பட்ஜெட் வந்தாச்சு.. 45 சதவீதம் வரை லாபம் தரப்போகும் 8 பங்குகள்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நுகர்வை அதிகரிப்பில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்துவதை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் பயனடைய வாய்ப்புள்ள மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளை பஜாஜ் புரோக்கிங் உள்ளிட்ட பங்கு தரகு நிறுவனங்கள் அடையாளம் கண்டுள்ளன. பட்ஜெட்டுக்கு பிந்தைய காலத்தில் நல்ல ஆதாயம் தர வாய்ப்புள்ள 8 நிறுவன பங்குகளை முதலீட்டாளர்களுக்கு பங்கு தரகு நிறுவனங்கள் பரிந்ரை செய்துள்ளன. அவை இதோ:

எக்சைடு இண்டஸ்ட்ரீஸ்

நாட்டின் முன்னிண வாகன பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று எக்சைடு இண்டஸ்ட்ரீஸ். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.378ஆக இருந்தது. இப்பங்கின் விலை வரும் நாட்களில் 20 சதவீதம் வரை உயர சாத்தியம் உள்ளது என்று பஜாஜ் புரோக்கிங் கணித்துள்ளது. மேலும், இப்பங்கின் இலக்கு விலை ரூ.448 என நிர்ணயம் செய்துள்ளது.

பட்ஜெட் வந்தாச்சு..  45 சதவீதம் வரை லாபம் தரப்போகும் 8 பங்குகள்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

பிரிகேட் என்டர்பிரைசஸ்

ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த பிரிகேட் என்டர்பிரைசஸ் பங்கின் விலை 15 சதவீதம் உயரும் என்றும் இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,335 எனவும் எஸ்பிஐ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.1,162.10ஆக இருந்தது.

கிராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ்

நுகர்வோர் சாதனங்கள் துறையை சேர்ந்த நிறுவனம் கிராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ். நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.368.95ஆக இருந்தது. இப்பங்கின் விலை 45 சதவீதம் வரை உயரும் மற்றும் இப்பங்கின் இலக்கு விலையாக ரூ.536ஐ பிஎல் கேப்பிடல் குறிப்பிட்டுள்ளது.

ஹெவல்ஸ் இந்தியா

நுகர்வோர் எலக்ட்ரிக் சாதனங்களில் தயாரிப்பில் ஹேவல்ஸ் இந்தியா ஈடுபட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்தத்கத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.1,659.55ஆக இருந்தது. வரும் நாட்களில் இப்பங்கு 14 சதவீதம் ஆதாயம் தர வாய்ப்புள்ளது என்றும் இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,890 எனவும் பிஎல் கேப்பிடல் கணித்துள்ளது.

கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ் இந்தியா

நம் நாட்டில் ஐஓடி சொல்யூஷன்ஸ் சார்ந்த ஒருங்கிணைந்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனம். நேற்று பங்கு வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.4,602.85ஆக இருந்தது. இப்பங்கின் விலை 20 சதவீதம் உயரும், இப்பங்கின் இலக்கு விலை ரூ.5,528 என பிஎல் கேப்பிடல் தெரிவித்துள்ளது.

சிர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜி

சிர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜி நிறுவனம் பிரிண்டட் சர்க்யூட் அசெம்பிளி (எலக்டரானிக் அசெம்பிளி) உற்பத்தி நிறுவனமாகும். மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.554.90ஆக இருந்தது. இப்பங்கின் விலை 13 சதவீதம் அதிகரிக்கும் என்றும் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.629 என்றும் பிஎல் கேப்பிடல் மதிப்பிட்டுள்ளது.

லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ்

ஹோட்டல்ஸ் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் நிறுவனம். மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.143.70ஆக இருந்தது. இப்பங்கின் விலை 24 சதவீதம் உயர வாய்ப்புள்ளது என்றும், இப்பங்கின் இலக்கு விலை ரூ.179 என்றும் பிஎல் கேப்பிடல் தெரிவித்துள்ளது.

சாலெட் ஹோட்டல்ஸ்

ஹோட்டல் மற்றும் ரிசார்ட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது சாலெட் ஹோட்டல்ஸ் நிறுவனம். மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது இப்பங்கின் விலை ரூ.800.80ஆக இருந்தது. இப்பங்கின் விலை 33 சதவீதம் உயரும் எனவும், இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,064 என்றும் பிஎல் கேப்பிடல் கணித்துள்ளது.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+