ரிலையன்ஸுக்கு இது போறாத காலம்.. 8 நிறுவனங்களின் மதிப்பு ஒரு வாரத்தில் ரூ.1.18 லட்சம் கோடி அதிகரிப்பு

இந்திய பங்கு சந்தைகள் முந்தைய இரண்டு வாரங்களாகவே பலத்த சரிவினைக் கண்டு வந்த நிலையில், கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தினை கண்டது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது.

இதற்கிடையில் அதிக மதிப்புடைய 10ல் 8 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது 1,18,930.01 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

எனினும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கிகளின் சந்தை மூலதனமானது சரிவினைக் கண்டுள்ளது.

Array

Array

கடந்த வாரத்தில் சந்தையானது ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடானது 1.28% அதிகரித்து அல்லது 760.69 புள்ளிகள் அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் 4 அன்று முகூர்த் வர்த்தகம் தினமாகும். நவம்பர் 5 அன்று பாலிபிரதிபடா என்பதால் பங்கு சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், 40,782.04 கோடி ரூபாய் அதிகரித்து, 12,98,015.62 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில், 16.40 ரூபாய் அதிகரித்து, 3,508.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

எஸ்பிஐ -யின் சந்தை மதிப்பு

எஸ்பிஐ -யின் சந்தை மதிப்பு

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யின் சந்தை மூலதனம், 25,033.54 கோடி ரூபாய் அதிகரித்து, 4,73,406.02 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த அமர்வில் எஸ்பிஐ-யின் பங்கு விலையானது, சற்று அதிகரித்து, 530.45 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு

ஐடி துறையில் மற்றொரு முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், 17,158.49 கோடி ரூபாய் அதிகரித்து, 7,18,890.08 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 1,708.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ் சந்தை மதிப்பு

பஜாஜ் பைனான்ஸ் சந்தை மதிப்பு

தனியார் வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 7,502.68 கோடி ரூபாய் அதிகரித்து, 4,54,304.34 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்த பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 7,525.10 ரூபாயாக உள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 6,978.29 கோடி ரூபாய் அதிகரித்து, 8,82,981.83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 2,422.85 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.

கோடக் மகேந்திரா வங்கி

கோடக் மகேந்திரா வங்கி

கோடக் மகேந்திரா வங்கி சந்தை மூலதனம் 4,868.48 கோடி ரூபாய் அதிகரித்து, 4,07,881.48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 2,057 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.

டாப் லூசராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டாப் லூசராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் டாப் லூசராக உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 24,612.17 கோடி ரூபாய் குறைந்து, 15,85,074.58 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் கடந்த அமர்வில் மட்டும், இதன் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 2,498.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனமானது, 13,680.32 கோடி ரூபாய் குறைந்து, 5,42,827.39 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையும் கடந்த அமர்வில், சற்று குறைந்து, 782.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

டாப் 10 பட்டியல்

டாப் 10 பட்டியல்

அதுவும் சந்தை மதிப்புடைய நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ரிலையன்சை தொடர்ந்து இரண்டாவதாக டிசிஎஸ் நிறுவனமும், மூன்றாவதாக ஹெச்டிஎஃப்சி நிறுவனமும், இதனை தொடர்ந்து இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்டவை அடங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+