நாடகா வங்கி பங்கு விலை அடுத்த ஆண்டில் 55.7 சதவீதம் உயரக்கூடும் என்று 4 ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த பங்குகளை வாங்கவும் அவர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த நிறுவனம் மிட் கேப் வகையைச் சேர்ந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ. 8,480 கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 224-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. 52 வார அதிகபட்ச விலை ரூ.286 ஆகும்.

CSB வங்கி: சிஎஸ்பி வங்கி பங்கு விலை ஒரு வருடத்தில் 53.4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று 3 ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த பங்கிலும் வாங்கும் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மிட் கேப் வகையைச் சேர்ந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ. 5,170 கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 306-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. 52 வார அதிகபட்ச விலை ரூ. 422 ஆகும்.

கனரா வங்கி: 15 ஆய்வாளர்கள் கனரா வங்கி லிமிடெட் பங்கு விலை ஒரு வருடத்தில் 38.9% அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர். இந்த பங்குகளுக்கு வாங்குதல் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். இந்த லார்ஜ் கேப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 94,330 கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 104ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதன் 52 வார அதிகபட்ச விலை ரூ.129 ஆகும்.

பேங்க் ஆஃப் பரோடா: 30 ஆய்வாளர்கள் பேங்க் ஆப் பரோடாவின் பங்குகள் அடுத்த 12 மாதங்களில் 35.3 சதவீதம் வரை உயரும் என்று கணித்துள்ளனர். இந்த பங்குகளுக்கு வாங்கும் மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். இந்த லார்ஜ் கேப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1.26 லட்சம் கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 244-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. 52 வார அதிகபட்ச விலை ரூ. 299 ஆகும்.

கரூர் வைஸ்யா வங்கி: 12 ஆய்வாளர்கள் கரூர் வைஸ்யா வங்கி பங்குகள் இந்த ஆண்டு 35.3% உயரக்கூடும் என்று கணித்துள்ளனர். வலுவான வாங்குதல் மதிப்பீட்டையும் கொடுத்துள்ளனர். இந்த நிறுவனம் மிட் கேப் வகையைச் சேர்ந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ. 16,150 கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 200க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

சிட்டி யூனியன் வங்கி: சிட்டி யூனியன் வங்கி பங்குகள் விரைவில் 29 சதவீதம் உயரும் என்று 20 ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த பங்குகளுக்கு வாங்குதல் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். இந்த நிறுவனம் மிட் கேப் வகையைச் சேர்ந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ. 11,440 கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 154-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. 52 வார அதிகபட்ச விலை ரூ. இது 176 ஆகும்.

ஐசிஐசிஐ வங்கி: அடுத்த 12 மாதங்களில் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் 28.2 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று 39 ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதற்கு ஆய்வாளர்கள் வாங்குதல் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். இந்த லார்ஜ் கேப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 8.80 லட்சம் கோடி ஆகும். தற்போது பங்கின் விலை ரூ. 1,248-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+